ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.
இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது.
இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். ''அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்'' அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவனை உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண் பட்டு சரியாக நிமிந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண் பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன்.
சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று, '' நான் இடிக்கட்டா '' எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள் - நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை.
Friday, October 31, 2008
தக்க நேரத்தில்... அறிவரசன்
Posted by defencetamil at 5:28 AM 0 comments
Labels: வீரவரலாறு
என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது
18.04.1995
என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது.
ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள் இல்லாது எம் தமிழீழத்தை வென்று எடுக்க முடியாது என்பதை நீ படித்திருப்பாய்.
மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டு விலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும்.
இப்படிக்கு,
தணிகைமாறன்,
(அன்ரன் பெனடிற்).
Posted by defencetamil at 5:27 AM 0 comments
Labels: வீரவரலாறு
டாக்கியினுள் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன்
அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவிவிட, எம்மிடம் அடிவேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின்வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டு;ம் முயன்றனர்.
20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.
எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாகவிருந்தது.
எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின.
முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.
எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.
நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்துவிட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.
எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.
எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கிவிடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவையாகிவிடும்.
இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப்படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது. எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகிவிட்டன.
அவற்றை எப்படி எதிரியிடம் விடமுடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.
தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.
காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தேயிருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.
அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.
எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் „ ஓயாத அலைகள் " சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.
Posted by defencetamil at 5:26 AM 0 comments
Labels: வீரவரலாறு
ஒரு கரும்புலி வீரனின் உட்கிடக்கை
திகதி
தமிழீழம்.
என் இனிய மக்களே....
எமது மூதாதைகளான பண்டாரவன்னியன், சங்கிலியம், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராயும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
இவ்வண்ணம்,
போராளி
செழியன்
Posted by defencetamil at 5:25 AM 0 comments
Labels: வீரவரலாறு
இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் எங்கள் மீது செல் அடியுங்கோ
மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது.
கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களையெல்லாம் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது.
இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகளையும் ஏனைய வெடிபொருட்களையும் பெறுவது கடினமாக இருந்தது. புலிகளின் அணிகள் தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக்கொண்டே கடந்த இரண்டு நாட் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய
இராணுவத்தை முறியடித்து வெற்றிபெற்றிருந்தன.
அதிகாலையில் தொடங்கிய அன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப் பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் கோரமான எறிகணை வீச்சிற் சிதைந்துக் கொண்டிருந்தன.
எதிரி மிக வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னேவர பெருந்தொகையிற் படையினர் சூழ்ந்த யுத்தக் காடாக மாறியது அந்தக்களம்.
சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டுவிட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிகளுடாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்றுகொண்டிருந்தான்.
அவர்கள் விட வில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச்சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர்.பின்வாங்கத் தயாரில்லாத அவர்களை எதிரி சூழத் தொடங்கினர்.
பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர் தன்னிடமிருந்த ஒரேயொரு மு.இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தான் இயல்வாணன். இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதக் கடலென அவர்களைச் சூழ்ந்;து கொண்டது.
அவர்களுடனான தொலைத்தொடர்புகள் இறுதியாக அற்றுப்போனவுடன் கட்டளைப் பீடம் பரபரப்பானது.அது கைவிடமுடியாத ஒரு நிலை. இத்தாவிற் சமர்க்களத்தோடு மாத்திரம் தொடர்புடையதன்று.,ஆனையிறவை மீட்பதற்கான தலைவரது வியூகத்தின் தந்திரோபாய முடிச்சும் அது. அங்கே அமைக்கப்பட்டிருந்த வியூகத்தின் உயிர்நாடியும் அதுதான்.
இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்காமற் போனது. அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடத்துலுக்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே; அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர்.தொடர்ந்தும் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ்வொருவராய் வீழந்தனர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் இயல்வாணனின் மு. தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போதுதான் முற்றுகை;குள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அவலம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரகத் துப்பாக்கி - P.மு.ஆ.P.ஆ.பு.- இயங்குநிலை தடைப்பட்டு சுடமறுத்தது.
எல்லாத் திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்துவிட்டது.
இராணுவம் நெருங்கி வந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறி குண்டு வெடித்துச் சிதறியது. எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குட் கிடைத்த சிறிய தொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன்.
ஆனாலும் முடியவில்லை. மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.மிகவும் நெருக்கடியானதொரு நிலை. தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ்வொன்றாய் ரவையேற்றினான் தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடகளில் இராணுவத்தினர் அவனது நிலையின் முன் விழத்தொடங்கினர்.
எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தை தொடர்ந்தும் அவர்களால் தடுக்கமுடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப்பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப்பீடத்திற் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினராற் சூழப்படவிட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப்பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'' றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் "
'' எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. "
'' பிரச்சனையில்லை, எங்களை பார்க்காதையுங்கோ. நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ. "
யாருமே எதிர்பார்க்காத அவர்களின் உணர்வுகள் கட்டளைப்பீடத் தொலைத்தொடாபுக்கருவியில் ஒலித்துக்கொண்டிருந்தன. அவர்கள் இன்னமும் தோற்றுவிடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகள் எதிரியிடம் செல்லவிடவில்லை. எதிரியாற் கைப்பற்றப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட பிரதேசத்திலிருந்து அவாகள் தொடர்ந்தும் போரிடுகின்றனர்.
கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.
இராணுவம் அவர்களுடைய நிலைகளினுட் புகுந்தால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள்.
கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும் வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவாகளின் மனத்திடம், போரிடும் ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத் துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கின.
வீரனது தொலைத்தொடர்புச்சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனை சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.
இத்தாவிற் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன், இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவ சடலங்கள் கிடந்தன.
Posted by defencetamil at 5:23 AM 0 comments
Labels: வீரவரலாறு
Blog Archive
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)