Tuesday, December 30, 2008

தமிழ் மக்களின் காவலர்கள்



தரைப்புலி, வான்புலி, கடற்புலி,எனும் முப்படைகளும் கொண்டு ஒரு அரசாங்கத்துக்கு நிகராக 30 வருட காலமாக போர்புரிந்து வரும் ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள். தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையில் வழிகாட்டலில் பல வெற்றிப் பாதைகளைக் கடந்து வந்த ஒரு அமைப்பு.

இன்று தமிழின் என்ற ஒரு இனம் உலகில் இருக்கு என்றால் அதற்கு காரணம் இந்த அமைப்பே. தமிழர்களின் பிரதிநிதிகளான இந்த அமைப்பின் படைகளின் காட்சிகள்
















































































thamil kodan

Sunday, December 28, 2008

உள்ளிருந்து ஒருகுரல்


முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது.

அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும்.

அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர்.

முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணியிலிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது.

முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்' இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா.

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது.

"அண்ணன் சொன்ன வேதம்

என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

முயன்றிடு பாதைகள் எப்போதும்

திறக்கும் இல்லையேல்

அவைகள் மூடியே கிடக்கும் என்றார்

இன்னும் அதிகமுண்டு.

தூரமென்று ஏதுமில்லை

பாரம் என்ற சொல்லே இல்லை

ஏலாதென்றால் சேரும் தொல்லை

போராடென்றான் போராடென்றான்"

(நன்றி - பாடல் தமிழவள்)

வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும்.

------------------------------------------------

கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது.

முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை.

அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர்.

வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை.

நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார்.

செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர்.

தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன.

ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது.

நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா.

இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன.

மலைமகள்

Tuesday, December 23, 2008

போர் முகம்


"இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரிசைப்படுத்தினான்.

"நேரம் 5.10 மணிதான் இருக்கும். ஆமிக்காறங்களிட்ட விழுந்த எங்களின்ர பொசிசனுகளைப் பிடிக்கிறதுக்கு எங்களின்ர அணி போய்க்கொண்டிருந்தது. மூவிங் ரேஞ்சுக்குள்ளால் நாங்கள் நகர்ந்து ஆமிக்காறங்கள் நிக்கிற பொசிசனுக்குப் பக்கத்தில் போட்டம். போய் நிலமையளை வடிவாய் அவதானிச்சம். நாங்கள் நிக்கிற இடத்தில இருந்து இடது பக்கத்தில இருக்கிற ஆறு பொசிசனில ஆமிக்காறங்கள் ஏறீட்டாங்கள். இப்ப நாங்கள் அந்த ஆறு பொசிசனையும் ஆமிக்காறங்களிட்ட இருந்து அடிச்சுப் பிடிக்கவேணும். எல்லா றெடி. நாங்கள் தொடங்கிறதுதான் வேலை. ஆமிக்காறங்கள் நிக்கிற இடத்துக்குக் கிட்ட நெருங்கீட்டம் ஆர்.பீ.ஜி அடியோட சண்டையைத் தொடங்கிறதுதான் எங்களின்ர அணியின்ர திட்டம்" என்று கீரன் சொல்ல முறியடிப்பு அணிப் போராளிகள் எங்களைச் சூழ்ந்து விட்டார்கள். நாங்கள் அமைதியாக, அனைவரும் சிரிப்பும், கூத்துமாய் அன்றைய சண்டையின் வெற்றியை வெளிப்படுத்தினார்கள்.

போராளிகளின் கும்மாளங்களிற்குத் தாளம் போடுவதைப்போல தலையை அசைத்தபடியே முறியடிப்பு அணிப் போராளி கீரன் சிங்களப் படைகளைச் சுறுட்டிக்கட்டிய அந்தச் சமர்க்களத்தின் பதிவுகளை புரட்டிப்போட்டன். "எங்களின்ர அணியில ஆர்.பி.ஜி போய வந்த அறிவு எங்களின்ர முறியடிப்பு அணியளின்ர சார்பில் முதலாவதாய் மங்களத்தைத் தொடங்கினான். எங்களின்ர எதிர்ப்பை விடவும் ஆமிக்காறங்களுக்கும் எங்களுக்கும் இடையில பயங்கர சண்டை ஒண்டுமே தெரியல அந்தளவுக்கு புகையும் மருந்து மணமும்தான் இருந்தது. "என்றவன் அங்குமிங்கும் மூக்கை அசைத்தான் "நாங்கள் ஒருக்கால் ஆர்.பி.ஜி அடிக்க ஆமிக்காறங்கள் ஏழு எட்டுத் தரத்திற்குமேல ஆர்.பி.ஜியால போட்டு பொழிஞ்சுகொண்டிருந்தான்" என்று கீரன் சொல்ல ‘அப்ப அவன் அடிச்ச மற்றதுகளெல்லாம் என்ன மச்சான்" என்றான் ஆற்றலன். "டொங்கானுகள் பிகேயள் ஏகே எல்.எம்.ஜியள்" என்றவன் "இதுகளோட லோவுகளாலையும் குண்டுகளாலையும் போட்டு அந்தஇடத்தையே... பிறகென்ன எரிமலைதான்" என்றான் கீரன்.

முறியடிப்பு போராளிகளின் சண்டை அனுபவம் மிகவும் கடுமையானதாய் இருந்தது. இந்தளவுக்குள்ளையும் எப்படி தப்பிநின்றாங்களோ தெரியல்ல என்று மனசுக்குள் நினைத்து சற்று பயந்துகொண்டோம். எங்களது சிந்தனை தேவையற்றதுபோல "அண்ண ஆமிக்காறங்கள் எவ்வளவுதான் அடிச்சாலும் நாங்களும் விடேல்ல எங்களின்ர பொடியளும் எல்லாத்தையும் போட்டு முழுமையான எதிர்பையும் கொடுத்தம் ஆமிக்காறங்கள் அடிச்ச குண்டு ஒன்று எங்களுக்கு கிட்ட விழுந்திற்றுது.

அதில எங்களின்ர ஆர்.பி.ஜி அறிவு காயப்பட்டான். காயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. தசை பிஞ்சு தொங்கிக்கொண்டிருக்க, இரத்தம் பாயிறமாதிரி ஓடிச்சுது ஆனாலும் அறிவு ஓயமாட்டன் என்றிட்டான். ஆர்.பி.ஜி போட்ட செல்லை அடிச்சுப்போட்டு வாறன் என்ற நிற்கிறான். எங்களின்ர மெடிசின் காறன் விடேல்ல அறிவைப்பிடித்து மருந்தைக் கட்டிப்போட்டு பக்கத்தில இருந்த எங்களின்ர பொசிசனுக்குள்ள விட்டிட்டான்" என்ற கீரன் அருகிலிருந்து ஆற்றலனைப் பார்த்தான்.

அவ்வளவுதான் தனது பேச்சை நிறுத்திவிட்டான். "இப்பநிலமை மோசமாகிவிட்டது. ஆமிக்காறங்களின்ர கையோங்கிவிட்டது. ஆமிக்காறங்கள் நிக்கிற எங்களின்ர பொசிசனை அடிச்சுப்பிடிக்கிற திட்டத்தோட போனனாங்கள். கொஞ்சம் நெருக்கடியைச் சந்தித்தம். ஆமிக்காறங்களின்ர எதிர்ப்பும் கடுமையாய் இருந்தது. இந்த நிலைமையில் நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம்" என்றவனின் சிரித்த முகம் சடுதியாகவே இருண்டது. இப்ப எங்களின்ர அணியிலிருந்த வெண்மதியும் காயப்பட்டிற்றான்' என்ற கீரன் "அண்ண என்னதான் நடந்தாலும் எங்களின்ர நடவடிக்கையிலை கொஞ்சம்கூட தளம்ப மாட்டம். முடிஞ்சவரைக்கும் பாதுகாத்து குறிக்கப்பட்ட இலக்கை அழிப்பம். இல்லையென்றால் உயிரைக்கொடுத்து அந்தவெற்றியைச் சாதிப்பம்." என்றதுதான் எங்களின்ர அடிப்படையாய் இருந்தது.

"நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம். அடுத்த நிமிடம் எல்லாத்தையும் ஓழுங்குபடுத்திக்கொண்டு வெளிக்கிட்டிட்டம். இந்த ஒழுங்குபடுத்தலின்படி நான் ஆமிக்காறங்களின்ர பக்கத்தில் நல்லாய் நெருங்கிப்போய் குண்டை அடிக்க, ஆற்றலன் தன்ர பீ.கேயால ஆமிக்காறங்களிற்கு அடிக்க காவலன் தமிழ்க்குமரன், செந்திரையன், இசைமாறன், கார்நெஞ்சன் ஆக்கள் இவ்வளவுபேரும் தங்களின்ர எதிர்ப்புகளை சமநேரத்திலே கொடுக்கவேண்டும். இதுதான் திட்டம்" என்ற கீரன் பலமான சண்டைக் கட்டத்திற்குள் சென்றான்.

"நான் நிறையக்குண்டுகளோட மூவிரேஞ்சுக்குளால போய்க்கொண்டிருந்தன். இப்ப ஆமிக்காறங்களிட்ட இருந்து நாங்கள் அடிச்சுப்பிடிக்கவேண்டிய முதலாவது பொசிசனுக்கு கிட்டப்போட்டன் அந்த பொசிசனைச்சுற்றி எல்லாப் பக்கத்திலையும் ஆமிக்காறங்கள் நிக்கிறாங்கள். பண்டுக்குமேல எல்லாம் ஆமிக்காறங்கள் நிறையப்பேர் நிக்கிறாங்கள். ஆனால் குண்டுகளோட போய்க்கொண்டிருந்த என்னை ஆமிக்காறங்கள் காணவில்லை. இப்ப 15 மீற்றர் தூரத்தில ஆமிக்காறங்கள் இந்த முறை எப்படியென்றாலும் பொசிசனைப் பிடிச்சிடவேணும். இதைத்தான் என்ர மனசில இருக்கிற ஒரேயோரு நோக்கம். மூவிங்ரேஞ்சுக்குள்ள ஒரு இடத்தில நல்ல மறைப்பு. அதில குண்டுகளோட அப்படியே கவர் எடுத்திட்டன் அதில இருந்துகொண்டு நிலமையை அவதானித்தன். எல்லா இடங்களிலையும் ஆமிக்காறங்கள் மொச்சுப்போய் இருக்கிறாங்கள். இப்ப எந்தப் பக்கம் ஆருக்கு குண்டு அடிக்கிறது.? இதற்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தார்.

"கையில குண்டு கழற்றியபடியே இருந்தது என்ர கண்ணுக்கு ஆமிக்காறங்கள் எல்லாரும் தெரிந்தாங்கள் இப்ப குண்டு அடிக்கிறதுதான் என்ரநோக்கம் அடிக்கப்போகிற குண்டுக்குக் கிடைக்கிற பெறுமானம் பெரிதாய் இருக்கவேணும். அதுக்கான இரையைத் தேடிக்கொண்டிருந்தன் பொசிசனுக்குப் பக்கத்தில பண்டுக்குமேல ஆமிக்காறங்களின்ர பீ.கே.யும் ஆர்.பி.ஜியும் இருந்தது. இது என்ர கண்ணுக்கு பட்டதுதான் பிறகென்ன?" என்ற கீரன் சீரியசாய் கதைத்துக்கொண்டிருந்தான்.

"ஆர்.பி.ஜி காரனும் பிகே காரனும் ஒரே அடியாய் நிக்கிறாங்கள். அதுமட்டுமல்ல இன்னும் நாலைந்து ஆமிக்காறர்களும் ஒன்றாய் நிண்டாங்கள். அவங்கள் எங்களுக்கு அடிக்கிறதிற்கு தயாராய் நிக்கிறாங்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால், நாங்கள் எங்களின்ர நோக்கத்தை வேகமாய் அடைந்திடலாம். ஓரே அடியாய் இரண்டு குண்டுகளை எடுத்து சடசடவென அடிச்சன். அந்தளவுந்தான் இரண்டு குண்டும் பெரிய சத்தத்தோட வெடிச்சுது.

"அந்தக்குண்டுகள் வெடிச்சதோட மகே அம்மே எண்டு ஆமிக்காறங்கள் கத்தினாங்கள். அடுத்தது என்ன.? என்றது ஒன்றுமே தெரியேல்ல. எங்களின்ர ஆற்றலன் பீகேயால போட்டு பொளிஞ்சான். அதோட எங்களின்ர மற்றப்பொடியளும் கொடுத்தாங்கள். ஆமிக்காறங்களின்ர பீகே வரவே இல்லை, டொங்கான் மற்றது குண்டுகள் எல்லாத்தாலையும் போட்டுப் பொழிஞ்சுகொண்டிருந்தாங்கள். நாங்களும் விடேல்ல, வாழ்வா சாவ என்கிற கட்டத்தில நாங்கள் அடிபட்டம். கொஞ்சநேரம் அந்த இடம் குலுங்கிக்கொண்டிருந்தது" என்ற கீரன் வெற்றியின் வாசலில் நிற்கிறோம் என்பதாய் முகபாவனையைக் காட்டினான்.

"ஒரு பத்துநிமிடம் இந்தச்சண்டை நடந்திருக்கும். எங்களின்ர பொடியங்களின்ர அடியால ஆமிக்காறங்களிட்ட பொசிசன்களில ஒண்டு எங்களிட்ட விழுந்திட்டுது. எங்களிட்ட விழுந்த பொசிசனில லீடர் வெண்ணிலவண்ண நிண்டுகொண்டு எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினார். இப்ப நாங்கள் அடுத்த பொசிசனைப் பிடிப்பதற்கு போய்க்கொண்டிருந்தோம். ஆர்.பீ.ஜி அறிவு காயத்தோடையும் எங்களோட வந்துகொண்டிருந்தான். முதல் மாதிரியே நான் குண்டு அடிக்க அதற்குப் பின்னுக்கு எல்லா வெப்பனுகளும் நகர்ந்துகொண்டிருந்தது. அடுத்த பொசிசனையும் அடிச்சுப்பிடிச்சிட்டம். இதில எங்களுக்கு பெரிசாய் எதிர்ப்புக்கிடைக்கவில்லை.

இப்ப இதில இருந்து அடுத்த பொசிசனைப்பிடிக்க வேண்டும். நகர்ந்தம் முதல் எங்கையும் இல்லாதமாதிரி பயங்கர எதிர்புகளைச் சந்திக்கவேண்டியதாய் இருந்தது. என்ன எல்லாத்தையும் போட்டு அடிக்கமுடியுமே அத்தனையும் போட்டு எங்களிற்கு அடிக்கத்தொடங்கீற்றாங்கள் நாங்களும் விடாமல் சண்டைபிடிச்சம் இருந்தும் நிலமை எங்களுக்கு சாதகமாய் வரேல்ல" என்ற கீரன் பேச்சில் தளர்வு "ரவுண்ஸ் மாதிரி ஆர்.பிஜீசெல்லுகளை ஆமிக்காறங்கள் அடிச்சாங்கள் எப்படியும் இந்தப் பொசிசனைப் பிடிக்கிற என்கின்ற வேகத்தில நாங்கள் மூன்றுதரம் ரை பண்ணிப்பார்த்தம் எதுவும் சரிவரேல்ல. ஆனாலும் அந்தப் பொசிசனைப் பிடிப்பதற்காக சாதகமான நிலைமைகளைப் பிடிச்சிட்டம். இப்ப எங்களிட்ட இருந்த ரவுண்சுகளெல்லாம் முடிஞ்சுது அதுகள் நிரப்புவதற்காக வெண்ணிலவன் அண்ணேன்ர இடத்திற்கு வந்திட்டம், என்ற கீரனின் அடுத்தகட்ட சண்டையை மனதுக்குள் தாங்கி அவனது முகத்தையே பார்த்தபடி இருந்தோம்.

Sunday, December 21, 2008

உள்ளிருந்து ஒரு குரல்


2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர்.

தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக இருந்தது. இந்தக் கால அவகாசத்தைப் பெறுவதற்காகவும் வேலைசெய்து கொண்டிருக்கும் போராளிகள் மீது தாக்குதல் நடத்த வரும் எதிரியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் ஒரு அணி முன்னே ஊடுருவி தீக்கழிக்குச் சென்றது. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த போராளிகள் ஆறுபேரும் மாலதி படையணிப் போராளிகள் ஆறுபேரும் வேவு அணியில் நான்கு பேருமாகப் பதினாறு பேர் கொண்ட அந்த அணி மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுடனும் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களுடனும் நகர்ந்தது.

முன்னே மூன்று கிலோ மீற்றர்கள் நகர்வு. நகரும் இடமெங்கிருந்தும் அடி கிடைக்கும் என்ற காரணத்தால் விழிப்புடனேயே அனைவரும் சென்றனர். இவர்களுக்கான கட்டளையை வழங்குவதற்காக மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த ஜானும் உடன் சென்றார். போகுமிடமெல்லாம் படையினர் அவ்விடங்களில் நடமாடியதற்கான அடையாளங்கள் இருந்தன. காலணித்தடம், நெகிழப்பைகள், குருதித் தடுப்புப் பஞ்சணைகள், தீப்பெட்டி போன்ற இன்னபிற அங்கே காணப்பட்டன. சென்ற இடத்தை அவதானித்து இரண்டு நிலைகளைப் போட்டுக் காப்பில் ஈடுபட்டவாறே அவ்விரவைக் கழித்தனர். அடர்காடு, மையிருட்டு அடுத்தவரைத் தொடுகையின் மூலமின்றி இனங்காண முடியாத இருள். அந்த இரவு ஒருவாறு விடிந்துவிட்டது.


அடுத்த நாட்காலை வேவுப் போராளிகளும், இவர்களுமாகச் சேர்ந்து தடயம் பார்த்துப் பொறி வெடிகளைப் புதைத்தனர். நிற்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே புதிய முன்னணிக் கோட்டை அமைப்பதற்கான திட்டம் உருப்பெறுவதற்காக பின்னிருந்து ஊர்தியொன்று தருவிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஊர்தியின் சத்தத்தை இனங்கண்ட படையினர் தமது தொலைத்தொடர்பு உரையாடல்களில் அவ்வூர்தியையும், போராளிகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் திட்டமிட்டனர்.

இந்த உரையாடல் ஒற்றாடலின் மூலம் தெரியவந்ததால் ஊர்தி உடன் பின்னுக்கு அனுப்பப்பட்டது. அன்று மதியம் ஊர்தி நின்ற இடத்தைக் குறிவைத்து எறிகணைகள் மழைபோல வந்து பொழியத் தொடங்கின. இதனால் ஊடுருவிச் சென்று நிலைகொண்ட அனைவரும் தமது நடமாட்டத்தை நிறுத்திக் காப்பில் இருந்தனர். அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் பின்னகர்ந்து வேறிடத்தில் நிலை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளை கிடைத்தது. எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்துப் படையினர் வந்து தாக்குவார்கள் என்பதை இவர்களும் அறிந்திருந்ததால் கட்டளைக்கேற்ப பக்கவாட்டாக இடம்மாறி அதற்குப் பின்னே நகர்ந்து வேறோரிடத்தில் அந்த அணி காவலில் நின்றது.

முக்கோணவடிவத்தில் ஒருபுறம் வேவு அணியும், இன்னொரு பக்கம் பெண்புலிகளும், மறுபுறம் மன்னார்க் கட்டளைப் பணியகத்தினருமாக நிலையைப் போட்டு விடிய விடிய மாறி மாறி விழித்திருந்தனர். ஒருபுறம் நிற்பவர்களுக்கும் மறுபுறத்தில் நிற்பவர்களுக்கும் நாற்பது மீற்றர்களே இடைவெளி. அதிகாலை நான்கு மணிக்குக் காடுமுறிக்கும் சத்தம் கேட்டது. பெண்புலிகளின் பக்கம் காவலில் நின்ற வசியரசி புதியவர் என்பதால் சான்மொழியைத் துணைக்கு எழுப்பினார். சத்தங்கேட்டு அனைவருமே விழிப்பு நிலைக்குச் சென்று தகுந்த காப்புக்களில் நின்றனர்.

படையினர் பன்னிரண்டு பேரளவில் நகர்ந்து வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. நகர்ந்து வருபவர்கள் இவர்கள் போட்ட முக்கோணக் காப்பை அவதானித்தால் அந்த முக்கோணத்தின் மூன்று புறமிருந்தும் புலிகள் தமது எதிர்ப்பைக் காட்டத் தயாராக நின்றனர். கண்டமேனிக்குப் பரவலாக நகர்ந்த சிங்களப்படைகள் இவர்களுக்கு கிட்டவாக நகர்ந்து இவர்களது முக்கோண நிலையின் உட்புறத்தே வந்துவிட்டனர். சான்மொழி எழுந்து காப்பில் நிற்க ஜான்மாதிரி ஒரு உடற்பருமனானவர் அவரது உடையமைப்புடனேயே அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது. வந்தவர் P.மு சுடுகருவி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் இவர் ஜானல்ல என்பதைச் சான்மொழி இனங்கண்டார்.

எனினும் உள்ளே வந்த படையினரை ஒரு பகுதியினரும் சுட முடியாது. சண்டை வெளிப்புறமாகவே நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முக்கோணத்தின் உள்ளே எதிரிகள் தாக்கினால் மறுபுறத்திலிருக்கும் எம்மவர்களே பலியாகக் கூடும். இதையுணர்ந்த போராளிகள் முக்கோணத்தை விட்டுப் படையினர் வெளியேறு மட்டும் மறைவாக இருந்தனர். உள்ளே வந்தவர் கொற்றவையின் தலையை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டார். மூன்று மீற்றரில் இப்போது எதிரி. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த பாலு சடுதியாகச் செயற்பட்டு கொற்றவைக்கருகே வந்தவனை விழுத்திவிட்டார்.

விழுந்தவன் தனது துப்பாக்கியால் கொற்றவைக்குச் சுட அதைக்கண்ட பரணிதா விழுந்தவனுக்கு மறுபடியும் சுட்டு அவனைச் செயலிழக்கப் பண்ணினார். இப்போது அனைவரையும் அனைவரும் இனங்கண்டு விட்டனர். உள்ளே வந்தவர்களை ஒருவாறு முக்கோணத்தின் வெளியே தள்ளியாகிவிட்டது. வெளிப்புறமாக எல்லோரும் தாக்கத்தொடங்கினர். "மகே அம்மே" என்ற சத்தம் வெளிப்புறமிருந்து கேட்கத் தொடங்கியது. முக்கோணத்தில் நின்ற போராளியொருவருக்குப் பாதக்காலில் பெரிய காயம்.

கட்டளைப் பணியகத்துடனான தொடர்பு சீராக இருக்க, நின்ற இடத்திலிருந்து இவர்களைப் பின்வாங்கி வருமாறு கட்டளை கிடைத்தது. வந்தவர்கள் இவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு "மகே அம்மே" சொல்லிக்கொண்டு பின்வாங்கி விட்டனர். எறிகணைகள் துரத்திவந்து விழுவதற்கிடையில் காயக்காரரை யும் தூக்கிக்கொண்டு அந்த ஊடுருவல் அணி பின்வாங்கியது. சற்றுப் பின்னே சென்று தடிவெட்டிக் காவு படுக்கை செய்து அவரைத் தூக்கலாமென்று சுற்றிலும் அவதானித்தால் விடத்தல் பற்றைகளே எங்கும் தென்பட்டன. வேறு வழியின்றி விடத்தல் தடிவெட்டி முள்ளைச் சிராய்த்து விட்டு காயக்காரரை காவு படுக்கையில் தூக்கிக்கொண்டு தேத்தாவாடிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இரண்டு நாட்களும் போதிய உணவும், நீரும், ஓய்வுமின்றி இருந்ததால் ஏற்கெனவே இரத்த அழுத்தம் இருந்த ஜானுக்குக் களைப்பாக இருந்தது. அவர் தனது நோயையும், இயலாமையையும் அதுவரை வெளிக்காட்டவில்லையெனினும் முன்னணிக்கோட்டுக்கு அண்மித்த வழியில் மயங்கிக் கீழே சரிந்தார். தனது தந்தையைப் போன்ற அகவையிலிருந்த அவரை சான் மொழியும் இன்னுமொருவருமாகத் தூக்கிச் சென்று அவருக்குரிய இடத்தில் விட்டனர். இவர்கள் ஊடுருவிச் சென்ற கால இடைவெளியைப் பயன்படுத்தி தேத்தாவாடி முன்னணிக்கோடு சண்டைக்குத் தயாரான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அந்த ஏற்பாடுகள் நிறைவடையும் முன்னரே அந்த முன்னணிக் கோட்டின் ஒருபுறம் தனது அணியை காவலில் நிறுத்தியிருந்த அமர்வாணத்தின் பகுதியில் சண்டை தொடங்கி விட்டிருந்தது.

‘' '' '' '' '' '' '' '' '' ''

பாப்பா மோட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் முறியடிப்பு அணியில் ஒருவராகத் துளசியும் நின்றார். அடிக்கடி படையினர் முன்னகர்வதால் அடிக்கடி முறியடிப்புச் சமர்களும் நடந்துகொண்டிருந்தன. காலை, நண்பகல், மாலை, இரவு என்று காலவேறு பாடுகளற்றுச் சண்டைகள் தொடர்ந்தன. முன்னணிக் கோட்டுக்கும், அதற்கான முதன்மைத் தளத்துக்கும் ஐம்பது மீற்றர் இடைவெளியே இருந்தது. ஒவ்வொரு நாளும் டாங்கிகளின் சூடுகள் இவர்களைத் தேடிவந்தன. முதன்மைத் தளத்துக்கருகே வீதி இருந்ததால் அவ்வீதி வழி டாங்கியுடன் படையினர் முன்னேற முற்பட்டனர்.

முதன்மைத் தளத்திலிருந்து எதிரிகளை இனங்கண்டதால் இவர்களும் பக்கவாட்டாகவே அடிக்கத் தொடங்கிவிட்டனர். டாங்கிச் சூடுகள் பற்றை பறகுகளையெல்லாம் கிளப்பியெறிந்ததால் எங்கோ நிம்மதியாகக் கூடுகட்டியிருந்த குளவிகள் தமது இருப்பிடத்தையிழந்து சினங்கொண்டு பறந்து படையெடுத்து வந்தன. ஈழமங்கை முதன்மைத் தளத்திலிருந்து முன்னணி நிலைகளுக்குக் கட்டளை வழங்கிக் கொண்டிருந்தார். அருகே நடைபெறும் சண்டையையும் வழிப்படுத்திக் கொண்டிருந்தார்.

குளவிகளின் கோபம் ஈழமங்கையை நோக்கித் திரும்பியது. கட்டளை வழங்க முடியாது குளவிகள் அவரைக் கொட்டித் தள்ளின. புவிநிலைகாண் தொகுதியுடன் நின்ற பிருதுவி ஈழமங்கை மயங்கிச் சரிய அவரது நடைபேசியை எடுத்துத் தானே கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈழமங்கையைப் பின்னுக்கு அனுப்பிவிட்டு அவ்விடத்தைப் பொறுப்பெடுக்க அகமதி வந்தார். சிறிது நேரத்துக்குள் அவ்விடம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. முன்னே, பின்னே பக்கவாட்டாக என்று எங்கும் சிங்களப் படைகள்.

கப்டன் மல்லிகாவுடனான முறியடிப்பு அணிமட்டும் அவ்விடத்தில் நிற்க ஏனையோர் அனைவரும் பகுதிப் பொறுப்பாளர் சத்தியாவின் கட்டளைக்கமைவாகப் பின்வாங்கிச் சென்றனர். அன்றைய நாள் இவர்களுக்கு உணவு கொடுக்க வந்து படையினரிடம் மாட்டிக்கொண்ட உழுபொறியை மீட்கும் பணி இரவிரவாகத் தொடர்ந்தது. உழுபொறியின் ஓட்டுநருடன் தேவா தலைமையில் சென்ற முறியடிப்பு அணி உழுபொறியை மீட்பதற்கான சண்டையைச் செய்தது. P.K யும், 50 கலிபருமாக அடித்துக் கொடுக்க, ஆண், பெண் போராளிகளடங்கிய முறியடிப்பு அணி அன்றிரவே சண்டையிட்டு உழுபொறியை மீட்டு வந்தது.

ஓயாது சண்டை, ஓயாது வேலை, ஊனுறக்கமில்லை, ஒழுங்கான குளிப்பு, முழுக்கில்லை, சேற்று வாடை, ஈரஆடை, குளவிகளும், நுளம்புகளும், பாம்புகளும் உறையுமிடத்தில் வாழ்க்கை என்றிருந்தாலும் போராட மறுப்பதில்லை புலிகள். சிங்களப் படைகளுக்கு இது அந்நியமண் புலிகளுக்கோ இது உரிமை மண். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இதுதான் நமது நிலம். இந்த நிலத்தில் நெருப்பெரித்து மக்களைக் கலைத்து அந்த நெருப்பிலே குளிர்காய வருகின்றான் எதிரி. அவன் மூட்டிய நெருப்புக்குள்ளேயே அவனைத் தள்ளி விழுத்திவிடக் கானகமெங்கும் காத்திருக்கின்றனர் புலிகள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை. புலிகளின் பணியும் இன்னும் முடியவில்லை.

எழுதியவர் - அம்புலி

Saturday, December 20, 2008

கரும்புலிகளின் வரலாறு



ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.

இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.

இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.

இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.


விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும்.

இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம்.

- கலியுகன்-


Friday, December 19, 2008

சுதந்திர போராட்ட வீரர்கள் தினம்


இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்தது தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல் லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில், ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக, ஆட்சியை அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது.

ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜென ரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்த மானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர் களை இந்நாளில் பிரித் தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இன்றுவரை நினைவு கூரு கின்றனர். ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் (Armistice day)என கொண்டாடப்பட்டு பின்னர் நினைவு தினமாக (Remembrance Day) மாற்றம் பெற்றது.

தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதே போல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படு கின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915ல் எழுதிய கவிதை வரிகளில் பெல் ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன என்றும் எழுதிய கவிதைவரிகளின் பிரகாரமும் பொப்பிப் பூக்களை இந்நாடுகள் இந்த வீரர்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தன.

ஆனால் பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. எனவே கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் முடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இவர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்த வர்கள் என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுகின்றனர். மாறாக கடந்த சில ஆண்டுகளாக இலண்டனுக்குள் வெளி நாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் இலண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடி க்கப்படுகிறது. மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

அதில் சிறப்பம்சம் என்ன வெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 35,527 அவுஸ்தி ரேலிய வீரர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் ((Western Front)) புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலே 35,527 வீரர்களின் நினைவு களுக்கும் சாட்சி.

அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீரர்களின் நினைவுதினமான கார்த்திகை 27ம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழா ஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங் கள் ஆராயப்படவேண்டியவையே. அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக் கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்ல மையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும்தான் பிரகடனப் படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீரர்கள் தினமாகக் கொண்டாடி வருவத னைக் காணலாம்.

இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த ககானா என்கின்ற விடுத லை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர். 450 ஆண்டுகளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்தது. அந்த நாள் இன்றும் சுதந்திர தினமாக இல்லாது விடு தலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சி யுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.

ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக் களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங் படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 தினத்தை வியட்நாமின் தேசிய வீரர்கள் தினமாக கொண்டாடி வருகின் றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளு டனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதே போல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களை தவறாது கௌரவித்து நினைவு கூரு வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுதந்திரம் வேண்டிப் போராடிய சில அமைப் புக்கள் மற்றும் நாடுகள் உலகளாவிய ரீதியில் வீழ்ந்த வீரர் களுக்கு மரியாதை செய்யும் தினங்களைப் பற்றி நோக்கினோம்.



இனி தமிழீழ சுதந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு அதற்கான சுதந்திரப் போரை முன்னிறுத்தி அதற்காக தங்களுயிர்களை தியாகம் செய்த வேங்கைகளின் வீரத்திரு நாளான மாவீரர் தினத்தினைப் பற்றி நோக் குவோம்.

ஏரிநட்சத்திரங்களாக விடுதலையின் விடி வெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக்கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினை வுகூரும் நாள் கார்த்திகை 27.

கார்மேகம் கார்த்திகை யில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்க ளின் கால்கள் நனைக்கும் நாள். ஈடினையற்ற ஈகங் கள் புரிந்து அளப்பரிய அற்புதங்கள் செய்து மயிர்கூச் செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை 27.

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீரர்களை புதைத்து அவர் களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்க முறை காணப் பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது.

தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானுற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததனை இலக்கி யங்கள் சான்றாகிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது. அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானுற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு விடுதலை ப்புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும்.

உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக் குழந்தைகளுக்கு வீரத்தாலாட்டு ஈழத்தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெறுகிறது. இற்றைக்கு 2500 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்தி ரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீரர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ. அத்துடன் போரில் மாண்ட வீரர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான் என்று, சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருக்கின்றோம்.

அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதே போல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்ககாலப் பாடல்கள் பலவும் இவ்வீரர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. முதன்முத லில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

1989ம் ஆண்டு 1617 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக் குள்ளும் நள்ளிரவு 12.01ற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத் திலே மாவீரர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீரர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீரர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதை குழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறை கள் எழுப்பப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

இந்த மாவீரர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச் சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாக வும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதரர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோதரர்களுக்கு எதைக்காட்டப் போகின் றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதரர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா. ஆகவே வீரமரணமடையும் மாவீரர் களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது, புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.

இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிண ங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் அறிவித் தார்கள்.

அந்தவகையில் 1991ம் ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீரர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டன. அந்த 1991ம் ஆண்டில் 3750 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீரர் நாளில் புதுவை இரத்தினதுரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீரர்கள் கௌரவிக்கப்பட்ட னர்.

பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை மாவீரர் தினம் அனுட் டிக்கப்படுவதுதோடு முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 ற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத் தக்கது. 1998ம் ஆண்டு 14.435 மாவீரர்களுக்கு நினைவு கூரப்பட்டது. கடந்தவருடம் 19.887 மாவீரர் களுக்கும் இந்தவருடம் 21,400 ற்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீ ரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்புகிறது.

இந்த நாளில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ தூவி வணங்குகின்ற மரபு காணப்படுகிறது. வல்லரசான பிரித்தானியா நவம்பர் 11 இல் பொப்பி மலர் வைத்து வீழ்ந்த வீரர்களை வணங்கு கின்றனர். ஆனால் விடுதலை வேண்டிப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் கார்த்திகைப் பூத் தூவி வணங்குகின்றனர்.


சங்ககாலத்தில் இருந்து இம்மலர் காந்தள் மலர் என அழைக்கப்பட்டு வந்திருந்தமையைக் காணமுடிகின்றது. இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். அத்துடன் லில்லி ஆசியே எனப் படும் தாவரவியல் போர் கொண்ட கார்த்திகைப் பூவானது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதை உண்பவர்கள் உடனடியாக மயக்கமுறுவதோடு எதிர் காலத்தில் தலைமுடி உதிர்வையும் ஏற்படுத்தும் கொல்கிசைன் என்ற நச்சுப்பொருள் கொண்டது.

இப்பூவானது எவ்வாறு ஒரு விசேட தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ, அதே போலவே கழுத்தில் நஞ்சைக் கட்டிக்கொண்டு களப்பலியாகிய மாவீரர்களும் தமக்குள்ளே ஒருவிசேட தன்மைகளைக் கொண்டுள்ளனர். தமது வாயிலிருந்து விடுதலைப்போர் பற்றிய எதுவித உண்மைகளும் தெரியவரக்கூடாது என்பதற்காக தனது நாக்கை வெட்டி மாவீரனான கப்டன். பாலன். சயனைட் உண்டு வீரகாவியமான மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள் ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள். தம்முயிர்களைத் துச்சமென மதித்து உடலையே கந்தக மாக்கி வெடித்து உயிர் நீத்த கரும்புலிகள், எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக தம்மைத் தாமே அழித்த கேணல் கிட்டு போன்ற மாவீரர்கள். தன்னுடலை மெழுகுதிரியாக்கி உயிர்நீத்த திலீபன், வியட்நாமின் வியட்கொங் படைகளை வழிநடத்தி அவர்களின் வெற்றிக்கு வித்திட்ட வியட்நாமிய ஜெனரல் வோ நியூ கியன் ஜியாப் போல் தமிழர் படைகளை 25 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி ஒவ்வொரு தாக்குதல்களையும் தலைமை ஏற்று விடுதலைப் போரை ஒரு மரபுவழிப்போராக மாற்றிய பிரிகேடியர் பால்ராஜ் ஆகியவர்கள் அனைவரும் கார்த்திகை பூ போலவே வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர்கள்.

பொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீரர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக கிளர்ச்சி மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காவில் இறந்த வீரர்களை நினைவு கூருவதை பொது வாகக் காணமுடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்ட 58,132 அமெரிக்க வீரர் களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் நினைவு நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவு சின்னத்திற்கு அருகில் 75 மீற்றர் உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நா மில் இறந்த 58,132 அமெரிக்க வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன.

இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன. அத்துடன் தாம் கிளர்ச்சி மூலம் கைப்பற்றி வெற்றி பெற்ற அந்நாளை மட்டும் அவை கொண்டாடி மகிழ்கின்றன. ஆகவே உலகத்தில் காணப்படுகின்ற விடுதலை அமைப்புக்கள் எல்லாம் ஒரு நாளை மட்டும் ஒதுக்கி அவர்களுக்காக பொதுவான தீபத்தினை ஏற்றுகின்றது. அத்தோடு தனித்தனிக் கல்லறைகளையும் அவை அமைப்பதில்லை பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கின்றன. ஆனால் பிரித் தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீரர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்தது உதாரணமாக பிரான்சில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தா னிய வீரர்களுக்கும் தனித்தனி கல்லறை அமைத்ததையும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் ((postmouth) எனுமிடத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்துக் கௌரவித்ததையும் குறிப்பிடலாம்.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இறந்த இந்திய வீரர்களை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முடியதாவிடத்து தமிழர் தாயகத்தில் புதைத்தனர். அதை இன்றுவரை அழிக் காது தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாக்கின்றனர். ஆனால் இன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழீழ விடுத லைப் புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீரர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படு கின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். எனினும் ஆயிரம் ஆயிரம் மாவீரர் களின் கல்லறைகளில் இம்முறை தீபங்கள் ஏற்றமுடியாது.

எனவே உங்களுக்காக எங்கள் இதயங்களில் தீபங்கள் எரியும் நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

அ.மயூரன் - இலண்டன்

ஈழமுரசு (29 நவம்பர்)



Sunday, December 14, 2008

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்



ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது.

வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்டிருந்தது. அது 'பாலாண்ணையின் நினைவு நாள் வருகுது". அந்த வரிகள் மன அடுக்குகளில் ஆழமாக உள்ளிறங்கி எண்ணற்ற நினைவலைகளை உருவாக்கிவிட்டிருந்தன. இந்த எண்ணவோட்டத்துடன் கடல் அலைகளை பார்க்கும் போது அவையும் பாலாண்ணையின் நினைவுகளையே கரையை நோக்கி எடுத்துவருவது போல் ஒரு பிரம்மை... என் வாழ்நாளின் நிம்மதியற்ற இரவுகளில் அதுவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது.


இரண்டு வருடங்கள். போராட்டத்தின் தாங்கு தூண்களில் ஒன்றும் அதன் இயங்கு சக்திகளின் மையமுமாகிய ஒருவர் இல்லாமலேயே கடந்து விட்ட காலங்கள் இவை. ஒரு வகையில் கொடுமையான நாட்கள்.

காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்று தீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.

போராட்டம் மிக முக்கியமான வரலாற்றுக் கால எல்லைக்குள் பிரவேசித்திருக்கிற தருணம். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவர் இல்லையே என்ற ஏக்கமும் கவலையும் இயல்பாகவே தொண்டைக்குள் வந்து பந்தாய் அடைத்துக் கொள்கிறது. பாலசிங்கத்திற்கான நினைவுக்குறிப்பாய் இந்த பத்தியை எழுதி முடிக்கலாம். ஆனால் அவருக்கான உண்மையான அஞ்சலியும் நினைவும் அதில் தங்கியிருக்கவில்லை.

அவர் தன் வாழ் நாளில் எத்தகைய பணியை மேற்கொண்டிருந்தார். அது இன்று எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை ஆராய்வதும் அதிலுள்ள தேக்கங்களைக் கண்டடைந்து அதைக் களைய முற்படுவதும்தான் நாம் அவருக்குச் செய்யும் நிஜமான அஞ்சலியாகும். இதையொட்டி இந்தப் பத்தியினூடாக பன்முக ஆளுமை கொண்ட அவரது பணியின் ஒரு சிறு பகுதியை விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

இக் கட்டுரையின் தலைப்பு frantz fanon இன் wretched of earth நூலுக்கு jean paul satreஎழுதிய முன்னுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராட்ட வடிவங்களை விபரிக்கும் frantz fanon இன் இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றது. அதைவிடப் பிரசித்தம் அந்நூலுக்கு satre எழுதிய முன்னுரை. உலக வரலாற்றிலேயே நூலின் உள்ளடக்கத்திற்கு நிகராக எதிர்வினையை எதிர்கொண்டதும் சிலாகிக்கப்பட்டதும் அனேகமாக சர்த்தரின் இந்த முன்னுரையாகத்தான் இருக்க முடியும்.

'நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி" என்ற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்ட்டவர்களின் விடுதலையின் அடிநாதமாக இருக்கும் வன்முறையை சிலாக்கிக்கும் கசயவெண frantz fanon இன் நூலுக்கு முன்னுரை எழுதப்புகும் ளயசவசந பல படிகள் மேலேபோய் வன்முறையின் உச்சமாக நிகழும் பயங்கரவாதத்தை தூக்கிப்பிடிக்கிறார். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் sartre ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். பிரெஞ்சு வேர்ச் சொல்லிலிருந்து பிரித்தெடுத்து "terror" என்ற வார்த்தைக்கு ஒரு புதிய வியாக்கியானத்தை வழங்கியவர் சர்த்தார்.

சர்தாரினதும் பனானினதும் வியாக்கியானப்படி அரசின் வன்முறைக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் ஒரு இனத்திலிருந்து அந்த அடக்குமுறைக்குள்ளிருந்தே திமிறியெழுந்து வன்முறையின் துதிபாடியபடி வரலாறு ஒன்று மேலெழும் என்பது ஒரு கோட்பாடாகக் கட்டவிழ்கிறது. அப்போது அந்த வரலாற்றின் மீது பேரொளி ஒன்று வந்து குவிகின்றது. அப்போது ஒடுக்கப்பட்ட அந்த இனம் மட்டுமல்ல எதிரிகள் உட்பட ஒட்டுமொத்த உலகமுமே அந்த வரலாற்றுப் பேரொளியின் தரிசனத்தைக் காண்கிறார்கள். அது ஒரு முடிவிலி. அந்த இனத்தின் வரலாறாகவும் வழிகாட்டியாகவும் அது இயங்கிக் கொண்டேயிருக்கும். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி. தமிழினத்தின் இயங்கியலும் வரலாறும் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

கால நீரோட்டத்தில் தமிழினத்தின் இயங்கியலையும் வரலாற்றையும் இனங்கண்டு அதனோடு இணைந்து இசைந்து அந்த வரலாற்றினது 'குரல்" ஆக பரிமாண மாற்றமடைந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அந்த இயங்கியல் வரலாற்றினுள் வெடித்துக் கிளம்பியவர் என்றுதான் தற்போது தோன்றுகிறது.

காலனியாதிக்கத்திற்கெதிராக தனது வாழ்வின் இறுதிவரை போராடிய கறுப்பின வீரரான பிரான்ஸ் பனானை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை சர்த்தாரையே சாரும். இருவரும் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல பனான் இறந்த பிற்பாடும் அவரது கோட்பாடுகளை - கொள்கைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த பெருமையும் சர்த்தாரையே சாரும். அதன் அடையாளம் தான் jean paul satre தொகுத்த frantz fanonஇன் wretched of earth நூல்.

கால வெளியில் வைத்து யோசித்துப் பார்க்கும் போது ஒரு கோணத்தில் பனானுக்கு ஒரு சர்த்தார் போல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று இப்போது புரிகிறது. வரலாறு என்பது எவ்வளவு அற்புதமானது. சும்மாவா சொன்னான் ஜெர்மானிய தத்துவக் கிழவன் கேகல் (hegal) 'வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும்" என்று...

"war and terror" என்ற பெருங்கதையாடல்களுடன் 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்" புரியக் கிளம்பியிருக்கும் மேற்குலக வல்லரசுகளின் ஒற்றை அறத்தையும் நீதியையும் இன்று எதிர்கொள்ள எம்முடன் பனானும், சர்த்தாரும் இல்லாமல் போனது ஒரு வகையில் துரதிர்ஸ்டவசமானதுதான். இதை ஒரு வகையான காலக்குழப்பம் என்றுதான் கூற வேண்டும். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் வாழ்நாள் பணியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது விழத் தொடங்கியிருந்த 'பயங்கரவாத" சாயத்தை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட வண்ணமிருந்தார். அவருடைய அந்த பணியின் ஆழத்தைத்தான் இன்று நாம் சர்த்தரினதும் பனானினதும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி 'அழகு" பார்க்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சர்த்தாரின் மீள் வருகை ஒன்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் ஈழச்சூழலின் உச்சத்தில் நிறுத்தப்பட வேண்டிய சர்த்தார், பனான் போன்றவர்கள் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பின் தட்டடையான ஒற்றையான வழிநடத்தலினால் மறக்கடிக்கப்பட்டதும் காணாமல் போனதும் துரதிர்ஸ்டவசமானது.

இவர்களின் பரிச்சயம் ஈழச்சூழலுக்கு பழக்கப்பட்டிருந்தால் இன்றுள்ளது போல் தற்போதைய மோசமான களநிலவரங்களை முன்வைத்து ஒரு ஈழத்தமிழன் பிதற்றிக் கொண்டிருக்கமாட்டான். புலிகள் தமது பின்னகர்வினூடாக போராட்டத்தைத் தக்க வைப்பதையும் போராட்ட வடிவத்தை புலிகள் மாற்றிக் கொண்டிருப்பதையும் சுலபமாக இனங்கண்டிருப்பான். தமிழ்த் தேசிய ஊடகங்கள் இனியாவது தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமது பன்முகத் தன்மையை கட்டிக்காக்க முன்வரவேண்டும்.

இந்த வரலாற்றுப் பின் புலத்திலிருந்து துதி பாடலாக இல்லாமல், மிகையுணர்ச்சி சார்ந்து இயங்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தோற்றுவாயை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தோற்றுவாயுடன் பொருத்தப்படுவதை ஒரு கட்டத்தில் அவதானிக்கலாம்.

வெற்றியின் விளிம்பில் நின்று ஆரவாரங்களுடன் ஒரு ஆய்வை முன்வைப்பதை விட தற்போதுள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு தேடலை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையானதாகவும் இருக்கும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மகிந்தவின் படைகள் குமுழமுனை, அலம்பில் தொடங்கி மாங்குளம் கனகராயன்குளம் வரை நீண்டு பரந்தன் வரை ஒரு பிறை வடிவ முற்றுகைக்குள் புலிகளை அடக்கி வைத்திருக்கும் செய்தி வந்து சேர்கிறது. ஒரு வகையில் உண்மையிலேயே இது ஒரு அற்புதமான தருணம். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கக்கூடிய இடமும் காலமும் இதுதான்.

போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை- வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.

பனானின் மொழியில் கூறினால் 'இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள் வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது." இதை நாம் எமக்கு தெரிந்த வேறு ஒரு மலினமான சொல்லாடலில் தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் குறிப்பிட்டால் 'சின்னப்புள்ளத்தனமா இல்லை".

சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், 'தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப் படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றை எழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல." எத்தகைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம். அதுதான் அவரால் இறுதிவரை 'பயங்கரவாத" பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலக அரங்கில் துணிச்சலுடன் முன்மொழிய முடிந்தது. அன்ரன் பாலசிங்கத்தின் வழி ஒவ்வொரு தமிழனும் வரலாற்றினுள் வெடித்தெழுவோம். நமது தாக்குதலால் அவ் வரலாற்றை உலகளாவியதாக மாற்றுவோம். நாம் போராடுவோம். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை- ஆயுதங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை - காத்திருக்கும் கத்திகளின் பொறுமை போதும். அன்ரன் பாலசிங்கத்திற்கான நிஜமான அஞ்சலிக்குரிய வார்த்தைகள் அவை. ஏனெனில் சர்த்தார் குறிப்பிடுவது போல் தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்டான் எதிரி.

அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத் தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார் என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.

இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.
அந்த ஆய்வின் தொடர்ச்சி பயங்கரவாதம், புரட்சிகர வன்முறை, வன்முறையின் அறவியல் தொடர்பான கோட்பாடுகளை உய்ந்துணர்ந்து கொள்வதுடன் மட்டுமல்ல தற்போதைய களநிலவரங்களின் கன பரிமாணத்தை உணர்த்துவதுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய வடிவ மாறுதலையும் இனங் காட்டும்.

அன்ரன் பாலசிங்கம் குறித்து இன்னும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் இல்லை என்று நிறுவ முயன்றார் என்பதுதான் அது. இதைத்தான் நாம் தவறு என்கிறோம். ஏனெனில் அவர் அவ்வாறு செய்ய முற்படவில்லை என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை முன்வைத்து ஒரு முக்கியமான விடயம். பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை முன்வைத்து இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் விடயம் மிகச் சிக்கலானது மட்டுமல்ல நுட்பமானதுமாகும். எமது போராட்டத்தின் மீது தொடர்ச்சியாகத் தடவப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த 'சாயத்தை" கேள்விக்குள்ளாக்குவதுடன் அதிலிருந்து வெளியேறும் நோக்குடனுமே நாம் இது குறித்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே இந்த சிறு பத்தியினுடாக நாம் தேடும் விடயத்தின் பன்முக பரிமாணத்தை துல்லியமாக - விரிவாக ஆய்வு செய்து உலகத்தின் முன்வைக்க வேண்டிய பெருங்கடமை ஈழத்து அறிவுஜீவிகளின் முன் கிடக்கிறது. வரும் நாட்களில் அப் பணியை சேர்ந்து முன்னெடுப்போம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

மேற்கண்ட வரிகளை முன்வைத்து ஒருவர் அப்படியென்றால் 'புலிகள் என்ன பயங்கரவாதிகளா? பாலசிங்கம் அதை முன்மொழிந்தாரா?" என்று கேட்டு வாதாட முன்வரலாம். இது ஒரு ஒற்றைப் பார்வை. பன்முகக் கோணத்தில் அது உண்மையல்ல. இதன் அடிப்படையில்தான் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாக இனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் - கொண்டாடினார்.

ஏனெனில் நிராயுதபாணிகளாக - நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.

சர்த்தாரின் மொழியிலேயே எமது 'பயங்கரவாதத்திற்கு" நாம் வியாக்கியனம் கூறினால், எமது வன்முறை வெறும் கோபக் குமுறல் அல்ல, வன்மத்தின் விளைவுமல்ல, அது எம்மை நாமே திருப்பி படைப்பது. எந்த ஒரு நளினத்தாலும் மேன்மையாலும் சிங்களத்தின் வன்முறையை அழிக்க முடியாது. எமது வன்முறையால் மட்டுமே அதை அழிக்க முடியும். ஆயுதத்தின் முலம் ஆக்கிரமிப்பாளனை நாம் வெளியேற்றுவதன் மூலம் அடக்குமுறை மனநோயிலிருந்து எம்மை குணப்படுத்திக் கொள்கிறோம். எமது கையில் இருக்கும் ஆயுதம் எமது மனிதத்தன்மையின் அடையாளம். ஒரு சிங்கள ஆக்கிரமிப்பாளனை சுட்டு வீழ்த்துவதன் மூலம் ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக் கட்டுகிறோம். எமது காலடியில் கிடப்பது ஒரு பிணம். ஆனால் அங்கு எழுந்து நிற்பது சுதந்திரமான ஒரு ஈழத்தமிழ் உயிரி.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் எம்மை பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம். இப்போது எங்களை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். எங்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறீர்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் நாம் அதை எமதாக்கிக் கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாம் வன்முறையின் குழந்தைகள்.

அன்ரன் பாலசிங்கம் பேசிய - கொண்டாடிய 'பயங்கரவாதம்" இதுதான். ஆனால் இந்த அறத்தையும் நீதியையும் தவற விட்டுவிட்டு கேடுகெட்ட சர்வதேச சமூகம் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் மீது நியாயத் தீர்ப்புக்களை வழங்குவதற்கு முண்டியடிப்பது காலத்தின் விசித்திரம் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. பிரச்சினையின் மூலத்தையும் வேரையும் விட்டுவிட்டு அதற்கு தீர்வை முன்வைக்காமல் 'பயங்கரவாத" பட்டியலிடும் சர்வதேச்தின் மனச்சாட்சிகளோடு நாம் தொடர்ந்து போராடுவோம். பாலசிங்கத்திற்கான அஞ்சலி அதில்தான் தங்கியுள்ளது. அவர் முன்னெடுத்த பணியும் அதுதான்.

அவர்களின் கதவு இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். அவர்கள் திறக்கவில்லை என்பதற்காக நாம் தட்டுவதை நிறுத்த வேண்டாம். நாம் தொடர்ந்து தட்டுவோம். என்றாவது ஒரு நாள் அது திறந்தே தீரும்.

வன்னியில் நிலங்களை ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து சொத்துக்களை சூறையாடி பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கி விட்டிருக்கிறது சிங்கள இனவாதம். தொண்டு நிறுவனங்களும் இல்லை. துயர் துடைக்க நாதி இல்லை. விச ஜந்துக்களோடு காட்டில் காலம் கழிகிறது. போதாததற்கு இயற்கையின் சீற்றம் வேறு. எறிகணைகளும் குண்டு வீச்சு விமானங்களும்தான் தினமும் துயிலெழுப்புகின்றன. போததற்கு 'கிளஸ்ரர்" குண்டுகளை வேறு சிங்களம் வீசத் தொடங்கியிருக்கிறது. உலகம் கண்ணை மூடிப் பாhத்துக் கொண்டிருக்கிறது. இது 'பயங்கரவாதம்" இல்லையாம்.

'அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் முன்பு கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை அன்று நாம் வெளிப்படுத்தினோம். எம்மை 'பயங்கரவாதிகள்" என்றீர்கள். இப்போது அதனிலும் பன்மடங்காக எதிரி எமக்கு கற்பிக்கிறான். இதை ஏன் உங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அது 'பயங்கரவாதம்" இல்லையா!" ஈழத்திலிருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலிருந்தும் எழும் குரல் இது.

எல்லா சமன்பாடுகளையும் கலைத்துப் போட்டு எதிரியானவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அத்தாக்குதலை முன்னிறுத்தி பிரபல பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்திரியா "டந அழனெந" பத்திரிகையில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் 'ஒரு அதிகார அரசும் ஒரு அமைப்பும் நடத்திய விளையாட்டில் மறு தரப்புக்கு சீட்டுக்களை சரியாகப் பகிர்ந்தளிக்காமல் அதிகார அரசு விளையாட்டை ஆரம்பித்தது. விளைவு மறு தரப்பு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்கு தள்ளப்பட்டது. விளைவு இரட்டைக் கோபுரம் தகர்ந்தது. மாற்றப்பபட்ட அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்" என்று குறிப்பிட்டார். இன்றும் சிங்களம் இதைத்தான் நமக்கு எதிராகச் செய்கிறது.

இப்போது தமிழீழத்திலும் விளையாட்டின் விதிகள் மாற்றப்படவேண்டிய புறநிலை உருவாகியிருக்கிறது. அன்ரன் பாலசிங்கம் இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லியிருப்பார். இது வன்முறையின் மூன்றாம் கட்;டம். தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதிலிருந்து 'கிளஸ்ரர்" குண்டுகள் வரை உலகின் மௌனம் தொடர்கிறது. இன்று நிராயுதபாணிகளாக - நிர்க்கதியாக நின்கிற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. மிஞ்சி இருப்பது உயிர் மட்டுமே. நாளை அவையே அவர்களுக்கு ஆயுதம். அவர்களது உயிர்கள் ஆயுதங்களாக வெடிக்கும் போது மட்டும் உலகின் யோக்கியர்கள் 'பயங்கரவாத பட்டியலை" காவிக்கொண்டு ஓடி வரலாம். அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. இது சிங்கள ஏகாதிபத்தியயம் வீசிய வளைதடி. அதை நோக்கி திரும்பும் காலம் நெருங்குகிறது. அன்ரன் பாலசிங்கத்தின் இன்றைய நினைவு நாளில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அதைச் சாத்தியமாக்குவோம். இதுதான் அவருக்கான அஞ்சலி மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையும் கூட.

-பரணி கிருஸ்ணரஜனி-
-தமிழ்நாதம் -

புகைப்படத் தொகுப்பு

காணொளிகள்
தேசத்தின் குரல்
தேசத்தின் குரல் 2 ம் ஆண்டு நினைவில்


Saturday, December 13, 2008

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2 ம் ஆண்டு நினைவில்









தேசத்தின் குரல் காணொளிகள்

மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்



தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல.

எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் - மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் - செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் கண்டறிவராகில் அது ~தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தைத் தவிர வேறு யாருமாக இருக்க முடியாது.

ஆயுதப் போராட்டங்கள் பெரும்பாலும் உருவாக்கப் படுவதில்லை. உண்மையான நேர்மையான விடுதலைப் போராட்டங்கள் சூழ்நிலையின் குழந்தையாகவே பிரசவிக்கின்றன. இத்தகைய வேளையில் பெரும்பாலும் உணர்ச்சியால் - மிக அரிதாக - உணர்வால் உந்தப்பட்ட தனிநபர்கள் போராட்டத்தின் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒரு நியதியாக உள்ளது.



இத்தகைய போராட்டங்களை புத்திஜீவிகள் மிகவும் கவனத்துடன், தள்ளியிருந்து அவதானிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இத்தகைய விடயங்கள் ~வாலிபப் பருவத்துச் சாகச விளையாட்டுக்களாவே தெரியும். எனவே ஆரம்பத்தில் இத்தகைய நடவடிக்கைகளை விமர்சிக்க முனைவர். முடிந்தால் முளையிலேயே கிள்ளிவிடத் துணிவர்.


ஆனால், இது முடியாமற் போகும் போதும், சமூகத்திலே ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர்கள் உணரத் தொடங்கும் போதும், அவர்களுடைய முன்னைய அபிப்பிராயம் மாறும். இந்நிலையில் அவர்கள் தாமாகவே போராட்டங்களில் இணைந்து கொள்வர். அதற்கு வலுச் சேர்ப்பர். அத்தகையோரின் தேவையை உணர்ந்து அவர்களை நாடிச் சென்ற நிலைமை மாறி, அவர்களாகவே போராளிக் குழுக்களை நாடிச் செல்வர்.

அன்ரன் பாலசிங்கம் விடயத்திலேயும் இதுவே நடந்தது. லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் சென்னைக்கு வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். நட்பை ஏற்படுத்திக் கொண்டார் இந்த நட்பு எத்தகைய ஆழமானது என்பதைத் தொடர்ந்து வந்த காலங்களில் பல தடவைகளில் நாம் காணக் கூடியதாக இருந்தது.


அன்ரன் பாலசிங்கம் போராட்ட அரசியலில் பிரவேசித்த கால கட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரங்கில் பல போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஓடிக் கொண்டிருக்கிற குதிரைகளில் தொடர்ந்து ஓடக்கூடிய குதிரை அல்லது தொடர்ந்தும் ஓடப் போகின்ற குதிரை எது என்பதைத் தீர்மானிப்பதற்கு அவருடைய மதிநுட்பம் உதவியது. 'இறந்த காலத் தெளிவும், நிகழ்கால நிதானமும் இருந்தால் எதிர்காலத் தீர்க்க தரிசனம் இயல்பாகவே உதயமாகும்" என்ற கூற்றுக்கு ஒப்ப அன்ரன் பாலசிங்கத்தின் தீர்க்க தரிசனம், அவரின் முடிவு சரியானது என்பதை நிரூபித்து நிற்கிறது.

அதேவேளை, தலைவர் பிரபாகரன் கூட 'தான் தேடிக் கொண்டிருந்த நபர்" கிடைத்து விட்டார் என மகிழ்ந்தார். சரியாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றை அன்ரன் பாலசிங்கத்துக்கு முந்திய காலம், அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிந்திய காலம் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

விடுதலைப் புலிகள் பத்தோடு பதினொன்றாக இருந்த காலங்களில், சித்தாந்த அடிப்படையில் செயற்பட்ட இயக்கங்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்ட ஏனைய இயக்கங்கள் அவர்கள் மீது வைத்த விமர்சனம், 'விடுதலைப் புலிகள் இராணுவ சாகசங்களில் நம்பிக்கை கொண்ட தத்துவ வறுமையுடன் கூடிய சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் செயற்படும் இயக்கம்" என்பதே.

இந்த விமர்சனம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த போதிலும், தாமும் ஏதொவொரு தத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற உந்துதல் புலிகளின் தலைமைப் பீடத்திடம் இருந்தமையை மறுக்க முடியாது. தேசியத் தலைவரே ஒத்துக்கொண்ட விடயம், தன்னைப் பெரிதும் கவர்ந்த நூல்கள் தமிழர்களின் பண்டைய பெருமையைக் கூறும் சரித்திர நவீனங்களே என்பதாகும். அதே வேளை, மார்க்சிய நூல்களை அவர் முற்றாகப் புறந்தள்ளி விடவில்லை.


இந்த வேளையில்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியைப் புதிய பாதைக்குத் திசை திருப்பியது. இராணுவ ரீதியாக, சரியான திசையில் புலிகள் காய்களை நகர்த்திச் சென்ற போது, இராஜதந்திர ரீதியிலும் காய் நகர்த்த வேண்டிய தேவையை உணர்த்தி அதற்குச் செயல்வடிவம் தந்தவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் என்றால் அது மிகையாகாது.

எதிரியின் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அதிரடித் தாக்குதல்களை நடாத்தி எதிரியைப் பிரமிப்பில் ஆழ்ந்த போராளிகளால் முடிந்ததென்றால், 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது, வீரம் மட்டுமல்ல, விவேகமும் தேவை" என்பன போன்ற ஏளனப் பேச்சுக்களைப் புறந்தள்ளி நாங்களும் கை தேர்ந்த இராசதந்திரிகளே என்பதை நிரூபிக்க அன்ரன் பாலசிங்கத்தின் வழி நடத்தல் உதவியது.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் 1989 இல் கொழும்புக்குச் சென்று மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் பேச்சு நடாத்தி தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஒரு சேரப் பிரமிப்பில் ஆழ்த்தியதில் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு அளப்பரியது. எந்த எதிரியுடன் போர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ அந்த எதிரியின் தலை நகருக்கு சொந்த ஆயுதங்களுடன் சென்று பேச்சு நடாத்திய இயக்கம் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தவரும் அவரே.

அன்ரன் பாலசிங்கத்தின் வகிபாகம், தனியே விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர முகவரியைத் தேடித் தந்தவர் என்பதோடு மட்டும் முடிந்து வில்லை. மாறாக, போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த புத்திஜீவிகள் சமூகம் கூட அன்ரன் பாலசிங்கத்தின் போராட்ட ஆதரவு காரணமாக ஈர்க்கப்பட்டு போராட்டத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கம் எனக் கூறப்பட்டுத் தடை செய்யப்பட்ட போதிலும்கூட அன்ரன் பாலசிங்கத்தால் லண்டன் இருந்து கொண்டே விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் என்றும், உத்தியோக பூர்வ பேச்சாளர் என்றும் செயற்பட முடிந்தது என்றால் இராஜதந்திர வட்டாரத்தில் அவர் தனக்கெனத் தேடி வைத்திருந்த தனியிடமே அதற்குக் காரணம். துரதிஷ்டவசமாக, மிகவும் தேவைப் படுகின்ற இன்றைய தருணத்தில் அவர் எம்மத்தியிலே இல்லாது போய் விட்டார்.

ஒரு மனிதரின் வாழ்வு என்பது அவன் வாழுகின்ற போதிலும், மறைந்த பின்பும் அதே கனதியுடன் நினைவு கூரப்படுகின்ற தென்றால் அது அர்த்தமான வாழ்வாகின்றது. அந்த வகையில் தனக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் அர்த்தம் தரும் வாழ்வை வாழ்ந்த எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஈழத் தமிழர் மனதைவிட்டு என்றும் அகலமாட்டார் என்பது சத்தியமான உண்மை.

-சண். தவராஜா-

நன்றி: நிலவரம் (12.12.08)
தமிழ்நாதம்

http://www.antonbalasingham.com/
http://eelavarkural.blogspot.com/2008/08/blog-post_8572.html

Friday, December 12, 2008

துயிலறைக் காவியம் மேஜர் கிள்ளி / மாதவன்

போர்முகம்

"விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள்.

அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது.


விடுதலைப் பாதையில் அல்லும் பகலும் உறக்கமற்று உழைத்த உயர்ந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் ஆரம்பகால வரலாறுகளை நினைவுபடுத்தினார். "1991ம் ஆண்டு பிற்காலத்தில் சந்திரன் -1 பயிற்சிப்பாசறையில் அவரிடம் இருந்த வேகம், ஒழுக்கம், கொடுக்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்துமுடிக்கும் பக்குவத் தன்மை இத்தனையும் விடுதலைக்கு விதையாகின்ற இறுதிக்கணம் வரை அவரிடம் அப்படியே இருந்தது." என்று தளபதி தீபன் அண்ணை சொல்லி முடிக்க நாகர்கோவில் களத்தில் போராளிகளை இரையாக்கும் துடிப்பில் அலையும் சிங்களப் படைகளுக்கு போக்குக்காட்டிச் செயற்படும் அவரின் வேகமும், துணிவும் எங்களை நிறைத்தன.

"பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த இவர் 1996ஆம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் தன்னை இணைத்து சிங்களப் படைகளின் பாதங்கள் பதிகின்ற இடங்களை அவர்களுக்கு புதைகுழிகளாக மாற்றும் பணியில் சிறப்புடன் செயற்பட்டிருந்தார். 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த ‘ஜெயசிக்குறு' படைநடவடிக்கையில் தளபதி விக்கீஸின் பங்கு முக்கியமானது. எங்களது அனைத்துப் படையணிகளும் சிங்களப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு களத்தில் சிங்களப் படைகளை சரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒவ்வொரு காட்டு மரங்களுடனும் போராளிகள் வாழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பு தளபதியாக இருந்து ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த லெப் கேணல் ராகவன் அவர்களின் கீழ் தளபதி விக்கீஸ் செயலாற்றினார்


"மிகவும் நெருக்கடியான அந்தக் காலத்தில் களத்தின் முன்னிலையில் தீரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த தளபதி விக்கீஸ் அவர்களை சிறப்புத் தளபதி லெப் கேணல் ராகவன் இனங்கண்டு என்னிடம் அனுப்பினார். தளபதி ராகவன் அவர்களால் என்னிடம் அனுப்பப்பட்டிருந்த தளபதி விக்கீஸ் புரட்சிக்குளமான இருந்த புளியங்குளத்தில் இரண்டு பணிகளைச் சிறப்பாக ஆற்றியிருந்தார். சிஙிகளப் படைகளுடன் சண்டையிடுவது முதல் போராளிகளின் செயற்பாடுகளுக்கான நிர்வாகச் செயற்பாடுகளையும் பொறுப்பேற்று சிறப்புடன் செய்து முடித்திருந்தார்" என்றவர் "சண்டை நடக்கின்ற களமுனைப் பகுதிகளில் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை நிர்வகித்துக் காட்டுவதில் வழிமூடி உறங்கிக்கொண்டிருக்கும் விக்கீஸ் தனித்திறமையுடையவர்"

"ஜெயசிக்குறு நடவடிக்கை காலத்தில் சிங்களப் படைகளின் கனவுகளைத் தகர்க்கும் உக்கிரமான போர் நிகழ்ந்தது. அதற்காக போராளிகளை ஓய்வற்று உறக்கமற்று உணவற்றுக் கூடப் போராடினார்கள். ஒவ்வொரு போராளிகளின் ஈகங்களாலும் களத்தில் சிங்களப் படைகள் சரிந்தார்கள். இது தமிழர் வரலாற்றுச் சரித்திரம். புரட்சிக்குளமாக மாறியிருந்த புளியங்குள மண்ணில் எழுந்த ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்டு முன்னணியில் நின்று போராடும் ஒவ்வொரு போராளிக்கும் கடைக்கவேண்டிய அனைத்தையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் உன்னதத்தை இந்த தளபதி செயற்படுத்திக் காட்டியிருந்தான்" என்று தீபன் அண்ணை சொல்லிக்ககொள்ள வடகளத்தின் ‘போர்முகப் பயணத்தில்' சந்தித்திருந்த தளபதி விக்கீஸ் அண்ணையின் செயற்பாடுகள் நினைவில் முட்டிமோதின.


ஒருமுறை நாகர்கோவில் களத்தில் தளபதி விக்கீஸ் அண்ணையுடனான பயணம். இடிந்த நகர்வகழிகள். எனினும் சீராக அமைக்கப்பட்ட மறைப்பு வேலிகள். காப்பரண்களில் நிற்கும் போராளிகளின் உணர்வுகளுடன் உறவாடுவதற்காக நாங்களும், முன்னணி நிலைகளைப் பார்வையிட்டுக் களமுனை நிலைப்பாடுகளை பார்வையிட்டு களமுனை நிலைப்பாடுகளை சீர்செய்வதற்காக தளபதி விக்கீஸ் அண்ணையுடன் சென்றுகொண்டிருந்தோம்.

இருவரும் இணைந்துவிட பயணம் சுவாரசியமானது. விக்கீஸ் அண்ணையின் வயிறு குலுங்கும் பம்பல்கள். ஓரிடத்தில் தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த மறைப்புவேலி தும்புதும்பாகச் சுருண்டு போயிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மணல் பொரிந்துபோய் கறுப்பாயும், வெள்ளையாயும் இருந்தது. சீரான பாதைகளால் நகர்ந்துவந்த எங்களிற்கு கிழிந்துபோயிருக்கும் மறைப்புவேலி களத்தில் அசம்பாவிதங்கள் ஏதோ நிகழ்ந்திருக்கின்றன என்பதை உறுதிசெய்தன.

எங்களின் முன்னால் நகர்ந்துசென்ற தளபதி விக்கீஸ் அண்ணை எங்களைத் திரும்பிப் பார்த்தார். பார்வையில் ஆவேசம் தெரிந்தது. அவரை அறிந்தவர்கள் நினைக்கலாம் அது அவரது இயல்பான தோற்றம் என்று. ஆனால் நான் சொல்லும் ஆவேசம் அந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பிறிதான மாற்றம். "எங்களின்ர பெடியளுக்கு குடுக்கிறதுக்கு வந்த ஆமிக்காரங்கள் நல்லாய் வேண்டிக்கட்டிக்கொண்டு போட்டினம்.

எங்களின்ர இந்த வேலிக்குள்ள வந்தவுடனையும் தான் சண்டை தொடங்கினது. பெடியள் நல்ல குடுவை குடுத்து ஆமிக்காரங்களின்ர பொடி ஒண்டையும் எடுத்துவிட்டாங்கள். பரவாயில்ல ஆயுதங்களும் எடுத்திருக்கிறாங்கள். அது பெரிய சண்டையில்ல ஆனால் எங்களின்ர பெடியள் தெளிவாய் செயற்பட்டாங்கள்" என்றவர், சிங்களப் படைகளைக் கொல்லும் ஆர்வம் போராளிகளிடம் வேரூன்றி விருட்சமாய் வருவதாய்ச் சொன்னார்.

இத்தனையும் சொல்லி முடித்துவிட்டு "ஒவ்வொரு பத்தைக்குள்ளையும் சிங்களவனுக்குப் புதைகுழி கிண்டவேணும். கட்டாயம் கிண்டுவம். எங்களின்ர பெடியள் செய்துகாட்டுவாங்கள். அண்டைக்கு ஆமிக்காரங்களின்ர ஆர்.பி.ஜியள் பி.கேயள் எல்லாம் எடுத்திருக்கிறாங்கள்" என்று சண்டை நடந்த முன்னரணில் நின்று எங்களிடம் தெளிவுபடுத்தியது நினைவில் நின்றது.


அந்தச் சண்டை நடந்து முடிந்து ஓரிரு நாட்கள்தான் கடந்திருக்க வேண்டும். முன்னர் அடைக்கப்பட்டிருப்பதைப் போல அதே தகரங்கள். கம்பிக்கட்டைகளாக மரங்கள் என்று எல்லாமே புதிதாக வந்திருந்தன. அவற்றுக்கு அருகில் போய் நின்றபடியே "தம்பியாக்கள் வேலி அடைக்கேக்குள்ள கவனமாய் அடைக்கவேணும். மற்றது தகரத்துக்கு இந்த ஆணியளை அடிக்காதையுங்கோ. குடைஆணி எடுப்பிச்சுத் தாறன். இந்த ஆணி அடிச்சால் காத்துக்கு எல்லாத்தையும் பிச்சுக்கொண்டுபோகும். பிறகு இன்னும் ஒருக்கால் அதுக்குள்ள நிண்டு அடைக்க வேண்டிவரும்" என்று போராளிகளுடன் பக்குவமாய்க் கதைத்துக்கொண்டிருந்தது என்று அனைத்தும் நினைவில் வந்தன. இனி அந்த நாட்கள் மீண்டும் மலருமா...? இல்லை மலர்ந்து விடவேண்டும் என்று எண்ணிய மனசு துயரத்தில் துடித்தது.

களமுனை நினைவுகள் நெஞ்சை நிறைக்க தீபன் அண்ணையின் உரையை இடையில் தவறவிட்டு விட்டோம். மிகுதியை மனதில் பதியவைத்தோம். "எந்தக் களமுனையாக இருந்தாலும் சரி. அங்கு போரிடும் வீரருக்குப் பின்னால் பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை தளபதி விக்கீஸ் பொறுப்பேற்றுச் செய்கிறார் என்றால் களத்தில் நிற்கும் போராளிகள் இன்னும்; ஒருபடி மேலதிகமாய் செயற்படுவார்கள். ஏனென்றால் எந்தச் சவாலையும் இலகுவில் எதிர்கொண்டு தனக்குத் தரப்பட்ட பணியை ஒருபடி மேலாய் செய்துமுடிக்கும் திறமை அவரிடம் இயல்பாகவே நிலைபெற்றிருக்கிறது" என்ற தளபதி தீபன் அண்ணை "இத்தனை திறமைகள் விக்கீஸிடம் இருந்ததால் அவரை பின்தள நிர்வாகச் செயற்பாடுகளை சீர்செய்வதில் நான் ஈடுபடுத்திவந்தேன். குறிப்பாக ஜெயசிக்குறு அதனுடன் சமநேரத்தில் நடத்தப்பட்ட சிறாட்டிக்குளம், மன்னார், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மணலாறு களங்களில் நெருக்கடிகளின் மத்தியில் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்" என்றார்.

"இந்தக் கட்டத்தில ‘அண்ண நான் முன்னுக்கு நிண்டு ஆமிக்காரங்களைக் கொல்ல வேணும். எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். எனக்கு அடிபடுடதுக்கு சந்தர்ப்பத்தை நீங்கள் தரவேணும். நான் முன்னுக்கு நிக்கப்போறன்' என்று என்னிடம் பல தடவைகள் கேட்டிருந்தார். அந்த நேரத்தில எல்லாம் நான் ‘விக்கீஸ் நீங்கள் பின்தளத்தில் நிண்டு செயற்படுறது போராளிகளுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். நீங்கள் உங்களின்ர பணியை நல்ல சிறப்பாய் செய்யிறியள்.

தொடர்ந்து இந்தப் பணியை நீங்கள் செய்யுங்கோ" என்று சொல்லியிருந்தேன். இறுதியாக அவரின் விடாப்பிடியான வேண்டுதலால் அவருக்கு முன்தளத்தில நிண்டு சண்டை பிடிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தன்" என்ற தீபன் அண்ணை விக்கீஸ் அண்ணையின் குணவியல்புகள் பற்றியும் அவரது களமுனைச் செயற்பாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இறுதி அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்கள் கூட்டம் வீரத்தளபதியின் சாதனைகளைக் கேட்டு பெருமை கொண்டாலும் இழந்துவிட்டோமே என்ற வேதனை அனைவரையும் ஓங்கி அறைந்தது.

இத்தனையையும் கடந்து தீபன் அண்ணையின் அஞ்சலி உரை முக்கிய கட்டம் ஒன்றை எட்டியிருந்தது. "ஓயாதஅலைகள்-03 நடவடிக்கை ஆரம்பமாகி ஆனையிறவு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது. நூற்றுக்கணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட களமுனையில் சிதறிக் கிடக்கிறார்கள். தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக சிங்களதேசம் உலகெங்கும் கையேந்திப் பெற்ற ஆயுதங்கள் வெடிமருந்துகள் என்றெல்லாம் ஆனையிறவு நிலங்கள் எல்லாம் பரவிக்கிடக்கின்றன. உண்மையில் அது சிங்களத்தின் மரணக் களமாகப் பூத்திருந்தது. சிங்களப் படைகளின் நிலைகள் காப்பரண்கள் எல்லாம் இடிந்தும் சிதறியும் மரணக்களத்தின் நீண்டதூரத்தைக் கடந்துவிட்டன.

"சிங்களதேசத்தின் உயிரற்ற பிணங்களை தாங்கிய அந்த நிலம் விடுதலை பெற்றிருந்தது" என்று தீபன் அண்ணை உரையாற்றிக்கொண்டிருக்க துயரத்தில் துவண்டவர்கள் அனைவரும் ஒருதடவை மீண்டெழுந்தனர். அனைவரது காதுகளும் முன்னரைவிட இன்னும் கூர்மையாகிவிட்டன. அடுத்தது என்ன சொல்லப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் தீபன் அண்ணாவின் முகத்தையும் அவரது வாயசைவையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சண்டைகளின் உக்கிரத்தில் போராளிகள் முன்னேறிக்கொண்டிருந்தனர். சிங்களப் படைகள் திணறிக்கொண்டிருந்தன. பிரிகேடியர் பால்ராஜ் அண்ண இந்த நிலத்தின் மீட்புக்காக இத்தாவிலில் தரையிறங்கியிருந்தார். ஆனையிறவைக் கைப்பற்றியிருந்த எங்களுடைய போராளிகள் இத்தாவில் தரையிறங்கியிருக்கும் பால்ராஜ் அண்ணாவின் அணியுடன் சென்று இணையவேண்டும். தொடர் சண்டை. பளை வரைக்கும் சிங்களப் படைகளைக் கலைத்துவிட்டோம். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருத களத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிட்டது." என்று சொல்ல மண்டபம் அமைதியால் நிறைந்தது.

- அ.லோகீசன்.

Thursday, December 11, 2008

2ம் ஆண்டு நினைவலைகள்

Wednesday, December 10, 2008

போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடைநீக்கியாகச் செயற்பட்ட தலைவனும்!



Blog Archive