Saturday, February 14, 2009

உள்ளிருந்து ஒரு குரல்

சிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர்.

அம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன் செருந்தியின் தாயார் கோயிலுக்குச் சென்றார் இருவரும் நல்ல முதியவர்கள். கோயிலுக்குப் பக்கத்தில் சிறு பற்றைக் காடுகளும் படையினரின் அரண்களும் இருந்தன. படையரண்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது பற்றைக்குள்ளிருந்து விசில்சத்தமொன்று இவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. திரும்பிப் பார்த்தபோது சிங்களப்படையாள் ஒருவன் இவர்களிருவரையும் பற்றைக்குள் வருமாறு சைகையால் அழைப்பு விடுத்தான். இடுப்புக்குக் கீழே அவனுடலில் உடையில்லை திகைத்துப் போன அந்த மூதாட்டிகள் இருவரும் திரும்பிப் பாராமல் வந்த வழியே வீட்டைச் சேர்ந்தனர்.

செருந்தியின் அம்மா தனது பெட்டி படுக்கையை அடுக்கிக் கொண்டு வன்னிக்கு வந்து சேர்ந்தார். நடந்ததையெல்லாம் தனது மகளிடம் கூறினார். தங்கையையும்இ தம்பியையும் கூட்டிக்கொண்டு சென்று ஊரில் வாழும் நினைப்பை அடியோடு மறந்தார். "சிங்களப் படைகள் ஊரில் இருக்கும் வரை தமிழ்ப் பெண்களின் வாழ்வு எப்போதும் அச்சம் நிரம்பியதாகவே இருக்கும் வெறிகொணட் அந்த மிருகங்களுக்கு இளையவர்இ முதியவர் என்ற வேறுபாடுகள் எதுவும் தெரிவதில்லை.

துப்பாக்கி ஏந்தியபடி ஊருக்குச் செல்வது தான் சரியான முடிவு" என்பதைக் களத்தில் நிற்கும் செருந்தி தாயாருக்கு உணர்த்தினார். அவரது தாயாரும் இப்போது உண்மையை உணர்ந்து இடருக்குள் வாழ்கின்றார் என்றபோதும் இப்போது அவருக்கு அச்சங்கள் ஏதுமில்லை.முன்னேறிவரும் எதிரிக்கு சுடு கருவியால் பதிலுரைக்கச் சமர்முல்லை இப்பொழுதும் களத்தில் நின்று கொண்டிருக்கின்றார். 2007 மார்ச் மாதத்திலிருந்து மன்னாரில் தொடங்கிய அவரது களமுனை வாழ்வுக்கு ஒருநாள் கூட ஓய்வுகிடைக்கவில்லை. அக்கராயன் பகுதியில் நடந்த மோதலொன்றில் ஒரு சிறிய சன்னம் அவரது மேற்கையைத் துளைத்தது. காதுக்கு அண்மையாகவிருந்த மருத்துவ நிலை யுத்திலேயே அந்த விழுப்புண்ணுக்கான சிகிச்சையை மேற்கொண்டுவிட்டுத் தொடர்ந்தும் காப்பரணிலேயே அவர் நின்று கொண்டார்.

சமர்முல்லையின் பெரியம்மாவின் மகளுக்குத் தீரா நோய்இ போர் நெருக்கடியின் நடுவிலும் அவளை மேற்சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைத்தனர். வவுனியா மருத்துவமனையில் நின்ற காலத்தில் பெரியம்மாவின் மகள் அங்கு பார்த்த பல கட்சிகளால் அதிர்ந்து போனாள். விடுதலைப்புலிகளின் சடலங்கள் என்று அடுக்கிவைக்கப்பட்ட அறைகளில் பொதுமக்களின் சடலங்களே கிடந்தன. சிங்களம் ஊடகங்களில் பரப்புரை செய்வது போல அரச செலவில் அடக்கம் செய்யப்படும். அவையெல்லாம் விடுதலைப் புலிகளினுடையவை அல்ல. படையினர் முன்னேறி வந்த போது இ அகப்பட்ட தமிழ் மக்களை வேறு பிரித்து இளவயதினர் சடலங்களாகி மருத்துவமனைச் சவச்சாலையில் கிடத்தப்பட்டிருந்தனர். தான் கண்டதையுங் கேள்விப்பட்டதையும் பார்த்துப் பயந்துபோன சமர்முல்லையின் அக்கா.. உடனயாகவே பாதை திறக்க வன்னிக்கு வந்துசேர்ந்தார்.

வருவதற்கிடையில் தனது மூன்று மகன்மாரையும் கூட்டிக்கொண்டு படைவல்வளைப்புப் பகுதிக்குள் போய்விட்டார். இவர்களது சின்னம்மாவின் பிள்ளைகள் எங்கே? சின்னம்மா எங்கே? அனைத்தையுங் கேள்வியுற்ற சமர்முல்லைக்கு வேதனையாகவிருந்தது. யாவற்றையும் கண்முன்னே கண்டு நிலைமையைத் தெரியப்படுத்த வந்த அக்காவுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. சமர்முல்லையைத் தொடுவதற்குச் சாவு பயந்துபோயிருக்கின்றது. போராடும் அகவையில் எதிரியிடம் அகப்பட்ட அவரது தம்பிமார்களைச் சாவு துவைத்து மிதித்துப் போட்டிருக்கின்றது.எப்படி வாழ்கின்றோம் என்பதைப் பொறுத்தேத சாவு வந்து எதிர்ப்படும்இ போராட மறப்பவர் கொல்லப்படுவர். தற்காத்துக்கொள்பவர் போரை வெல்வார். சமர்முல்லையும் அவரது உடன் பிறவா மூன்று தம்பிகளும் இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுக்கள்.

களத்தில் நின்று போராடி விழுப்புண்ணேந்திப் படுக்கை ஓய்வில் இருக்கிறார் கெங்கா களத்தில் எதிரிகளின் சன்னடிமழைக்கு நடுவில் நின்றபோதும் அவர் நடுங்கியதில்லை. போராடும் வேளையில் வீரச்சாவை எதிர்கொண்ட தோழியரின் வித்துடல்களைக் கண்டபோதும் அவர் துவண்டதில்லை. எதிரியின் சன்னந் துழைத்து வயிறு கிழிந்தபோதும் அவர் வாடித் துடிக்கவில்லை. ஆனால் தருமபுரம் மருத்துவமனையில் ஏழு அகவைகொண்ட மதியழகன் என்ற சிறுவனைப் பார்த்தபோது அவர் நடுநடுங்கிப் போனார்.

மதியழகன் கல்லாறு மக்கள் குடியிருப்பில் உறங்கிக் கொண்ருந்தபோது கிபிர் விமானங்கள் நள்ளிரவு வேளையில் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தான். வயிற்றுப் பகுதியையும் முள்ளந்தண்டையும தாக்கிய சன்னம் அவனது இயக்கத்தை இடுப்பின் கீழே முடக்கிப்போட்டிருந்தது. அன்றைய நாள் அவனது தாயும்இ உடன்பிறப்பும் இவனுடன் காயமடைந்தனர். தாயின் தந்தை கொல்லப்பட்டார். கிழிந்த நார்போல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை மருத்துவர்கள் மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். மிகவும் கடினப்பட்டுக் காப்பாற்றிவிட்டனர். பல நாட்களாக உணவின்றிக் கிடந்த அவனது தோற்றம் பார்ப்பவர் மனங்களை உலுக்கியெடுத்து.

கெங்காவுக்கு அவனைப் பார்க்கையில் அந்த எதியோப்பியக் குழந்தை தான் நினைவுக்கு வந்தது. ஓட்டியுலர்ந்த உடல்இ உணவுக்கு வழியற்ற நிலை. அருகிலே அக் குழந்தையின் சாவுக்காய் தவங்கிடக்கும் பிணந்தின்னிக் கழுகு அன்று உலகையே ஒரு கணம் உலுக்கியெடுத்த அந்த எதியோப்பியக் குழந்தையின் உருவம் அவளது கண்ணெதிரே தெரிந்தது.குச்சிக்குச்சிக் கையுடனும் கால்களுடனும் உள்ளொடுங்கிய விழியிரண்டுடனும் இடுப்பின் கீழ் உணர்வற்ற நிலையில் மதியழகன் கிடந்தான்.பட்டினிக்கு பதிலாகப் படுகாயம். பிணந்தின்னிக் கழுகாகப் போர்வெறி தலைக்கேறிய சிங்கள அரசும் அதற்கு உதவும் நாடுகளினாலும் சிறிது சிறிதாகச் செத்துக்கொண்டிருக்கின்றான். அந்தச் சிறுவன் வாழும் பிணமாகக் காட்சி தரும் அவனது நிலை ஈழத்தின் எந்ச் சிறுவருக்குமே வரக்கூடாது. கிட்டத்தட்ட மதியழகன் போலவே வயிற்றுக் காயத்தால் உடல் பிய்ந்து பாதிக்கப்பட்டாலும் மெதுவாகத் தேறியெழுந்து நடமாடக் கற்றுக் கொண்டிருக்கிறாள் கெங்கா. மதியழகனைப் போல உயிர் துடிக்கச் செத்துக் கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகளுக்காக அவளது உள்ளம் நெருப்பாய்க் கொதித்தது.

சிங்களம் ஏவிவிடும் எறிகணைகளும் வான்குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் ஒரு முறையுடன் ஆறி அடங்கிப்போய்விடும் ஆனால் அவை மூட்டிவிட்ட மனங்களின் நெருப்பு மட்டும் ஒருநாளும் ஆறி அடங்கிவிடுவதில்லை. அது தணல் பூத்துக்கிடக்கும் தக்க வேளையில் மூசியெழுந்து மூர்க்கங் கொண்டு சுழலும் ஒருமுறையல்ல பலமுறை எரிக்கும் பலம் அதனுக்குண்டு கருக்கும் வேகம் அதனுக்குண்டு.வீரத்தேவி பெயருக்கேற்றாற்போல வீரத்தேவிதான். 2ஆம் லெப். மாலதி படையணிக்கு அவளது வீரமும் பலம் சேர்ந்திருக்கின்றது. வீட்டுக்கொருவர் போராடவேண்டுமென்ற அழைப்புக் கிடைக்கும் முன்பே அவள் போராடப் போய்விட்டாள். அவள் மட்டுமல்ல அவருடன் வீட்டில் நான்கு பேராகப் போராட்டத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். தந்தை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுடன் இணைந்து செயற்படுகின்றார். தமையன் ஒருவரும் தம்பி ஒருவருமாக களத்தில் பணியாற்றுகின்றனர். லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார்ப் பிரிவிலிருந்து மற்றொரு அண்ணன. லெப்.கேணல் வீரத்திலகனாக மண்ணுள் விதையாகிப் போனார். இப்போது வீரத்தேவியும் இவர்களுடன் இணைந்து தேசக் கடமையைத் தோள்மேல் சுமக்கின்றாள்.

"தனியொருவர் மட்டும் போராடினால் போதாது. குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் இணைந்து தோள் கொடுக்கும்போதுதான் விடுதலையை வெல்லமுடியும்" என்பது அவளது முடிவு தமிழர் நிலத்தைக் கூறுபோட்டுப் பிளந்து துண்டாடிவிட எதிரிமுனைகின்றான். காடுஇ வெளிஇ கடல் வயல் என்று பாராமல் அங்குலமங்குலமாக நகர்ந்து படையெடுத்து வருகின்றான். வீடுஇ தோட்டம் தேடிய தேட்டம் யாவற்றையும் விட்டுவிட்டு மக்களெல்லாரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். தமிழீழத்தில் சண்டை நடக்காத ஊர் ஏது? நிலவுக்குப் பயந்தொளித்துப் பரதேசம் போகமுடியாது. அதுபோலப் போருக்கஞ்சி ஓடவும் முடியாது வீரத்தேவியின் குடும்பத்தைப் போல எல்லாக் குடும்பமும் போருக்குத் திரும்பினால் வரும்படை சரியும் விரைவில். மூக்கால் அழுதுகொண்டும் கதைப்பதற்குத் திருப்பிக் கதைத்துக்கொண்டும் இருக்கும் வானியைப் பார்த்தால் எவரும் துணிந்தவள் என்று சொல்லமாட்டார்கள். எந்நேரமும் பகிடியும் பம்பலுமாக அவளிருப்பதைப் பார்த்தவர்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்குபவளாக அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள். அவளிருப்பாள் என்றும் நம்பவே மாட்டார்கள்.

வாணி துணிந்தவள். எத்தகைய துன்பத்தையும் தாங்குபவள். துப்பாகியுடன் களத்தில் நிள்றாள். ஒளிப்படக்கருயுடன் தளத்ததில் நின்றாள். இடப்பெயர்வுக்கு நடுவில் ஓயாது உழைத்தார். போர்க்களம் அழைத்த போதெல்லாம் புயலாய் நின்றாள். சிறுத்தை அணியின் சிறப்புப் பயிற்சி முறியடிப்புக்கான பயிற்சிஇ சிறப்புப் பாதுகாப்புப் பணிஇ நிதர்சனத்தின் படப்படிப்புப் பயிற்சி என்று பலதரப்பட்ட பணிகளைச் செய்து அறிவியல் நகரில் சண்டைப் படப்பிடிப்புப் பணியில் நின்றபோது சாவு அவளை வந்து சந்தித்தது. அதுவரையும் சிரித்துக்கொண்டும்இ கதைத்துக்கொண்டும்இ இயங்கிக்கொண்டும் இருந்தாள் அவர்இ ‘ஈரத்தீ முழு நீளப் படத்தில் அவள் நடந்தாள். உண்மையிலே ஒரு ஈரத்தீயாகவே இருந்தாள் அவள். கலைப்பணியைத் தாங்கி மக்களிடையே நின்றுழைத்தாள். போர்ப் பணியைத் தாங்கி களம் நடுவே நின்றுழைத்தாள். மேஜர் ஈழவாணி சிரிப்புடனே மடிந்தபோது எவ்வித தேசமுமின்றி அவளது கைகளுக்கு நடுவே பாதுகாப்புடன் கிடந்தது படப்பிடிப்புக் கருவி அதில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே எம் விடுதலைப் போரை எடுத்துரைப்பதற்கான கருவி.

-அம்புலி-

0 comments:

Blog Archive