Saturday, August 16, 2008

மேஜர் நாயகன்

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது.

இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.

நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவவளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினிமுகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான்.

நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான். எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

0 comments:

Blog Archive