மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.
அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால்இ ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.
புலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயதுஇ வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா? என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.
அப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.
சில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.
ஏன் இறந்தான் நிதி ? பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ? மரணம் என்பது என்ன ? நாம் ஏன் வாழ்கின்றோம் ? எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது ? தமிழனுக்கு என்ன நடக்கிறது ? எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் ? விடுதலையில் நாம் வாழ்கின்றோமா ? சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.
ஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.
மன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதிஇ அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார்( நிக்கலஸ் மைக்கல் குருஸ் ) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதிஇ அன்சார்இ எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.
எமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண்இ இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடிஇ எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே ! இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா !
எஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமிழ் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்பேன். ஐயம் இல்லை எனக்கு.
Monday, August 25, 2008
வீரவேங்கை நிதி
Posted by defencetamil at 12:21 PM
Labels: மாவீரர்கள், வீரவேங்கை
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
August
(122)
- எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன?
- 'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்
- மாமனிதர் ஜெயக்குமார்
- வரலாறு தொடர்கின்றது....
- கடற்கரும்புலி கப்டன் பாலன்.
- மேஜர் சிட்டு
- லெப்.கேணல்.வீரமணி
- 2ம் லெப்.தமிழழகி
- லெப்டினன்ட் சீலன்
- 2ம் லெப்டினென்ட் மாலதி
- லெப். செல்லக்கிளி - அம்மான்
- லெப்டினன் கேணல் திலீபன்
- வீரவேங்கை இயல்வாணன்
- லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
- கப்டன் அறிவு
- கப்டன் திவாகினி
- வீரவேங்கை.ஆனந்
- வீரவேங்கை அன்பழகன்
- வீரவேங்கை சுயந்தன்
- வீரவேங்கை நிதி
- லெப்டினன்ட் மலரவன்
- கப்டன். லிங்கம்
- கேணல். ரமணன்
- கேணல். ரமணன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- லெப்.கேணல் கௌசல்யன்
- லெப்.கேணல் கௌசல்யன்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- தியாகி அன்னை பூபதி
- தியாகி அன்னை பூபதி
- லெப்.கேணல் விக்டர்
- லெப்.கேணல் விக்டர்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் ராயு
- கேணல் ராயு
- லெப் கேணல் நிறோஜன்
- லெப் கேணல் நிறோஜன்
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பூ காந்தாள்
- தேசியப் பூ காந்தாள்
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் ஈழமாறன்
- கப்டன் ஈழமாறன்
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- கரும்புலி மேஜர் சிறிவாணி
- மேஜர் சோதியா
- கரும்புலி மேஜர் டாம்போ
- மேஜர் தங்கேஸ்
- மேஜர் நாயகன்
- வீரவேங்கை பகீன்
- மேஜர் மாதவன்
- லெப்டினன்ட் பாவலன்
- 2ம் லெப்டினன்ட் பூபாலினி
- லெப்.கேணல் ஜொனி
- லெப். கேணல் ரவி
- மேஜர் வெற்றியரசன்
- கடற்கரும்புலி மேஜர் சந்தனா
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- லெப்.கேணல் மணிவண்ணன்
- மேஜர் இளநிலவன்
- கரும்புலி மேஜர் தனுசன்
- மேஜர் மில்ரன்
- லெப்டினன்ட் கேணல் குமுதன்
- கரும்புலி லெப்டினன்ட் கேணல் பூட்டோ/சங்கர்
- லெப்டினன்ட் கேணல் அக்பர்
- கரும்புலி மேஜர் ஆந்திரா
- லெப்.கேணல் கலையழகன்
- லெப்.கேணல் நிலவன்
- மேஜர் பசிலன்
- முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி
- லெப்.கேணல் அருணா-அருணன்
- கப்டன் மயூரன்
-
▼
August
(122)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment