வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.
இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஜனந்தினி ஆரம்பித்தாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதரண பரீட்சையில் திறமைச்சித்திகள் பல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா இராணுவத்தில் தமிழர் மீதான தாக்குதல்கள்.
சிங்கள இராணுவம் தமிழர் மீது கேரத் தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற் கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. இராணுவ நடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான பொக்கிசமான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் கோபம் கொண்டாள். கல்வி... கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை...... கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அந்தத் துறையைப் பயில்வதற்காக அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்டாள்.
தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிட வென சிங்கள இராணுவத்தால் சூரியக்கதிர் 01 என நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றுவதில் கடமை உணர்வில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் புனித சேவையில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.
இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும்.
Saturday, August 16, 2008
2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
Posted by defencetamil at 4:52 PM
Labels: 2ம் லெப், மாவீரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
August
(122)
- எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன?
- 'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்
- மாமனிதர் ஜெயக்குமார்
- வரலாறு தொடர்கின்றது....
- கடற்கரும்புலி கப்டன் பாலன்.
- மேஜர் சிட்டு
- லெப்.கேணல்.வீரமணி
- 2ம் லெப்.தமிழழகி
- லெப்டினன்ட் சீலன்
- 2ம் லெப்டினென்ட் மாலதி
- லெப். செல்லக்கிளி - அம்மான்
- லெப்டினன் கேணல் திலீபன்
- வீரவேங்கை இயல்வாணன்
- லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
- கப்டன் அறிவு
- கப்டன் திவாகினி
- வீரவேங்கை.ஆனந்
- வீரவேங்கை அன்பழகன்
- வீரவேங்கை சுயந்தன்
- வீரவேங்கை நிதி
- லெப்டினன்ட் மலரவன்
- கப்டன். லிங்கம்
- கேணல். ரமணன்
- கேணல். ரமணன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- லெப்.கேணல் கௌசல்யன்
- லெப்.கேணல் கௌசல்யன்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- தியாகி அன்னை பூபதி
- தியாகி அன்னை பூபதி
- லெப்.கேணல் விக்டர்
- லெப்.கேணல் விக்டர்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் ராயு
- கேணல் ராயு
- லெப் கேணல் நிறோஜன்
- லெப் கேணல் நிறோஜன்
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பூ காந்தாள்
- தேசியப் பூ காந்தாள்
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் ஈழமாறன்
- கப்டன் ஈழமாறன்
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- கரும்புலி மேஜர் சிறிவாணி
- மேஜர் சோதியா
- கரும்புலி மேஜர் டாம்போ
- மேஜர் தங்கேஸ்
- மேஜர் நாயகன்
- வீரவேங்கை பகீன்
- மேஜர் மாதவன்
- லெப்டினன்ட் பாவலன்
- 2ம் லெப்டினன்ட் பூபாலினி
- லெப்.கேணல் ஜொனி
- லெப். கேணல் ரவி
- மேஜர் வெற்றியரசன்
- கடற்கரும்புலி மேஜர் சந்தனா
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- லெப்.கேணல் மணிவண்ணன்
- மேஜர் இளநிலவன்
- கரும்புலி மேஜர் தனுசன்
- மேஜர் மில்ரன்
- லெப்டினன்ட் கேணல் குமுதன்
- கரும்புலி லெப்டினன்ட் கேணல் பூட்டோ/சங்கர்
- லெப்டினன்ட் கேணல் அக்பர்
- கரும்புலி மேஜர் ஆந்திரா
- லெப்.கேணல் கலையழகன்
- லெப்.கேணல் நிலவன்
- மேஜர் பசிலன்
- முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி
- லெப்.கேணல் அருணா-அருணன்
- கப்டன் மயூரன்
-
▼
August
(122)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment