கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.
அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க---திண்ணம் கொண்டான் மயூரன்.
பருத்தித்துறை ஆத்தியடியில்------
பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.
அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே- காட்லியின் கல்வியைக் கை விட்டு----1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.
இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க......ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.
மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.
அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா..........யா?.புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.
------------------
இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ......? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய்--அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும்.வாங்கி வா என்று அனுப்பினான்.
பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை; மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள்.
ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான்.
மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.
மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்------------
விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊhதியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
-தீட்சண்யன்..
மயூரனின் நண்பர்களின் நினைவில்----------------
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டாய்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவி;ல்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம்
எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே.........
..நண்பர்கள்.......
மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்)கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை---
என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.
Friday, August 15, 2008
கப்டன் மயூரன்
Posted by defencetamil at 3:57 PM
Labels: கப்டன், மாவீரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
August
(122)
- எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன?
- 'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்
- மாமனிதர் ஜெயக்குமார்
- வரலாறு தொடர்கின்றது....
- கடற்கரும்புலி கப்டன் பாலன்.
- மேஜர் சிட்டு
- லெப்.கேணல்.வீரமணி
- 2ம் லெப்.தமிழழகி
- லெப்டினன்ட் சீலன்
- 2ம் லெப்டினென்ட் மாலதி
- லெப். செல்லக்கிளி - அம்மான்
- லெப்டினன் கேணல் திலீபன்
- வீரவேங்கை இயல்வாணன்
- லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
- கப்டன் அறிவு
- கப்டன் திவாகினி
- வீரவேங்கை.ஆனந்
- வீரவேங்கை அன்பழகன்
- வீரவேங்கை சுயந்தன்
- வீரவேங்கை நிதி
- லெப்டினன்ட் மலரவன்
- கப்டன். லிங்கம்
- கேணல். ரமணன்
- கேணல். ரமணன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- லெப்.கேணல் கௌசல்யன்
- லெப்.கேணல் கௌசல்யன்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- தியாகி அன்னை பூபதி
- தியாகி அன்னை பூபதி
- லெப்.கேணல் விக்டர்
- லெப்.கேணல் விக்டர்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் ராயு
- கேணல் ராயு
- லெப் கேணல் நிறோஜன்
- லெப் கேணல் நிறோஜன்
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பூ காந்தாள்
- தேசியப் பூ காந்தாள்
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் ஈழமாறன்
- கப்டன் ஈழமாறன்
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- கரும்புலி மேஜர் சிறிவாணி
- மேஜர் சோதியா
- கரும்புலி மேஜர் டாம்போ
- மேஜர் தங்கேஸ்
- மேஜர் நாயகன்
- வீரவேங்கை பகீன்
- மேஜர் மாதவன்
- லெப்டினன்ட் பாவலன்
- 2ம் லெப்டினன்ட் பூபாலினி
- லெப்.கேணல் ஜொனி
- லெப். கேணல் ரவி
- மேஜர் வெற்றியரசன்
- கடற்கரும்புலி மேஜர் சந்தனா
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- லெப்.கேணல் மணிவண்ணன்
- மேஜர் இளநிலவன்
- கரும்புலி மேஜர் தனுசன்
- மேஜர் மில்ரன்
- லெப்டினன்ட் கேணல் குமுதன்
- கரும்புலி லெப்டினன்ட் கேணல் பூட்டோ/சங்கர்
- லெப்டினன்ட் கேணல் அக்பர்
- கரும்புலி மேஜர் ஆந்திரா
- லெப்.கேணல் கலையழகன்
- லெப்.கேணல் நிலவன்
- மேஜர் பசிலன்
- முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி
- லெப்.கேணல் அருணா-அருணன்
- கப்டன் மயூரன்
-
▼
August
(122)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment