Tuesday, September 30, 2008
அந்நியர் ஆட்சியும் மக்கள் எதிர்ப்பும்
Posted by defencetamil at 12:26 PM 0 comments
Labels: போராட்ட வரலாறு
Wednesday, September 24, 2008
Monday, September 22, 2008
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
Posted by defencetamil at 10:31 PM 0 comments
Labels: மாவீரர்கள், லெப்.கேணல்
Saturday, September 20, 2008
யாழ்ப்பாண படையெடுப்பு தமிழ்மக்களுக்கு ஒரு செயன்முறைப்பாடம்
Posted by defencetamil at 9:19 PM 0 comments
Labels: போராட்ட வரலாறு
போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாக செயற்பட்ட தலைவனும்
Posted by defencetamil at 9:12 PM 0 comments
Labels: தலைவர்
Monday, September 15, 2008
நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்
தமிழரின் கடற்புலிகளும் - சிங்களக்கடற் படையும் பொருதும் சண்டை அரங்காகக் கடல் உள்ளது. காப்புகளோ! மறைவிடங்களோ! அற்ற திறந்த களமாக அது கிடக்கின்றது. வெற்றிபெறு! அல்லது மூழ்கிப்போ! என்பது போலத்தான் கடற்சண்டைகளின் போரியற்பரிமாணம் உள்ளது.
வேரலைகளுக்கு ஈடுகொடுத்துச் சண்டையிடக்கூடிய கடற்கலங்கள் சிங்களக்கடற் படையிடமுண்டு ஆனால் சாதாரண படகுகளே கடற்புலிகளின் சண்டைக்கப்பல்களாகச் செயற்படுகின்றன.
ஆழ்கடலில், பேரலைகளையும் சமாளித்தல் எதிரியின் கடற்கலங்களுடன் வெற்றிகரமாக மோதும் கடற்புலிகளின் சண்டை வரலாறு துணிகரமானது கடற்புலிகளின் படகுத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கரும்புலிப் படகுகள் எதிரிக்கு கிலி ஏற்படுத்தக்கூடியவை எதிரியின் ~டோறா வகைக் கடற்கலனிலிருந்து பாரிய கட்டளைக்கப்பல்கள் வரை கடற்கரும்புலிகளின் தாக்குதல்களில் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.
சிங்களக் கடற்படையினரின் பார்வையில் ஒவ்வொரு கரும்புலிப்படகும் ஒவ்வொரு 'நாசகாரிக்கப்பல்களைப்" போன்றது ஆனால் அனைத்து வகைப்பலங்களாலும் அரண் செய்யப்பட்டபடி தூரநின்று குண்டு மழை பொழிந்து எதிரிக்கப்பல்களை மூழ்கடிக்கும் அந்தவகை நாசகாரிக் கப்பல்களைப் போல இந்த வகை 'நாசகாரிப்பல்கள்" இல்லை இது எதிரியின் கடற்கலங்களை முத்தமிடும் வரை ஓட்டிச்செல்ல வேண்டும்.
எதிரிக்கப்பலின் குண்டு மழையில் அகப்படாமல் அதை நோக்கி இலாவகமாக வழுக்கிச்செல்ல வேண்டும். வெற்றிகரமாக மோதி வெடித்தாலும் சாவுதான் முயற்சியில் தோற்றுப்போனாலும் சாவுதான். வென்று சாக இந்தக் கடற்கரும்புலிகள் படகோட்டத்தில் காட்டும் விவேகமும் - சாதுரியமும் தமிழினத்தின் வரலாற்றில் அதி உன்னத வீரத்தியாகமாகவே இருக்கும்.
தமிழீழக் கடலை ஆக்கிரமிக்க ஆசைப்படும் சிங்களக் கடற்படையை கனவிலும் அச்சுறுத்தும் சக்தியாகக் கடற்புலிகள் உள்ளனர் - கடலும் - தரையும் இணைந்தது தான் தமிழரின் தாயகம்.
இதில் கடற்பரப்பை மீட்டெடுக்கும் தாயகப்போரில் கடலில் காவியமான சில கடற்கரும்புலிகளின் மனதை அள்ளும் சம்பவங்கள் இங்கே கோர்வையாக்கப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள் இவை வெறும் கதைகளல்ல தமிழீழ தேசியத்தின் உயிர் அணுக்கள். எதிர்கால சந்ததியின் தேசப்பற்றை உலுக்கி விடப்போகும் அதிர்வலைகள்.
பழிக்குப்பழி
~தொழிலுக்குப் போன என்ர அப்பாவைக் கொலை செய்தவனை நான் சும்மா விடமாட்டன்? இந்த ஓர்மந்தான் சஞ்சனாவைக் கரும்புலியாக மாற்றியது
ஏற்கனவே ஒரு தடவை சிறிலங்காக் கடற்படையால் தொழிலுக்குப் போன அப்பாவைக் கடலில் வைச்சுக் கைது செய்த போது, வீட்டில் ஒரு நேர உலை வைக்க அம்மா பட்ட பாட்டை அவள் நேரில் பார்த்திருந்தாள். அந்த நேரத்தில் சிறியவளாக இருந்தாலும் அம்மாவுடன் இணைந்து குடும்பச் சுமையைத் தாங்கியவள் சஞ்சனா அப்போதே அவளது மனத்தில் விடுதலை பற்றிய கருமுளை கொள்ளத் தொடங்கியதை யாரும் அறியவில்லை.
சஞ்சனா வீட்டில் இருந்த காலத்தில் பொறுப்புணர்வோடு எல்லா வேலைகளையும் செய்வாள்.
யாருடனும் அதிகம் பேசமாட்டாள்.
சஞ்சனா வீட்டில் இருக்கிறாளா...? இல்லையா...?
என்று உள்ளே போய்த்தான் பார்க்க வேண்டும்...
அந்தளவு அமைதியானவள் அவள்
அச்ச உணர்வு இவளிடத்தில் அதிகம் இருந்தது.
எதைக் கண்டாலும் கலக்கம்...
பாம்பைக் கண்டா... அட்டையைப் பார்த்தா... மயிர்க்கொட்டியைப் பார்த்தா...
ஏன் சில மனிதர்களைக் கண்டாலே அவளுக்கு அச்சம். தனிய எங்கையும் போகமாட்டாள் அவளுக்கு எல்லாத்துக்குமே அம்மா வேணும்...
~படிப்பு அவளுக்கு விருப்பமான ஒன்றல்ல...
பொம்பிளப் பிள்ளையள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயத்தில் தான் அவள் பத்தாவது வரை படித்து முடித்திருந்தாள்.
அப்பா விடுதலையாகி வந்தபின் ஒருநாள் சஞ்சனாவைக் காணவில்லை.
வீட்டை விட்டுப் பக்கத்தில் கூட ஓர் இடமும் போகாதவள் எப்படி எங்கே போயிருப்பாள்....? இவள் போராடப் புறப்பட்டிருப்பாள் என்ற எண்ணம் அம்மாவுக்கு இல்லை.
அம்மா கலங்கிப் போய் எல்லா இடமும் தேடினாள். ஆனால் போன இடம் தெரிந்த போது அம்மா அமைதியானாள்.
~என்ர பிள்ளையா...?
~போராடவா....?
இயக்கத்தில் இவளால நிண்டு பிடிக்கேலாது இண்டைக்கோ நாளைக்கோ அவள் திரும்பி வருவாள் என்று அம்மா எதிர்பார்த்தாள்.
ஆனால், பிள்ளையைப் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும் அம்மாவுக்குப் பெரும் புதுமையாக இருந்தது.
~என் மகளா....?
அம்மா தனக்குள்ளே பல தடவைகள் கேள்வி கேட்டுப் பார்த்து விட்டாள். மிஞ்சியது வியப்புத்தான்.
சஞ்சனாவின் சண்டைக் களங்கள் நீண்டன.
சில காலம் அரசியல் பணியிலும் அவள் செயற்பட வேண்டி இருந்தது.
முல்லைச் சமர் வெற்றியின் பின் முல்லை மண்ணில் நடந்த பல்வகைப்படைக்கலப் பயிற்சியின் போது அவள் தனது கால் ஒன்றை இழக்க நேருகிறது.
ஆனால் அதன் பின் அவளுக்குள் ஒரு புதுவேகம்; மாற்று வலுவுள்ள காலைக் கொழுவிக் கொண்டு மீண்டும் கடலில் அவள் இறங்கி விட்டாள்.
'இந்நிலையில் அக்காவின் காலைப் பறித்தவனை சும்மா விடமாட்டன்" என அவள் தம்பியும் போராளியாகி 2 - ஆம் லெப். சோழ நிலவனாக வீரச்சாவையும் தழுவி விட்டான்.
இந்நிலையில் தான் கடற்றொழிலுக்குப் போன சஞ்சனாவின் தந்தை திரும்பி வரவில்லை.
'இரவு சிறீலங்காக் கடற்படை மீன் பிடிக்கப் போன சனத்தின்ர படகுகள் மீது தாக்குதல் செய்ததாம்.... தொழிலுக்குப் போன கனபேர் வீடு திரும்பேல்ல... அதில சஞ்சனாவின்ர அப்பாவும் ஓராள்..."
செய்தி அவள் காதுகளுக்கு எட்டிய போது அவள் துடித்துப் போனாள்.
வீட்டு நிலைமை அவள் முன் கேள்விக்குறியாகி நின்றது. தங்கையின் படிப்பு, அவள் எதிர்காலம், அன்றாட வாழ்க்கைச்செலவு என ஒவ்வொன்றும் அவள் முன் பெரும் சுமையாகத் தெரிந்தது.
ஆனாலும்,
'அம்மா சமாளிப்பா..." அவள் மனத்தில் உறுதி இருந்தது.
அதனால் ~பழிக்குப் பழி வாங்கும் உணர்வு அவளுக்குள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அவள் தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தலைவருக்கு மடல் எழுதினாள்.
ஆனாலும் தலைவரிடமிருந்து இசைவு வர அவள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனினும் அவளது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இறுதியில் வென்றது.
ஆனால் கரும்புலிப் பயிற்சிகள் எடுத்த பின்னும் அவளுக்கான இலக்கிற்காக அவள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.
கிட்டத் தட்ட 8 ஆண்டுகள் அவள் பொறுமை காத்தாள்.
சஞ்சனாவின் பொறுமையை இந்த இடத்தில் நாம் நினைக்காமல் இருக்கமுடியாது.
'இனி எங்க உனக்கு இலக்குக் கிடைக்கப்போகுது..."
மற்றவர்கள் செய்யும் பகிடி இப்போது அவளுக்குள் அழுகையாக மாறிவிடும்.
'என்ன சஞ்சனா... எங்களோட கதைக்காட்டி நாங்க இடிச்ச பிறகு தனிய இருந்து அழ வேண்டிவரும்..." மீண்டும் நாங்கள் பகிடி செய்யத் தொடங்கினால்.
'நீங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்க எதிரியின்ர டோறாப் படகொன்றை நான் தாக்கத்தான் போறன்..." அவள் கீச்சுக் குரலில் சொல்லி விட்டு, எல்லோரையும் முறைத்துப் பார்த்து விட்டு கடற்கரை மணலில் கால் புதையப் புதைய அவள் நகர்ந்து செல்லுவாள்.
11.05.2006 வழமை போலவே சஞ்சனாவின் படகு படகுத் தாங்கியிலிருந்து இறக்க கரையில் நின்று வழியனுப்பிய தோழர் தோழியருக்கு
'இண்டைக்கு நான் திரும்;பி வரவே மாட்டன்...
வெற்றிலைக்கேணிக் கடலில் ஒரு டோறா தாழுது..."
அவளது விரைவுப் படகு விரைந்தது.
'என்ர அப்பாவைக் கொலை செய்தவனச் சும்மா விடமாட்டன்"
அவளது எண்ணம் நிறைவேறிக்கொண்டது.
விரதம்
அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள். எப்போதும் மற்றவர்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் சிரிக்க வைப்பதிலும்தான் பெரும்பாலான அவளது பொழுதுகள் கழியும். அந்தப் பாசறையில் எல்லோருக்கும் இளைய வளாக அவள் இருப்பதால் அவள்தான் கதாநாயகி.
தன்னுடைய கடமைகளில் அவள் ஒருநாளும் பின்னிற்பதில்லை.
~சமையற்கூட முறை என்றால் இரவு படுக்கும் போதே அவள் சொல்லுவாள்
~என்ன விடியவே எழுப்பி விடுங்கோ, எனக்கு நாளைக்கு முதன்மையான பணியிருக்கு.... முழுகி, மடிப்புக் குலையாத உடையோடு வந்து நிற்பாள்.
~என்ன... எங்க போகப் போறா என்று எல்லோரும் கேட்டால்,
~முதன்மையான வேலைக்கு வெளியில போகப்போறன்
என்று சொல்லி விட்டு ஒன்றுக்கு நாலு தடவை தலைவாரி முகப்பூச்சுக்கள் பூசி அவள் எங்கேயோ" புறப்படத் தயாராகி விட்டாள்.
~எங்க பிள்ள போகப் போற...
மூத்த அக்காக்கள் கேட்டால்,
~நேரம் வரேக்க நீங்களே புரிஞ்சு கொள்ளுவியள் என்று சொல்லி விட்டு நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.
நேரம் நெருங்க சாப்பாட்டு வாளியோடு சற்றுத் தள்ளியிருக்கும் சமையற் கூடத்திற்கு போய் விட்டாள்.
ஆக அவள் போட்ட ஆர்ப்பாட்டம் எல்லாம் சாப்பாடு எடுக்கப்போவதற்குத்தான்.
இப்படித்தான் இவளது குழப்படிகள் இருந்தன.
இவள் கடற் கரும்புலிகளணிக்கு வந்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. தனக்கு இன்னும் சரியான இலக்கு அமையவில்லையே என்ற ஆதங்கம் அவளிற்கு இருந்தது.
இந்த நேரத்;தில் தான் விரதம் இருந்தா நினைச்சது நடக்கும் என்று யாரோ ஒரு அம்மா சொன்னதைச் செய்ய அவள் துணிந்துவிட்டாள்.
வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். ஆனால் அவளால் ஒரு பொழுதும் சாப்பிடாமல் இருக்க முடியாது.
~என்ன செய்யலாம் அவள் யோசித்தாள் ~அம்மா இருக்கிறாதானே ஏன் கவலைப்படுவான். உடனே அம்மாவுக்கு கடிதம் எழுதினாள்.
அம்மா ஏழு வெள்ளி விரதமிருந்தா நினைத்தது நடக்குமாம். எனக்கு நெடு நாளா ஒரு விருப்பம் நான் விரதம் இருக்கமாட்டன் எண்டு உங்களுக்குத்
தெரியும் தானே. எனக்காக நினைச்சு நீங்க விரதம் இருங்கோ. எனக்கு என்ன ஆசை எண்டதை நான் நினைக்கிறன்.
அம்மாவுக்குச் சொல்லப் பத்தாது பிள்ளை கேட்டு விட்டாள், அதுகும் அவள் நினைச்ச காரியத்திற்காக. அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு மாவீரன் இந்தப் பிள்ளைக்காவது ஒன்றும் நடக்கக்கூடாது என எண்ணிய அம்மா விரதமிருக்கத் தொடங்கி விட்டாள்.
'என்ரை பிள்ளை நினைச்சது நடக்க வேண்டும்"
இது தான் அம்மாவின் வேண்டுதலாக இருந்தது. ஒருவாறாக நான்கு வெள்ளி கடந்து விட்டது. மறுநாள் பிள்ளை நினைத்தது நடந்தேறியது.
இப்போதும் சிறீலங்காக் கடற்படையால் என்ன, ஏது என்று அறிய முடியாத அந்தத் தாக்குதல். நாயாற்றுக் கடலில் சுப்ப டோறா மூழ்கடித்த தாக்குதலில் அம்மாவின் மகள் வரலாறாகி விட்டாள்.
ஏதும் அறியா அப்பாவி அம்மா இப்போதும் சொல்லிச் சொல்லி அழுகிறா
~என்ர பிள்ளையின்ர சாவுக்கு நான் காரணமாகி விட்டேனே.... என்று.
அம்மாவின் மகள் வேறு யாருமல்லள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சினி யோடு புதிய வரலாறு எழுதிய மேஜர் கனிநிலா தான்.
கடமை
2004 டிசம்பர் 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம்
மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும்
ஏற்படுத்தி இருந்தது.
இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு - கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற்கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.
அங்கு அவனுக்கான பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லாமே அவன்தான். வீட்டின் இல்லாமை போக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று....
ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்... ஓர் அளவுகோலில் 'பாசம்", 'கடமை" என்ற இரண்டையும் நிறுவை செய்தான். அவன் மனச்சாட்சி முன் 'கடமை" என்ற பக்கம் தாண்டுகொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.
'நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்... இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்... என்னால இந்த நடவடிக்கையில எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது.... ஆனா...., என்ர குடும்பத்த நீங்கதான் பார்க்க வேணும்...."
குடும்பத்தின் அந்த வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறு யாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்...
'ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.
ஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்
வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள் கொடுக்க, சின்னவன் இவனின் விளையாட்டுத்தனமும் குழப்படிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தன.
வேலையால் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் அம்மாவுக்கு வீட்டில் ஏதாவது புரளி செய்து வைத்திருப்பான் அவன்.
மரத்தில் ஏறி விழுந்து காலை உடைத்திருப்பான். அல்லது கத்தியால் கையை வெட்டி வைத்திருப்பான். அதுகும் இல்லையேல் யாருடனும் சண்டை பிடித்து அடிபட்டிருப்பான். இப்படியான குழப்படிக்காரன் அவன்.
ஒரு இடத்தில் ஒரு நிமிடம் என்றாலும் வெறுமனே ஓய்ந்திருக்க அவனால் முடியாது.
இந்தியப்படைகள் நமது மண்ணை வல்வளைப்புச் செய்திருந்த காலம் அது.
இந்தியப் படைகளின் கண்ணில் சிக்காது தலைமறைவாய்ச் செயற்படும் புலி வீரர்களிற்கு பாதை காட்டி இந்தியப்படைகளின் நடமாட்டம் இருக்கின்றதா? இல்லையா? என அவதானித்துச் சொல்லும் பெரும் பணியையும் அவன் செய்து கொண்டிருந்தான்.
இவனது அண்ணனும் ஒரு போராளி. ஒருமுறை அண்ணனுக்கு வீதியில் இந்தியப்படைகள் நிற்கின்றார்களா? இல்லையா? என அவதானித்து வந்தவன் இந்தியப்படைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வீதி கடக்க உதவிய போது திடீரென்று அந்த இடத்திற்கு இந்தியப் படையினன் வந்து விட்டான்.
இவர்கள் இருவரும் அவர்களைக் கவனிக்காதவர்கள் போல் சென்று கொண்டிருக்க இந்தியப் படையினன் அண்ணணை அழைத்தான். அண்ணனிடம் எதுவும் இல்லை. அண்ணன் செல்ல இந்தியப் படையினன் தன் கையில் வைத்திருந்த சுடுகருவியால் அண்ணனுக்கு அடிக்க இவனுக்கு சினம் தலைக்கு ஏறிவிட்டது. ஓடிப்போய் அந்த இந்தியப் படையினன் வைத்திருந்த சுடுகருவியைப் பறித்து இந்தியப்படையினனுக்கு அடித்துவிட்டு அண்ணணையும் கூட்டிக்கொண்டு ஓடி விட்டான்.
அன்றிலிருந்து அவன் தலைமறைவாய் வாழவேண்டிய சூழல்.
இந்தச் சூழலில் தான் தேச விரோதக் கும்பல்களால் வலுக்கட்டாயமாகப் பிடிபட்டு பயிற்சிக்கு என விடப்பட்டிருந்தான் அவன். அவனோடு கூடவே இன்னும் பலர்.
சுடுகருவிகள் கொடுக் கப்பட்டு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த போது
எப்படித் தப்பிச்செல்ல............ என்ற சிந்தனையில் அவன்.
அவனைப் போலவே இன்னும் சிலர்..............
தக்க நேரம் பார்த்து சுடுகருவிகளோடு தப்பி ஓடி விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போதுதான் அவனுக்குள் மகிழ்வு துளிர் விட்டது.
விடுதலைப் புலியான போது மாவீரன் தன் அண்ணன் கதிரவனின் பெயரையே அவன் தனக்கும் சூட்டிக் கொண்டான்.
இப்போது அவன் ஒரு கடற்புலி.
அதுவும் நீரடி நீச்சல் கரும்புலி.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் திறவு கோல்களில் ஒருவனாக அவன்.
தன் நேசமக்களிடம் - தேசத் தலைவனிடம் தன் உறவுகளிடம் என எல்லோரிடமும் இறுதி விடை பெற்று இப்போது இலக்கிற்காக அவன் நகர்ந்து கொண்டிருக்கின்றான்.
இருள் சூழ்ந்த அந்தப் பொழுதில், இடியும் மின்னலும் முழங்க மழைதூவ கடலோடு கடலாய் அவர்கள் எதிரியின் கண்காணிப்புப் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து எதிரி விழிப்படைந்து விடா வண்ணம் நீரின் கீழ் நீந்தி தங்கள் இலக்குகளை இனங்கண்டு விட்டார்கள்.
இன்னும் 30 நிமிடங்கள்......
மிக நிதானமாக எதிரி விழிப்படையா வண்ணம் கப்பலின் அடியில் ஒருவாறு குண்டுகளைப் பொருத்தியாயிற்று
இன்னும் 20 நிமிடங்கள்..............
தம் சாவுக்கான ஒவ்வொரு நிமிடங்களையும் எண்ணியபடி தேசத் தலைவனையும் - மக்களையும் மனதில் நினைத்தபடி கப்பலின் அடியில் குண்டை அணைத்தபடி அவர்கள்.
ஆடாமல் - அசையாமல் - விலகாமல் குண்டைப் பிடித்தபடி கடல் நீரில் தம்பிடித்தபடி ஒவ்வொரு நிமிடங்களையும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
கடைசி மணித்துளி...........
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
திருமலைத் துறைமுகம் அதிர்ந்தது...... கப்பல் தாண்டது.
ஒரு நிமிடம் ஓய்ந்து போய் இருக்க முடியாதவன். நம் தேச விடுதலைக்காக, போரியலில் ஒரு திருப்பு முனைக்காக
30 நிமிடங்கள் தன் சாவுக்கான ஒவ்வொரு நொடியையும் எதிர்பார்த்துப் பார்த்துக் காத்திருந்து வீரவரலாற்றைப் படைத்தான்.
தக்கநேரத்தில்
ஓயாத அலைகள் - 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999 அன்று கிளாலியில் இருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் மூன்று நீருந்து விசைப்படகுகள், 04 கூவக் கிறாப் 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.
இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க கடற்புலிகளின் சிறியரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலிப் படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலங்களை வழிமறித்துத் தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகுகின்றது.
இந்த நிலையைக் கிளாலிக் கரையில் நின்று அவதானித்த அறிவரசன் புரிந்துகொண்டான். எந்தக் கட்டளையுமின்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். 'அந்த இடத்திற்குத்தான் விரைவாகச் செல்ல வேண்டும்." அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை, தனி மனிதனாக நின்ற அவனின் உடல்நிலையோ படுமோசம்.
வயிற்றில் விழுப்புண்பட்டு சரியாக நிமிர்ந்து நடக்க முடியாத நிலை... வயிற்றில் விழுப்புண் பட்டதால் சோறோ, பிட்டோ.... கடினமான உணவினை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் சாப்பிடவும் முடியாது..... இப்படியான நிலையில் இருந்த அவன் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
இந்நிலையில் கிளாலியின் வற்றிய பகுதியில் இருந்த தனது கரும்புலிப் படகைத், தன்னந்தனியாகத் தள்ளிக் கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று,
'நான் இடிக்கட்டா" எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு, எந்தத் தொலைத் தொடர்புக் கருவியும் இன்றி, கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட, மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் - மூன்று நீருந்து விசைப்படகு, நான்கு - கூவக்கிறாப் என்பன மீண்டும் அந்த இடத்தில் இருக்கவேயில்லை.
அன்பு
~கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் ~காதல் இருந்தது.
இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே ~அம்மா ~அப்பா ~உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான்.
~அம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்...
இரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை.
ஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே.
அவளா....?, எப்படி...? அம்மாவை விட்டுவிட்டு...? எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது.
~தாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும் நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும் என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள்.
பயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் ~அம்மா என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை.
ஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள்.
அன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள்.
விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும்.
அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது.
மக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.
ஆனால் தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது.
அது தான் வள்ளுவர் சொன்ன
'அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
என்ற குறட்பா கடற் கரும்புலி மேஜர் வனிதா விற்குச் சாலப் பொருத்தமல்லவா?
முரட்டுப்பிள்ளை
'கடாபி" இது அவளுக்கு முன்னால் அல்ல பின்னால் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் பெயர். அந்தப் பெயரை அவளுக்கு முன்னால் சொல்ல யாருக்கும் துணிவு இருக்காது. அந்தளவுக்கு முரட்டுக் குணங்களைத் தன்னகத்தே கொண்டவள்தான் அவள்.
பாசறையில் ஏதாவது பளுவைத் தூக்க வேண்டியிருந்தால், 'காந்தி" என்று சொல்லத் தேவையில்லை தானாகவே முன்வந்து தோளில் அடிப்பாள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையிருக்காது. நாங்கள் இரண்டு மூன்று பேர் செய்யும் வேலையை அவள் தனியாளாகச் செய்து முடிப்பாள்.
கடற்கரை மணலில் பளுத் தூக்கி நடப்பது எளிதானதல்ல... நாங்கள் தள்ளாடுவோம், காந்தி நிமிர்ந்து கொண்டு நடப்பாள். மணலில் ஏதாவது ஊர்தி புதைந்து விட்டால், நாங்கள் எத்தனைபேர் தள்ளியும் அசையாத ஊர்தி காந்தி வந்து தொட்டால் காணும் அசைந்து விடும்.
கடலில் படகுகள் இறக்கும் போது முதிர்வும் பட்டறிவும் மிக்க ஊர்தி ஓட்டுநர்கள் போலக் காந்தியும் தனது உழவு ஊர்தியில் படகுக் காவிகளைக் கொளுவி மிக இலாவகமாக படகுகளைக் கடலுக்குள் இறக்கிவிட்டுப் படகுத் தாங்கியை வெளியே கொண்டுவருவாள்.
கடலில் காந்தி படகை ஓட்டினால் எங்களுக்குப் படகில் நிற்க அச்சம். ஏனெனில், அவளது ஓட்டத்தின் விரைவு அப்படி... உந்துருளியில் எட்டு அடிப்பது போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று படகில் எட்டடிப்பாள். அவள் படகைத் திருப்பி வெட்டும் விரைவில் நாங்கள் எதையாவது பிடிக்கத் தவறினால் கடலுக்குள் விழ வேண்டியதுதான்.
'காந்தி" மெல்ல ஓட்டு என்றால், சொன்னதற்காக இரு மடங்கு விரைவைக் கூட்டி விட்டுக் கேட்பாள். 'இப்ப எப்படியிருக்கு..." இவளது இந்தப் படகோட்டும் பயிற்சி பல கடற் சண்டைகள் வெற்றியுடன் நகரக் காரணமாக இருந்தது. மேலே 'கிபிர்" என்றால் காந்தி செலுத்தும் படகு கிபிரை விட விரைவாக ஓடும்...
போராளிகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எப்படியும் காந்தியின் அணி வெல்லும். கூடைப்பந்துப் போட்டியில் காந்தியை மறிக்கும் கன்னை பாவம்... கயிறிழுத்தல் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை...
காந்திக்கு எதையும் ஒளிச்சு மறைச்சுப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் நின்றுதான் பேசுவாள். வெட்டொன்று துண்டிரண்டு எனத்தான் அவளது பேச்சு இருக்கும். அவளிடம் எதற்கும் அஞ்சாத துணிச்சல் இருந்தது.
'காந்தி" கடலிலே படகினை இறக்கும் போது 'அப்பப்பா" பாட்டுச் சொல்லும் விதம் கூட வேறுபட்டதுதான். அம்மப்பாச் சொல்லும் போது அவளது குரல் ஓங்கி ஒலிக்கும், மற்றவர்களின் குரல்கள் பின்னால் இழுபடும். அவள் குரலுக்கு கட்டுண்டது போல விரைவாய்ப் படகு கடலில் இறங்கும்.
கடலுக்குள் இறங்கும் படகின் அணியத்தைப் பிடித்துப் படகைச் சீராக்கி விடவும் காந்திதான் முன்னணியில் நிற்பாள். காந்தி வெளித்தோற்றத்தில், செயற்பாட்டில் முரட்டுக்குணமாகத் தெரிந்தாலும், அவளுக்குள் இளகிய மனம் இருந்தது. மென்மையான உணர்வுகள் இருந்தன. ஆனால், அன்பை வெளிப்படுத்தத் தெரியாததனால் அந்த ஒரேயொரு விடயத்தில் மட்டும் அவள் தோற்றுப்போனது உண்மைதான்.
'காந்தி" மக்களுக்காகத் தன்னை உவப்பீகை செய்யத் துணிந்த ஒரு கரும்புலி. அவளுக்கு தாக்குதலுக்கான படகு கொடுத்தாயிற்று. இனி எந்த நேரத்திலும் அவளுக்கான இலக்குக் கிடைக்கும். தனது இறுதி விருப்பாய்ச் சிறப்புத் தளபதியிடம் அவள் ஒன்றை மட்டும் கேட்டாள்.
'அண்ண நானொருக்கா வெளியால போய் வரப்போறன்" ஒரு கரும்புலியின் கடைசி ஆசை அது, அவர் உடனே அனுமதித்தார். வெளியில் சென்றவள் நேரே போன இடம் எல்லோருக்குமே வியப்புத்தான். அன்பைச் சொரியும் அறிவுச்சோலை, செஞ்சோலை, குருகுலம், வெற்றிமனை, அன்புச்சோலை என அன்பு மழையில் நனையும் அந்தச் சோலைகளில் தான் சில மணிநேரம் கழித்துவிட்டு வந்திருந்தாள். வந்தவள் ஒரு பெரிய பொதி ஒன்றைச் சிறப்புத் தளபதியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள், 'அண்ண இத நான் வீரச்சாவடைந்த பிறகு திறந்து பாருங்கோ..." அவரும் அதை வாங்கித் தனது மிசையத்தில் வைத்திருந்தார்.
16-09-2001- கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கிய 'டோறா" இதுதான் அவளுக்கான இலக்காகியது. 'பாகையைச் சொல்லுங்கோ மிச்சத்த நான் பாக்கிறன்" அந்தக் கம்பீரக் குரல் கேட்கப் பாகை சொல்லப்பட்டது. சில நொடிப் பொழுதுகள் எந்தப் பிசிறும் இல்லாத இடியால் டோறா மூழ்கிப்போனது.
மிசையத்தில் இருந்த பொதியைத் திறந்து பார்த்தபோது கண்ணாடிச் சட்டத்துக்குள் இருந்து கறுப்புச் சீருடையில் முரட்டுப்பிள்ளை காந்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.
கண்ணீரைக்கடந்து
'அம்மா.... இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா....." மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது.
வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்......
இன்பருட்டி 'வான்" அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த 'வான்" அதிர்ந்துகொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள்.
நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலையில் விழுந்தது. பொறுப்பாளர் அன்புவை அழைத்தார். 'அன்பு.... நீதான் அவர்கள எப்படியாவது அமைதிப்படுத்த வேணும்....." அன்பு முதலில் தயங்கினாலும், நிலைமையைப் புரிந்தவனாய் தன் அம்மாவோடும், உறவுகளோடும் போய்க் கதைத்தான்.
அம்மா மகனைக் கட்டிப்பிடித்து அழுதா..... காலில விழுந்து கும்பிட்டா..... 'தம்பி கரும்புலியாப் போகாதையடா...." உடன்பிறப்புக்களோ
அவன் கையையும் காலையும் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அன்புவிடம்.
திருவள்ளுவர் சொன்ன கூற்று அவன் மனத்திரையில்...
'பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
அவன் முடிவெடுத்தான். 'நான் கரும்புலியாப் போகேல்லையெண...." அம்மா கேட்டபடி ஊர்க்கோயில்கள் எல்லாவற்றின் மீதும் 'சத்தியம்" செய்தான். பொய்யே பேசாத அவன் பொய்ச் சத்தியம் செய்யுமளவிற்கு சூழ்நிலைக் கைதியானான். அம்மா நம்பிக்கொண்டு வீட்டுக்குப்போக முற்றுகையிட்ட உறவுகள் பின்னாலே...
ஒருவாறாக அன்பு என்ற பெருமழை ஓய்ந்து போக அன்பு சிரித்தபடி போராளிகளிடம் வந்தான். போராளிகளின் விழிகள் கசிந்திருந்தன.
உலகில் எந்தவொரு உயிரினமும் ஆழமாய் அன்பு செலுத்துவது 'அம்மா" என்ற தாய்மையில்தான் எவ்வளவுதான் மனவுறுதி படைத்தவனாக
இருந்தாலும், அம்மாவின் கண்ணீர் அவனை ஆட்டங்காணச் செய்துவிடும். ஆனால், அன்புவோ... தான் விரும்பித் தேர்ந்தெடுத்த கொள்கையில் இருந்து சற்றும் தளரவில்லை.
தனது தாய், உறவுகள் என்ற குறுகிய வட்டத்திற்காக நமது தாய் மண்மீது அவன் வைத்த பற்றுதலைத் துறக்கத் துணியவில்லை. 20-09-1995, இன்பருட்டி வான் கலகலக்கத் தொடங்கியது.
அன்புவை வேவு பார்த்துக் கொண்டிருந்த தம்பி தகவல் சொல்ல அம்மாவிடம் ஓடினான். 'அம்மா... நேற்றைக்கு நிண்ட படகிலதான் அண்ணா நிக்கிறானெண...." அம்மாவுக்குள் எரிமலை.... இன்பருட்டி வானை நோக்கி அம்மா ஓடினாள்.
இன்பருட்டிக் கரையில் அம்மாவின் தலைக்கறுப்பைக் கண்ட அன்பு படகிற்குள் மறைவாக இருந்தபடி எல்லோரையும் பார்த்தான்.
தலையிலும் வயிற்றிலும் அடித்தடித்து அம்மா மண்ணில் புரண்டு அழுதாள். உடன்பிறப்புக்களும் ஏதேதோ சொல்லி அழுதார்கள். படகின் பொறி ஓசையை மீறி அவர்கள் சொல்லி அழுவது மட்டும் புரியவில்லை.
ஆனால், அவர்கள் துடித்து அழுவது மட்டும் அன்புவின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது.
தாயின் மீதும், உடன்பிறப்புக்கள் மீதும் அன்பு வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாய் அன்புவின் கண்களிலும் நீர்த்திரை. எத்தனையோ மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அவன் பயணம்... அன்பு உறவுகளின் கண்ணீரைக் கண்டு தடைப்பட்டுப் போகவில்லை. அவன் பயணம் கண்ணீரைக் கடந்துசென்று வென்றது.
- பிரமிளா -
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)
Posted by defencetamil at 1:40 PM 0 comments
Labels: வீரவரலாறு
வீரத்தின் சிகரங்கள்
இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை.
தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள்.
உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.
இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.
ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது.
தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
தாய்மை
அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள்.
அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள்.
தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களை வளர்த்துவிட்ட அவள் காலத்தின் தேவையறிந்து போராளியாகிப் பின்னர் சாதனைகளின் உச்சத்தைத் தொடுவதற்காகக் கரும்புலியாக மாறிக்கொண்டாள்.
அந்த முகாமில் பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் யாரிற்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்காகவே தனது நேரத்தைச் செலவிடுவாள். யாராவது போராளிகள் கசங்கிய உடையோ அல்லது சற்றேனும் புழுதிபடிந்த உடையை அணிவதோ அவளுக்குப் பிடிக்காது. கசங்கிய உடைகளை அழுத்தி மடித்துக் கொடுத்து அதைப்போட வைத்து அதன் அழகை இரசிப்பதில் தான் அவளது மகிழ்ச்சியிருந்தது.
போராளிகளின் ஆடைகளைத் தோய்த்துக் கொடுக்கக்கூட அவள் தயங்கியதில்லை. அவர்களின் இந்தப் பாசறை ஒருநாள் சிங்களப் படையின் விமானத் தாக்குதலுக்குள்ளாகிறது. உயிர்களுக்குச் சேதமேற்படா விட்டாலும் காயம் ஏற்பட்டு போராளியொருவர் மருத்துவமனையிலிருந்தான். அவர்களின் தங்ககம் விமானத்தாக்குதலால் சிதைந்தது. உடைமைகள் யாவும் சிதறுண்டன.
காயம்பட்ட போராளிக்கு மாற்று உடையில்லை. அந்த விடுதியிலிருந்த எல்லோருக்கும் அதுவே நிலைமை. மலர்விழி மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்க்கிறாள். மாற்றுடையில்லாமல் அவன் அவதிப்படுவது தெரிந்தது. ஆனால், உடனடியாகப் புது உடை வாங்கக்கூடிய வசதி அவளிடம் இருக்கவில்லை.
மலர்விழி முகாம் வருகிறாள். விமானத் தாக்குதலால் சிதறிய விடுதியில் வந்து பார்க்கிறாள். அங்கே கிழிந்தபடி காயப்பட்டவனின் சேட் ஒன்று கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு போனாள். ஊசி நூல் எடுத்து குண்டுச் சிதறலால் ஏற்பட்ட கிழிசல்களைப் பொறுமையாக இருந்து தைத்தாள். பின்னர் அந்த ஆடையைத் தோய்த்து காய்ந்த பின்னர் அழுத்தி மடித்து மருத்துவமனையில் மாற்றுடையை எதிர்பார்த்திருக்கும் அந்தப் போராளியிடம் ஒப்படைத்தாள். அந்தக் கரும்புலி வீராங்கனையின் தாய்மையின் நேசம் எல்லோரையும் வியக்கவைத்தது.
மலர்விழி பல நடவடிக்கைகளுக்காக எதிரியின் முகாமுக்குள் ஊடுருவி வெற்றியுடன் திரும்பி வந்தாள். நடவடிக்கைக்காகச் செல்லும் ஒவ்வொரு தடவையும் வழியனுப்புவோரிடம் அவள் சொல்வது ~தம்பியும் தங்கையும் கவனம் என்பதை மட்டும் தான்.
இவள், வீழ்த்த முடியாத பெருந்தளமாக எதிரி இறுமாந்திருந்த ஆனையிறவுத் தளத்தினுள் மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா ஆகிய கரும்புலிகளோடு இணைந்து அதிரடியான ஊடுருவலொன்றின் மூலம் தாமரைக்குளத்திலிருந்த நான்கு ஆட்லறிகளை வெற்றிகரமாகத் தகர்த்தெறியப் பெருந்துணை புரிந்தாள். தம் பணியை வெற்றிகரமாக முடித்த திருப்தியுடன் தாம் திரும்பிக்கொண்டிருக்கும் போது எதிரியின் பலம்மிக்க கொமாண்டோ அணியொன்றின் சுற்றிவளைப்பிற்குள்ளாகினர்.
மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த இயக்கச்சிப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து 31-03-2000 அன்று ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக வீரச்சாவை அணைத்துக்கொண்டார்கள்.
கோடை
1992 ஆம் ஆண்டின் நாட்கள். சுதாகரன் வீட்டுக் கஸ்ரத்தைப் போக்குவதற்காகக் கொழும்பில் கடையொன்றில் வேலைசெய்து கொண்டிருந்தான். தினமும் கடைக்கதவு சாத்தப்பட்ட இரவுப்பொழுதில் கூடவிருப் போருடன் சேர்ந்து பம்பலடித்து நேரத்தைக் கழித்துவிட்டு உறக்கத்துக்குச் செல்வதுதான் வழமை.
ஆனால் அன்று மட்டும் எல்லோரும் வானொலியைச் சுற்றியிருந்து எதையோ ஆழமாகக் கேட்டபடியிருந்தார்கள். அன்றைய நாள் பி.பி.சி வானொலியில், பி.பி.சி செய்தியாளர் ஆனந்தி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்துப் பெற்ற நேர்காணல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சுதாகரனும் அவர்களுடன் சேர்ந்திருந்து தலைவரின் எண்ணங்களைச் செவிமடுத்தான்.
தலைவர் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் அவனை மெய்சிலிர்க்க வைத்தன. அன்றுதான் தமிழர்களுக்கென்றொரு தலைமை இருப்பதும், ஒரு கட்டுக்கோப்பான விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருப்பதையும் அவன் அறிந்துகொண்டான். அவனது நெஞ்சில் புதிய உத்வேகம் உருவானது. தலைவர் மீதும் எமது விடுதலைப்போராட்டம் மீதும் இனம்புரியாத பற்று அவனுள் கருக்கொண்டது.
அன்றிலிருந்து அவனுள் மூண்ட விடுதலைத்தீ அவனை 1994 இல் எங்கள் தாயகம் நோக்கி நகர்த்தியது. பதுளையில் இருந்த அம்மாவிடம் 'கொழும்பில் அடிக்கடி பிடிக்கிறாங்கள் நான் யாழ்ப்பாணம் போறன்" என்று சொல்லி அம்மாவைச் சமாளித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வந்து இயக்கத்தில் இணைந்துகொண்டான்.
இந்தச் சுதாகரன் பின்னர் போராளியாகி களங்களிலே துணிச்சல் மிக்க ஒரு படைவீரனாக மாறினான். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம்.
முன்னேறி வரும் சிங்களப் படையை வழிமறித்து மாங்குளத்தில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதித்தன் அந்தச் சண்டைக் களத்தில் 82அஅ எறிகணைச் செலுத்தி ஒன்றுடன் சிங்களப் படைக்கெதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அந்த மோட்டார் அணியில் பொறுப்பாளனும் அவனே. எத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்படினும், முடிவெடுத்துச் செயற்படுவது அவன் கையிலேயே தங்கியிருந்தது.
சண்டை கடுமையானதாயிருந்தது. ஓயாத அலைகள் - 02 என்ற பெருந்தாக்குதலை கிளிநொச்சிப் படைத்தளம் மீது எமது படையணிகள் மேற்கொண்டிருந்ததால், குறிப்பிட்ட அளவு போராளிகள் தான் அன்றைய சண்டையை எதிர்கொண்டனர்.
சண்டையின் ஒரு கட்டத்தில் எமது முன்னணி நிலைகளை ஊடறுத்து படைகள் எமது பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. தொலைத்தொடர்புக் கருவிமூலம் இராணுவம் நிற்கும் நிலைகளைக் கேட்டறிந்து மோட்டார் மூலம் எறிகணைகளை அவன் வீசிக்கொண்டிருந்தான்.
நீண்ட நேரமாகச் சண்டை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எறிகணையை வீசுவதற்கான தூரவீச்சு குறைந்துகொண்டே போனது. இந்தத் தரவின் மூலம் இராணுவம் எங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றதென்பதை ஆதித்தன் அறிந்துகொண்டான். அந்தக் களமுனையில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகிக்கொண்டிருந்தது.
ஆனால் ஆதித்தன் பதட்டப் படாமல் கூடவிருந்த போராளிகளுக்குத் தெம்பூட்டி இடை விடாமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். எறிகணை வீச்சுக்கான தூரம் தொடர்ந்தும் குறைந்தபடியிருந்தது.
இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவனது மோட்டார் நிலை எதிரியால் முற்றுகையிடப்படும் என்று அவனால் கணிப்பிட முடிந்தது. அப்படி முடிவெடுத்தால் எறிகணைகளை எதிரியிடம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். அந்தநேரம் ஆதித்தன் ஒரு அதிரடி முடிவை எடுத்துக்கொண்டான். கடைசியாக மோட்டாரை அழிப்பதற்கு ஒன்றும், தங்களை அழிப்பதற்கு ஒன்றுமாக இரண்டு எறிகணைகளை வைத்துவிட்டு, ஏனையவற்றை எதிரி முன்னேறும் பகுதி நோக்கி விரைவாக அடித்து முடிப்பதென்பதே அந்த முடிவு.
இப்போது எதிரியின் தாக்குதல் இவர்களை அண்மிக்கின்றது. எதிரியின் துப்பாக்கிச் சன்னங்கள் இவர்களின் நிலையை நோக்கியும் சரமாரியாக வரத்தொடங்கியது. 500அ 400அஇ 300அ என மிகக் கிட்டவாக எறிகணைகள் பறந்து வந்து கொண்டிருந்தன.
கடைசியாக 200அ வீச்செல்லைக்கும் அடிக்கும் கட்டளை கிடைத்தது. இராணுவம் துப்பாக்கிச் சண்டைக்கான வீச்செல்லைக்குள் வந்தாலும் அவர்கள் மோட்டார் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இராணுவம் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் கணங்கள் அண்மித்துக் கொண்டிருந்தன.
ஆனால், பதட்டமில்லாமல் ஆதித்தனின் சுடுகுழல் இயங்கிக் கொண்டிருந்தது.
இராணுவம் இப்போது இவர்களின் மோட்டார் நிலையைக் குறிவைத்து தாக்கத்தொடங்கியது. இத்தனை நெருக்கடிக்குள்ளும் ஆதித்தன் தான் முடிவெடுத்த நிலை வரும் வரை தாக்குதலைத் தொடர்ந்தான். இராணுவத்தின் முற்றுகை வலைக்குள் மோட்டார் நிலை உள்ளாகிக் கொண்டிருந்தது.
ஆதித்தன் நினைத்தபடி எறிகணைகள் அனைத்தும் சுடப்பட்டு விட்டது. இனி, மோட்டாரை தகர்ப்பதற்கான நேரம். அதைவிட மாற்றுவழிகள் இல்லை. நூற்றுக்கணக்கான எறிகணைகளைச் சுட்டதினால் தணல் போலப் பழுத்துப் போயிருக்கும் அந்த எறிகணைக் குழலைக் கொண்டு செல்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அத்தோடு எதிரியால் அவர்கள் சூழப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள்.
எனவே சுடுகுழலைத் தகர்த்து விட்டு பின்வாங்கு வதென்ற முடிவைத் தவிர மிச்சமாக எதுவுமில்லை. ஆயினும், ஆதித்தன் அப்படிச் செய்யவில்லை. கூட இருந்தோர் எதிர்பார்க்காத முடிவை அவன் எடுத்தான். இயக்கம் ஒரு எறிகணை செலுத்தியைப் பெறுவதற்கு எத்தகைய விலைகளைச் செலுத்துகின்றதென்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால், அந்த எறிகணைச் செலுத்தியை அவன் இழக்க விரும்பவில்லை.
வெப்பத்தால் தகதகத்துக் கொண்டிருக்கும் அந்தச் சுடுகுழலை தனது தோளில் வைத்தபடி எதிரிக்கு எதையும் விட்டுவைக்காமல் முற்றுகையை உடைத்து வெளியேறினான் அவன்.
ஆதித்தன் மீண்டு வந்தபோது அவனது சுடுகுழல் பத்திரமாயிருந்தது. அவனது தோள்பட்டை மட்டும் வெந்து போய் பொக்களம் போட்டிருந்தது.
இப்படி களங்களில் பல சாதனைகளை நிகழ்த்திய வீரன் பின்னர் கரும்புலியாகி விடுதலைப் போருக்குப் பெரும் பலம் சேர்த்து வீழ்த்த முடியாத பெருங்கோட்டையென எதிரி மார்தட்டிய ஆனையிறவை மீட்கும் சமரொன்றிற்கு வலுச்சேர்த்து 25.12.1999 அன்று பாவப்பட்ட மக்களை மீட்கவந்த இயேசுநாதர் பிறந்ததாகச் சொல்லப்படும் நத்தார் நாளில், அடிமைப்பட்ட தன் இனத்தின் மீட்சிக்காகத் தன்னையே கொடையாக்கினான்.
உபசரிப்பு
இவள் இப்போது தான் இயக்கத்துக்கு வந்திருந்தாள். பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொறுப்பாளர் எல்லோரையும் ஒன்று கூட்டிக் கதைத்தார். தனது கதையின் ஒரு கட்டத்தில் 'இதுக்குள்ள ஆர் கரும்புலி?" என்ற வினாவைத் தொடுத்தார். கேள்வி முடிந்த சில கணங்களுக்குள் ஒரு சிறிய உருவம் எழுந்துநின்று 'நான்தான்" என்று கூறியது. சுதர்சினியின் தோற்றத்தைப் பார்த்து இவளா கரும்புலியாகப்போகிறாள் என்று நக்கலாகச் சிரித்தார்கள்.
அவள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாள். கரும்புலிகளின் பயிற்சித் தளத்தில் ஆந்திராவாக அவள் உலாவிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய உருவத்துள் நிறைய குறும்புத்தனம் இருந்தது. அந்தக் குறும்புத்தனங்களால் முகாமே கலகலப்பாகவிருக்கும். யாராவது எதற்காவது ஆசைப்பட்டால் போதும் அதை அவர்களுக்குச் செய்துகொடுத்துவிடவேண்டுமென்று துடிப்பவள்.
ஒருநாள் மாமரத்தின் கீழ் பயிற்சி நடந்தது. மரத்தில் மாங்காய்கள் இருந்தன. கூட இருந்த போராளி ஒருவர் சொன்னார் 'மாங்காயில கறி வைச்சா நல்லாயிருக்கும்" இந்த வார்த்தைகள் ஆந்திராவுக்கு கேட்டிருந்தது. அன்று பயிற்சி நாள் என்பதால் அவள் பொறுத்துக்கொண்டாள்.
ஓய்வு நாளும் வந்தது. அன்று ஆந்திராவிடமிருந்து அழைப்பு வந்தது. 'இண்டைக்கு மதியம் கட்டாயம் வரட்டாம்" ஆந்திராவின் அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியாது மாங்காய்க்கறி கேட்டவள் இன்னொரு போராளியை அழைத்துக்கொண்டு போனாள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாங்காயில் குழம்பு, மாங்காயில் சொதி, மாங்காயில் பொரியல், தட்டுமுழுவதும் மாங்காய்மயம். சென்றவர்களுக்கு விழி பிதுங்கியது. நன்றாக மாட்டி விட்;டார்கள்.
ஆளையாளைப் பார்த்தபடி மெதுவாக வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தார்கள். பச்சைப்புளி வாயில் வைக்கவே வயிற்றைக் குமட்டியது. 'ஒண்டும் சொல்லாத பேசாம சாப்பிடுவம் இல்லாட்டி அவள் அழுது கொண்டிருப்பாள்" ஆந்திராவின் அன்பைப் புறக்கணிக்க முடியாமல் கஸ்ரப்பட்டு சாப்பிட்டார்கள். இவர்களின் துன்பத்தை அறியாதவள் இரண்டாவது தடவையும் மாங்காய்க்கறி பரிமாறினாள். ஆந்திராவின் அன்பிலும் குறும்பிலும் சிக்கியவர்கள் இரவு விடுதியில் வாந்தி எடுத்த கதையும் அதன்பின் இருந்தது.
இந்தக் குறும்புக்காரி கொக்குத்தொடுவாயில் தன் தோழிகள் பலரை ஒன்றாக இழந்த சோகத்தில் இருந்தாள். அதற்காக எதிரிக்கு பழி தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் காய்ச்சலாக இருந்தாலென்ன? வேறு வருத்தமென்றாலென்ன? விடாமல் பயிற்சிசெய்தாள். 'என்ர கையால சார்ஜ் கட்டி நான் ஆட்டியைக் கட்டிப்பிடித்தபடி ஆட்டியை வெடிக்கவைக்க வேணும்" என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் விரும்பியபடியே 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தை மீட்கும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தினுள் நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துத்திரும்புகையில் நினைத்ததை சாதித்தவளாய் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள்.
உறுதி
சத்தியா. அவள் சின்னப்பிள்ளையல்ல. ஆனால் உருவத்தில் சிறியவள். மிகவும் கலகலப்பானவள். எல்லோரிலும் அன்பானவள். சின்னப் பிரச்சினையென்றாலும் சண்டைபோட்டு தன்கருத்தில் விடாப்பிடியாக நின்றாலும் அவளின் அந்தத் துடிதுடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனாலும் அவளின் சிறிய உருவம் அவளது கரும்புலிப்பணிக்குத் தடையாயிருந்தது. அவளுடன் கூட இருந்த பல கரும்புலிகள் ஆனையிறவிற்கான கரும்புலித் தாக்குதலுக்குச் செல்லும்போது சத்தியாவின் சந்தர்ப்பம் தட்டுப்பட்டுக்கொண்டே போனது.
ஆனையிறவுக்குச் செல்வதென்றால் ஆனையிறவு உப்பேரியின் தண்ணீரைத் தாண்டவேண்டும். உயரமான போராளிகளிற்கே நெஞ்சளவு தண்ணீர் இருந்தது. ஆயுத வெடிபொருட்களுடன் நகர்வது அவர்களிற்கே சிரமமானதால் சத்தியா செல்வதென்பது சாத்தியம் குறைந்ததென்பதால் அவளை அனுப்ப பொறுப்பாளர் சம்மதிக்கவில்லை.
இப்படி இரண்டு மூன்று தடவை அவளது சந்தர்ப்பம் விலகிப்போக அவள் அழத்தொடங்கி விட்டாள். கூட இருந்த கரும்புலி வீரர்கள் அவளை வலிந்து சண்டைக் கிழுத்துச் சீண்டுவதாக அவளைப் பார்;த்து கேலி செய்வார்கள். அன்புச் சண்டை தொடரும்.
இந்தப் பகிடிகள் தொடர இன்னொரு நாளில் கூடவிருந்து கிண்டலடித்தவர்களும் உண்மையாகவே பிரியும் போது அவளது அழுகை கனத்ததாக மாறியது. 'நாங்கள் சாகப் போகேல்லை. சாதிக்கப்போறம்" என்று சொல்லி அவளைத் தேற்றிவிட்டுப் போனார்கள்.
காலங்கள் கழிந்து கொண்டிருந்தாலும், சத்தியா 'நானொரு கரும்புலித் தாக்குதலைக் கட்டாயம் செய்து முடிப்பன்." என்ற நம்பிக்கையில் உறுதியாகவிருந்தாள். யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்காக எதிரி மேற்கொண்ட சூரியக்கதிர் நடவடிக்கையை எதிர்கொண்ட போது சண்டைச்சூழலால் மாற்றுடையின்றி போட்டிருந்த உடையுடனேயே நிற்கவேண்டிய சூழல்.
உடுப்பைத் தோய்த்தால் காயவிட முடியாதென்பதால் நெருப்பு மூட்டி அந்தப் புகையில் அரைகுறையாகக் காயவிட்டுப் போட்டிருந்தாள். ஆனால், அதுவும் பின்னர் பயனளிக்கவில்லை. இவர்கள் மூட்டிய நெருப்பின் புகைக்கு எதிரி செல் அடிக்க கடைசியாக எதுவும் செய்ய முடியாமல் கொஞ்ச நாட்கள் குளிக்காமலிருந்ததையும் அடிக்கடி நினைவுகூருவாள். நீண்ட காலம்
பொறுமையாக, நிதானமாக, உறுதியாக காத்திருந்த அந்தச் சிறிய உருவத்தையுடைய சத்தியாவிற்கு அவள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கைக்குக் கிட்டியது. அந்தச் சின்ன உருவம் கரும்புலித் தாக்குதலுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது.
ஆனையிறவுத் தாக்குதலுக்கு இப்போது நீரேரி கடக்காமல் இன்னொரு பாதையால் போகும் அணியுடன் செல்ல அவளிற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சத்தியா மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டுநின்றாள். 'ஆனையிறவுக்குப் போகாட்டி பலாலியில போயெண்டாலும் நான் அடிப்பன்." என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு ஆனையிறவிலேயே இலக்குக் கிடைத்ததால் அந்த மகிழ்ச்சி.
ஆனையிறவுத்தளம் எப்போதும் அசைக்கப்பட முடியாதென வெள்ளைக்காரர்களும் வந்து சவால் விட்டுச்சென்ற தளம். தேசியத்தலைவரின் மதிநுட்ப திட்டமிடலில் ஆனையிறவுத்தளம் பொசுங்கிக் கொண்டிருந்த காலம். முன்னணியில் சண்டையிடும் போராளிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆட்லறிகளை அவற்றின் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கும் தலைவரின் சிந்தனையைச் செயலாக்க அவள் புறப்பட்டாள்.
ஆட்லறிகள் உடைக்கப்படும்போது சிங்களத்தின் சூட்டுவலு மட்டுமல்ல, ஆனையிறவுப் படைகளின் மனோபலமும் உடைந்தழியும். தலைவர் நினைத்ததைச் செயலாக்கினாள்.
31.03.2000 அன்று தன் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்க்கப்பட்ட மகிழ்வோடு எங்கள் தேசத்தின் கற்களில் அழியாதபடி தனது பெயரையும் பொறித்துக்கொண்டாள்.
பாதுகாப்பு
அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.
புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது.
முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை நடைபெற்ற சண்டைகள் மூலம் விடுதலைப் புலிகளின் படையணிகள் வெளிப்படுத்தி நின்றன.
எத்தகைய சூழல் ஏற்படினும் அந்த இடத்தை இராணுவம் அடித்துப்பிடிக்க விடுவதில்லையென்ற உறுதி எல்லோரிடமும் இருந்தது. அதே உறுதியோடு தான் நாகராணியுமிருந்தாள்.
அவளொரு சு.P.பு சூட்டாளர். புளியங்குளத்தில் சிங்களப்படைகளின் மனோபலமென்பது அவர்களின் டாங்கிகளில்தான் தங்கியிருந்தது. டாங்கிகள் வெடித்துச் சிதறும் போது கூடவே முன்னேறி வரும் படைகளின் மனோபலமும் வெடித்துச் சிதறிவிடும். அதன் பின் களத்திலே சிங்களப்படைகளைக் காணமுடியாது.
அன்றைய நாளும் அப்படித்தான் எதிரியால் எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அந்தப்பகுதிக்குள் அவள் எதிரியின் அசைவை எதிர்பார்த்தபடியிருந்தாள். ஆனால், இன்று எதிரி வருவதாக இல்லை. ஆனால், வந்தது புதிதாயொரு பிரச்சினை. அது இயற்கையால் வந்த சிக்கல்.
வானம் கறுத்து மழைக்கான அறிகுறி தென்பட்ட கொஞ்ச நேரத்தில் மெல்லியதாகத் தொடங்கிய மழை. செல்லச்செல்ல அதிகமாகிக் கொண்டே போனது. மழை பெய்தால் வெள்ளம் தாராளமாக ஓடக்கூடியதும், நிற்கக்கூடியதுமான பிரதேசமது.
மழை நீர் சிறிது சிறிதாக உட்புகத் தொடங்கு கிறது. உட்புகுந்த நீர் ஆரம்பத்தில் நாகராணியின் பாதங்களை நனைக்கின்றன. அவள் தான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் சு.P.பு உந்துகணைச் செலுத்தியைப் பாதுகாத்துக்கொண்டாள். மழை விடுவதாக இல்லை. நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. பாதத்தை நனைத்த நீர் முழங்கால் மட்டத்தைக் கடந்து இடுப்பு வரை சென்று கொண்டிருந்தது.
ஆனால், இதைச் சாட்டாக வைத்து காப்பரணை விட்டுப் பின்வாங்க முடியாது. ஏனெனில் எதிரிகளின் டாங்கிகள் அதிகம் முன்னேறக்கூடிய பகுதி அது. மழையைத் துணையாக வைத்து எதிரிப்படைகளின் கவசங்கள் முன்னேறக்கூடும். அதனால், தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாமல் அவள் விழிப்பாயிருந்தாள். மழையும் அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன்பாட்டில் பொழிந்து கொண்டிருந்தது.
மழை நீர் இப்போது அவளின் இடுப்பைக் கடந்து மேல்நோக்கிச் செல்கிறது. அவளின் கைகள் சோரத் தொடங்குகின்றன. கைகளை ஆற்றுவதற்கு கீழே விட்டால் சு.P.பு நனைந்துவிடும். அந்தவேளையில் அவளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் கூடவிருந்தவர்களுமில்லை.
ஏனைய பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதிகரித்த நீர்மட்டம் இப்போது நெஞ்சைத் தாண்டி நின்றது. சு.P.புயைக் கொஞ்சமும் கீழிறக்க முடியாது. பேசாமல் தலையில் தூக்கி வைத்தபடியிருந்தாள். தனக்கு எந்தச்சேதம் வந்தாலும் சு.P.புக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.
உடற்சோர்வு அவளது தாங்கு சக்தியைக் கடந்து விட்டபோதும் அது நனைந்து விட்டால் தனது செயற்திறனை இழந்துவிடும். அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடியைப் புரிந்தவளாய் அன்றைய நாளில் இயற்கையின் சவாலைவென்று தன் ஆயுதத்தைப் பாதுகாத்தாள்.
இந்த மனோதிடத்துடனும், அசையாத உறுதியுடனும் தன் தேசத்தின் மீது வைத்திருந்த ஆழமான நேசத்தின் காரணமாய் அவள் கரும்புலியானாள். அவளின் கரும்புலி வாழ்க்கையென்பது சிங்களத்தின் குகைக்குள் இருந்தது. கரும்புலியாகி சிங்களத்தின் இருப்புக்களை உடைப்பதற்கு பெரும் பலம் சேர்த்த அவள் 25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினாள்.
நினைவுகள்
கரும்புலி மேஐர் அருளன் தாக்குதலுக்காக விடைபெறும் கடைசி மணித்துளிகள் இந்தக்கணம் வரை அவனுக்கென்றிருந்த எல்லாவற்றையும் மற்றவருக்குப் பிரித்துக் கொடுக்கிறான். 'இது நிவேதண்ணா தந்த லைற்றர் இது நீதண்ணா போட்ட சேட்டு இது ஆசாக்கா தந்த ஓட்டோகிராவ்" என ஒவ்வொன்றாய் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கிறான்.
கடைசியாக அவனது பையிலிருந்து வெளிவருகிறது இரண்டு கற்கள். அந்தக் கற்களிலொன்றில் இந்துவென்றும் மற்றையதில் nஐயராணி என்றும் எழுதப்பட்டிருந்தது. கூட இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அப்படி என்னதான் இந்தக் கற்களில் இருக்கின்றதென்ற ஏக்கம் அவர்களிடம். அவர்களின் பார்வை அவனுக்குப் புரிகிறது. அவன் அதற்கான காரணத்தைச் சொல்லுகிறான்.
இதுவெறும் கற்களல்ல ஆனையிறவுத் தாக்குதலுக்காகச் சென்ற கரும்புலிகள் பயிற்சியின் போது குண்டெறிதலுக்குப் பதிலாக கற்களையே எறிவார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் கற்களைச் சேகரித்து வைத்து விட்டு இலக்கு நோக்கி ஒவ்வொன்றாய் எறிவார்கள். ஒரு மழைநாளில் பயிற்சி வேளைக்கு முடிந்ததால் மிஞ்சிய கற்கள் தானிவை. அவர்கள் எறிந்து விட்டுப்போய் விட்டார்கள். அந்த முகாமை விட்டல்ல இந்தத் தேசத்திலிருந்தும் தான்.
அருளன் முகாம் வருகின்றான். கரும்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தைப் பார்க்கின்றான். எல்லோரது முகங்களும் அவனது மனதில் வந்து போயின. அப்போது தான் அவதானிக்கிறான் இந்துவும் nஐயராணியும் எறிந்த கற்கள் மிச்சமாயிருந்தன. இப்போது அது வெறும் கற்களல்ல கரும்புலிகள் கைபட்ட கற்கள். அவற்றிலிருந்து ஒவ்வொரு கல்லை பத்திரமாக எடுத்த அருளன் அதைப் பத்திரப்படுத்த அந்தக் கரும்புலிகளின்; நினைவுகளை அந்தக் கற்களிலே சுமந்தபடி பேணி வந்தான்;.
கரும்புலிகளுக்குப் பயிற்சி ஆசிரியனாக இருந்த அவன் கரும்புலிகளின் உணர்வைத் தாங்கியபடி தான் கரும்புலி ஆகவேண்டுமென்று அடிக்கடி தலைவருக்குக் கடிதம் போட்டு விடாப்பிடியாக நின்று கரும்புலியாய் மாறினான்.
அருளனின் வயிற்றில் களத்திலே தாங்கிய விழுப்புண்ணின் வலியிருந்தது. அவனால் சாதாரண நேரங்களில் நிமிர்ந்து நிற்பதே சிரமமானது. ஆனாலும் அவன் பயிற்சி ஆசிரியன் என்பதால் பயிற்சித் திடலில் தனது உடலின் வலியைக் காட்டமாட்டான். பயிற்சித் திடலில் நிமிர்ந்த தோற்றத்தோடு எடுப்பான அருளனையே உங்களால் காணமுடியும். பயிற்சி முடிந்ததும் தனது விடுதியில் வந்து அப்படியே படுத்துவிடுவான். சிறிய ஓய்வின்பின்தான் அவனால் திரும்ப இயங்கமுடியும்.
அந்த வீரன் இன்று தான் சுமந்த நினைவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டுதான் பயிற்சி கொடுத்துப்போன வீரர்களைத் தொடர்ந்து கையசைத்துவிட்டு விடைபெற்ற அவன் ஓயாத அலைகள் மூன்றிற்காய் எங்கள் தேசம் கொடுத்த விலைகளில் ஓர் விலையாய் காற்றோடு கலந்து கொண்டான்.
கனவு
யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்று அது. சாதாரண மனிதர்கள் வாழாத சூனியப்பிரதேசமாய் அது இருந்தது. எங்களுக்குச் சொந்தமான அந்த மண்ணில் இப்போது அந்நியப் பாதங்களின் ஆட்சி. செங்கதிர்வாணன் எதிரியின் இருப்பை வேவு பார்ப்பதற்காக வந்திருந்தான்.
மக்கள் துரத்தப்பட்ட அந்த ஊரில் எதிரியின் கண்களுக்குத் தென்பட்டு விட்டால் தப்புவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்காது. உடைந்த கட்டடங்களும், கடற்கரையோரத்தில் காணப்படும் பள்ளங்களும் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தங்களை மறைத்தபடி இராணுவத்தின் கோட்டைக்குள் புகுந்து தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் வேவுக்காக நகர்ந்து கொண்டிருந்த அவர்கள் சடுதியாக இராணுவத்தை சந்தித்துக்கொண்டார்கள். சண்டையைத் தவிர்க்க சந்தர்ப்பம் இல்லை. தப்ப வேண்டுமாயின் சண்டை பிடித்தாக வேண்டிய சூழல். சுற்றிவர எதிரியால் சூழப்பட்ட அந்தச் சூழலுக்குள் சண்டை தொடங்கியது.
உள்ளுக்குள்ளே சண்டை தொடங்கியதால் முன்னணி அரண்கள் யாவும் விழிப்பாயிருக்கும். உடனடியாக வெளியேறுவது என்பது சாத்தியமற்றுப்போக எதிரியின் பகுதிக்குள்ளேயே மறைப்புத் தேட வேண்டியதாயிற்று.
இப்போது புதிதாய் இன்னொரு நெருக்கடி கூட வந்தவர்களில் ஒருவர் காலில் குண்டுபட்டு விழ அவரைச் சுமந்தபடி இராணுவப் பகுதிக்குள் இராணுவத்தைச் சுழித்துக்கொண்டு மறைப்பிடம் தேடினார்கள்.
இராணுவத்தின் தேடல் தொடர்ந்ததால் இடைவிடாது இடம்மாறிக் கொண்டிருந்தார்கள். இடம் மாறிமாறி நீண்டதூர நடை நாவறண்டு தண்ணீருக்காக காத்துக் கிடந்தது. பசிவேறு வயிற்றைக் குடைந்தது. எதுவும் உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியமேயில்லை.
செங்கதிர்வாணன் காயப்பட்ட வீரனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். நீண்ட நடையும், நேரமும் கடந்து கொண்டிருந்ததுதான் மிச்சமாய்ப்போய் களைத்துப்போன தருணத்தில் கிணறு ஒன்று அவர்களின் கண்களுக்குப் பட்டது. கிணற்றைக் கண்டதுமே தண்ணீர்த் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வு. வாளியில்லாத அந்தக் கிணற்றில் வேறு வழியில்லாமல் உள்ளிறங்கி ஆனந்தத்தோடு தண்ணீரை வாயில் வைத்த போது மிஞ்சியது ஏமாற்றம். அது உப்பு நீர்.
உடல் சோர்ந்த போது காயப்பட்டவன் தண்ணீருக்காக தவமிருப்பது நினைவிற்கு வந்தது. உடற்களைப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நடந்தான். அவனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கோ தொலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கிருந்தவர்கள் அரட்டை அடிப்பதில் மூழ்கியிருந்தனர்.
சத்தமில்லாமல் அவர்களின் வீட்டுக்குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிரப்பிக் கொண்டான். இன்னோரிடத்தில் பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் எடுத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நடந்தான்.
செங்கதிர் வாணனின் இடைவிடாத முயற்சியால் விழுப்புண்பட்டவனிற்கும் கூடவிருந்தோருக்கும் தண்ணீர் கிடைத்தது. விழுப்புண் பட்டவனின் விழுப்புண்ணிற்கு பற்றிக்கரியும் தேங்காய் நெய்யும் கலந்த கைமருந்து வைத்தியமும் அவனால் நடந்தது.
பின்னர் உதவியணி வந்து அவர்களும் அடிவாங்கி விழுப்புண்பட்டோரின் எண்ணிக்கையும் கூடி, வெளியேறுவதற்கு பலமுறை முயன்று எதிரியிடம் அடிவாங்கிக் கடைசியாய் ஓர் நாள் சேற்றுக்குள்ளால் நடந்து ஒருவாறு வெளியேறினார்கள். இத்தனை துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிச்சல்லடையாக்கிய போதும் ஒன்று மட்டும் பத்திரமாய் எந்தச் சேதமுமில்லாமல் வந்து சேர்ந்தது. அது அவர்கள் திரட்டிய வேவுத் தகவல்கள் தான்.
இந்தச் செங்கதிர்வாணன் பின்னர் தேசத்தின் வெற்றிக்காகக் கரும்புலியாக மாறினான். வயதில் மூத்தவனான இவன் மற்றப் போராளிகளை மகிழ்வாய் வைத்திருப்பான். பயிற்சியின் போது கிடைக்கும் தேநீர் வேளை கூட
போராளிகளை மகிழ்வாக்க நொடி கேட்பது இவன் வழக்கம். இதனால் நொடி மாஸ்ரர் என்ற பட்டப்பெயரும் இவனுக்கிருந்தது.
இந்தச் செங்கதிரிடம் ஒரு ஆசையிருந்தது. ஆட்லறி ஒன்றிற்கு தனது கையால் குண்டு கட்டி அதை வெடிக்க வைக்க வேண்டுமென்று. அந்தக் கனவோடு மணலாற்றுப் பகுதிக்குள் வேவுக்காகச் சென்று திரும்பும் வழியில் 29.10.1999 அன்று அவன் வீரச்சாவடைய நேர்ந்தது. நிறைவேறாத அந்த வீரனின் ஆசையைப் பின்னாளில் பல ஆட்லறிகளை உடைத்து கூடவிருந்த கரும்புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.
- புரட்சிமாறன் -
நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)
Posted by defencetamil at 1:38 PM 0 comments
Labels: வீரவரலாறு
Saturday, September 13, 2008
தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்
Posted by defencetamil at 5:18 PM 0 comments
Labels: போராட்ட வரலாறு
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
September
(139)
- தடங்கள் தொடர்கின்றன
- அந்நியர் ஆட்சியும் மக்கள் எதிர்ப்பும்
- போராட்ட வரலாறு
- மேஜர் துளசி
- வரலாறும் தேசியமும்
- கடற்புலிகளின் தாக்குதல் காணொளிகள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- நீரடி நீச்சல் படையணியின் சாதனைகள்
- காங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்
- யாழ்ப்பாண படையெடுப்பு தமிழ்மக்களுக்கு ஒரு செயன்முற...
- மூன்றாம் ஈழப்போர் ஆரம்பம்
- போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாக செ...
- இரண்டாம் ஈழப்போர்
- விடுதலைப்போரின் இறுதி வெற்றியை உறுதி செய்யும் கடற்...
- நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்
- வீரத்தின் சிகரங்கள்
- பலாலி விமானத்தளத் தாக்குதல்
- கப்டன் ஈழமாறன்
- எதிரியின் கோட்டைக்குள் ஒரு அதிரடி
- இலட்சிய உறுதியில் இரும்பு மனிதர்கள்
- ஜொனி மிதி வெடி
- உணவுக்காக ஒரு ஒப்பறேசன்
- எழுத முடியாத காவியங்கள்
- லெப்.மயூரன்
- ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்
- லெப்.கேணல் சூட்
- லெப்.கேணல் நவநீதன்
- கல்வியும் புலிகளும்
- லெப்.கேணல் நரேஸ்-நாயகன்
- கப்டன் துளசிரா
- தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்
- முறியடிக்கப்பட்ட குடாநாட்டு முற்றுகை
- நெருப்பின் குறிப்புக்கள்
- கரும்புலிப் போர் வடிவம் ஓர் போரியல் தேவை
- கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்
- தியாகத்தின் இமயங்கள்...!
- ஒப்பறேசன் தவளையில் கடற்புலிகள்
- கரும்புலிகள் கணெஸ், கோபி
- கடற்கரும்புலி மேஜர் கோபி
- கடற்கரும்புலி மேஜர் கணெஸ்
- இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற...
- மாவீரன் பால்ராச்
- மதிப்புக்குரிய தளபதி
- வீரர்கள் மதிக்கும் வீரன்
- பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்
- யூலை இது கரும்புலிகள் மாதம்.
- இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்
- இந்து சமுத்திரத்தின் திறவுகோல்...
- தமிமீழம் ஒரு தனியரசு
- உள்ளிருந்து ஒரு குரல் 3
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- மாமனிதர் ஞானரதன்
- தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்
- கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் ...
- ஆனையிறவும் அந்த நாட்களும்...
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- மூன்றாம் கட்ட ஈழப்போர்
- மாவீரர் நாள் உரை 2006 காணொளி
- மாவீரர் நாள் உரை 1999
- மாவீரர் நாள் உரை 2000
- மாவீரர் நாள் உரை 2001
- மாவீரர் நாள் உரை 2002
- மாவீரர் நாள் உரை 2003
- மாவீரர் நாள் உரைகள்
- ஓயாத அலைகள் - 3 தாக்குதல் காணொளி
- மாவீரர் நாள் உரை - 2007
- அந்தக் கணப்பொழுது
- வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு
- இரகசியத்தின் பெறுமதி
- மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்ப...
- மாவீரர் நாள் உரை 2007 காணொளி
- நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்
- தமிழ்செல்வம் -க.வே.பாலகுமாரன்
- வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் - ச.பொட்டு
- கப்டன் திலகா
- தமிழீழ விடுதலையும் தமிழீழ முஸ்லீம்களும்
- தலைவரின் உண்ணாவிரதம்
- தமிழீழ அரசியலும் தமிழ்க் குழுக்களும்
- தமிழீழ நீதி மன்றம்
- தமிழீழ விடுதலைப் போராட்டம்
- உள்ளிருந்து ஒரு குரல் 2
- தேசத்தின் குரல் காணொளிகள்
- பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்
- பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பதிவுகள்
- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்
- உள்ளிருந்து ஒரு குரல்
- மாவீரர் நாள் உரை 2006
- லெப்.கேணல் சூட்டி
- லெப்.கேணல் ஜோய்
- லெப்.கேணல் சரா
- லெப்.ரவிக்குமார் லெப்.சின்னா கப்டன் கரன்
- அன்பு
- தமிழரின் தாயகம்
- பூநகரி வெற்றியின் உற்ற துணைவர்கள்
- மாமனிதர் பேராசிரியர் துரைராசா
- கடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்
- கடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மண...
- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
- லெப்.தமிழ்மாறன்
- புலிகளும் மத சுதந்திரமும்
-
▼
September
(139)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)