Wednesday, September 10, 2008

தமிமீழம் ஒரு தனியரசு

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் தேசியத் துணைப்படையில் ஆட்சேர்வதும் மிக அதிகமாகியிருக்கிறது. தமது தனிப்பட்ட அல்லது குடும்பக் காரணங்களுக்காக அமைப்பிலிருந்து விலகியிருந்த போராளிகளில்கூட 80வீதமானவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். நான்காண்டுப் பேச்சுவார்த்தைகளையும் அதன் சாதக பாதகங்களையும் உன்னிப்பாகக் கவனித்தபடி மதில்மேல் பூனைபோன்ற மனநிலையில் இருந்த சிலரும் இனிப் போர்தான் என்ற முடிவுக்கு வந்தவர்களாகச் செயற்படுவது தெரிகிறது.

தடைகள் பணிவை ஏற்படுத்தும் என்ற இந்தத் தீவை ஐரோப்பியர் கையகப்படுத்தியபோது தமிழர் ஆண்டுவந்த தரையையும் கடலையும் சேர்த்தே கையகப்படுத்தினர். அப்போதுதான் தமிழர்கள் முதன்முதலாக தங்கள் தாயகக் கடலின் இறைமையை இழந்தார்கள். ஐரோப்பியர் இலங்கையை விட்டுச்சென்றபோது தமிழர்களிடமிருந்து பறித்த இறைமையையும் சேர்த்துச் சிங்களவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

சிங்களவர்கள் தமிழர் கடற்பரப்பை இறைமை கொண்டாடியதென்றால் அது வெள்ளையர்கள் விட்டுச்சென்ற நாளிலிருந்து கடற்புலிகள் பகுதிபகுதியாக மீட்டெடுக்க ஆரம்பித்தது வரையான காலப்பகுதியில் மட்டுமே. இது தரைக்கும் பொருந்தும். ஐரோப்பிய வருகையின் முன்னான ஆயிரத்தாண்டுகாலத் தமிழர் இறைமையை இப்போது நடுவம் வகிக்கவந்த நாடுகள் சட்டவிரோதம் என்ற தோரணையில் அணுகுவதைத் தமிழர்கள் செயற்படவும் செய்திருக்கிறார்கள். அதன் விளைவே தாமே அரசாதல் எனும் தத்துவம்.

அரசாதலைத் தவிர வேறெதுவும் எவரும் தங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதே ஈழத்தமிழரின் கால்நூற்றாண்டுகால அனுபவம். அண்மைய ஐரோப்பிய ஒன்றியத் தடையும் அந்தக் கருத்தை வலியுறுத்துவதாகவே உள்@ரில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இல்லங்கள் உட்பட்ட சமூகக் கரிசனையோடமைந்த ஊழலற்ற நிருவாக அமைப்புமுறை இங்கே உண்டு. சுனாமியின்போதான அனர்த்த நிவர்த்தி நகர்வுகளில் ஐம்பது வயதைத் தாண்டிய அண்டைய அரசைவிடத் திறமையையும் துரிதத்தையும் நேர்த்தியையும் காட்டியிருக்கிறது தமிழீழ அரசு.

தனது மக்களுக்காக உயிர்தந்து போராடும் முப்படைகளையும் சிறப்புப் படைப்பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புக்களுக்கு நேர்விரோதமான இந்த நிகழ்வுகளையும் நிலவரங்களையும் கவனிக்கும் அவதானி ஒருவருக்கு உலக சமுதாயத்தின் சமிக்ஞைகளைத் தமிழ்த் தரப்பு சரிவரப் புரிந்துகொண்டுதான் இயங்குகிறதா என்ற கேள்வி எழலாம். அக்கேள்வியே ஆய்விற்குரியது.

முதலில் தமிழர்கள் தங்களை யார் என அடையாளப் படுத்துகிறார்கள் என்பது முக்கியமானது. அமெரிக்காவில் வாழும் பூர்வகுடிகளை நாம் எல்லோருமே செவ்விந்தியர்கள் என நூற்றாண்டு காலமாக அழைத்தாலும் அவர்கள் தங்களை இந்தியர்கள் போல் மாற்றிக்கொண்டதில்லை. மாறுவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. இதேபோலவே தமிழர்களும் தாம் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்பட விரும்பவில்லை. சிங்களச் ஷசிறி| இற்கு எதிரான குழப்பம் இதற்கு உதாரணம். 1977இல் நிகழ்ந்த பொதுத்தேர்லில் அதே விடயத்தை இன்றைய உலக சனநாயக வழியிலும் அதே மொழியிலும் ஈழத்தமிழர்கள் கூறிவிட்டார்கள். அரசியல் தலைவர்களுக்கிடையேயான ஒப்பந்தங்களை விட இதுவே தார்மீகத் தகுதியை அதிகம் கொண்டிருக்கும் கருத்து வெளிப்பாடு. இந்தக் கருத்துக்கள் பற்றிய பிரக்ஞையற்ற பேச்சுக்களோ உடன்படிக்கைகளோ இங்கே செல்லாது என்ற நிலைக்குத் தமிழ்மக்கள் வந்து வெகுகாலமான பின்னும் ஒற்றையாட்சி பற்றிய கூச்சல் எழும்போது ஒரு கேலிக்கூத்தை இரசிக்கும் மனநிலையையே அது அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

இங்குள்ள தமிழர்கள் தாங்கள் தனித்துவமும் இறைமையும் உள்ள குடிகள் என்றே தங்களைக் கருதுகிறார்கள். அந்தப் பின்னணியில் கடந்தமாதம் வெற்றிலைக்கேணிக்கு அப்பால் நிகழ்ந்த கடற்சமரின் பின்னர் சிங்களக் கடற்படைத் தளபதி தங்கள் கடல் இறைமை பற்றிப் பேசியதும் தமிழீழக் கடற்படைத் தளபதி அதற்குப் பதிலிறுத்ததும் கவனிப்பிற்குரியவை. தமிழர் தாயகத்தை அண்டிய கடலின்மீது சிங்களக் கடற்படைக்கு இறைமை எப்போது எங்ஙனம் வந்தது என்று முதலில் பார்க்கவேண்டும்.

இரசிக்கவில்லை. யதார்த்தம் விளங்காத எரிச்சலூட்டும் செயலாகவே அது பார்க்கப்படுகிறது. பன்னாட்டு மத்தியத்தின் மீதான நம்பிக்கையையும் அது வெகுவாகச் சிதைக்கிறது.

அடுத்தது, ஒரு அரசிற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பிணக்கின் மீதான உலக அணுகுமுறை பற்றிய ஈழத்தமிழரின் அனுபவம். ஒரு உரிமைப் போராட்டத்தில் அரசல்லாதோருக்கு பல வசதிகள் மறுக்கப்படுகின்றன. சில வசதிகளை வழங்க முன்வரும் பிற அரசுகள்கூட அதற்கு விலையாக உரிமைக்கான இலட்சியத்தின் சாரத்தை அல்லது ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தலைக் கேட்கின்றன. அல்லது அரசிற்குச் சாதகமான இழுத்தடிப்பிற்கு ஒத்துப்போகின்றன. அதற்கான காரணங்கள் புரிந்துகொள்ளத்தக்கவை. இன்றைய உலக ஒழுங்கில் அரசு என்பதே உச்ச அதிகாரம் கொண்ட கட்டமைப்பு.

அதனுடனான வணிகத் தொடர்புகளே பாதுகாப்பானவை. இவ்வகையில், ஒரு அரசு இன்னுமோர் அரசை, அது எத்தகைய தன்மையைக் கொண்டதாயினும் தன் இனமாகப் பார்க்கிறது. தவிர, தார்மீக நலன்களை விடவும் வணிக மற்றும் பிராந்திய நலன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மனித உரிமைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகள் பற்றி எல்லோரும் வாய்கிழியக் கத்தினாலும் இதுவே தவிர்க்கமுடியாத மாறா உலக ஒழுங்கு. இந்தப் பேருண்மையை கால்நூற்றாண்டு விடுதலைப்போராட்ட அனுபவத்தில் தமிழ்மக்கள் பலமுறை முகத்தில் அறைவாங்கிக் கற்றுவைத்திருக்கிறார்கள்.

அந்த அனுபவத்தின் விளைபொருளாக தமிழர் பிரச்சினை தொடர்பான பொறுப்புணர்வு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இரண்டு தசாப்தங்களின் மேலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் வாழும் தேசங்கள் என்ற வகையில் அரை நூற்றாண்டுகால ஒடுக்குமுறைக்குள் வாழும் மக்கள்மீது அனுதாபம் இருக்கும் என்ற நினைவும் தகர்ந்து போனதில் மக்களுக்கு ஏமாற்றமே. இலங்கையில் இருந்து வெளியேறியபோது தமிழருக்கான உரிமைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டோம் என பிரித்தானியத் தூதுவர் சொல்லியிருப்பது ஆறுதலளித்தாலும் அது தீர்வாகாது.

இருந்தாலும், ஏமாற்றங்கள் பழக்கமாகிவிட்ட போராட்ட வாழ்க்கையில் தாங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் ஈழத்தமிழருக்குத் தடுமாற்றம் இருக்கவில்லை என்பதையே இங்குள்ள நிலைமைகள் கோடிகாட்டுகின்றன. 1995இன் பின்னர் வன்னிப் பெருநிலப் பகுதியில் ஒரு ஸ்திரமான அரசு இயங்கிவருதை யாரும் மறுக்கமுடியாது. அவ்வரசில் பதின்ம ஆண்டுகளுக்குமேற் பழமையான நீதிநிருவாகம், பொருண்மியம், காவற்றுறை போன்றவை திறன்படச் செயற்படுகின்றன.

இந்த அரசு தன் மக்களுக்கெதிரான பாரிய படையெடுப்புக்களை வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. மக்களுக்கெதிரான ஆண்டுக்கணக்கான பொருளாதாரத் தடைகளை இலாவகமாகக் கையாண்டு பட்டினிச் சாவு ஏற்படாவண்ணம் ஆட்சி புரிந்திருக்கிறது. பெற்றோரை இழந்த குழந்தைகள், மூதாளர், மனவலிமை குறைந்தோர் போன்றோருக்கான அவ்வீரர்களால் காக்கப்படுவதும் பன்னாட்டு நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டதுமான ஆட்சி எல்லைகளையும் இவ்வரசு கொண்டிருக்கிறது.

இங்குள்ள இருபத்தைந்து வயதிற்குட்பட்ட இளையவர்கள் தாம் உலகை அறியத்தொடங்கிய நாட்களில் இருந்து கண்டு வளர்ந்ததும் அரசென்று அறிந்திருப்பதும் தமிழீழ அரசைத்தான். தமக்குப் பாதுகாப்பும் கௌரவமும் கல்வி தொழிற்றுறை போன்றவற்றில் நேர்த்தியான கண்காணிப்பும் கொண்ட, அந்நிய மொழி பேசாத, உறவினர்களும் பங்கேற்கும் ஒரு இலட்சிய அரசில் அவர்கள் தசாப்த காலமாகக் குடிவாழ்கிறார்கள்.

இந்த எதார்த்த நிலையை உலகக் கவனத்திலிருந்து திசைதிருப்பும் நோக்கில் மகிந்த தன் முன்னோர்களைப்போலவே அரசியலமைப்பு எனும் சாக்கடைக்குள் சத்துள்ள தீர்வுமிட்டாய் தேடுகிறேன் பேர்வழி என்று அரசியல் பம்மாத்துக் காட்டுகிறார். அந்த நாடகத்தை உலகம் கண்டிக்கவில்லை.

தமிழர்மீதான சிறிலங்காவின் படுகொலைகளை நிறுத்தமுடியாமலும் பாதுகாப்பு வலயத்தால் அகதிமுகாம்களில் வாழுவோரை மீளவும் குடியமர்த்தவும் முடியாமலும் இருக்கும் பன்னாட்டுச் சமுதாயம், இத்தீவில் தமிழர் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் மூச்சுவிடக்கூடிய ஒரே இடமான தமிழீழ நடைமுறை அரசை ஆரம்பநிலைக் கெரில்லா அமைப்புக்களுடன் ஒப்பிட்டு அரசல்லாதோர், பயங்கரவாதிகள், தடைகள் போன்ற அந்நியப்படுத்தும் சொற்களுக்குள் கொண்டுவர முயற்சிப்பது உலக நடுவம் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றதேயன்றி தமிழீழ அரசுமீதான நம்பிக்கையையும் அதைப் பலமாக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது என்ற தகவலையே தமிழீழப் படைகளில் அதிகமாகச் சேருவதன்மூலம் தமிழ்மக்கள் இடித்துரைக்கிறார்கள்.

சிங்களவர்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் உலக சமூகத்திடம் அவர்கள் கேட்பது இதையே:

எங்கள் பாரம்பரிய உரிமையை அங்கீகரியுங்கள். அல்லது நாங்களாக அமைத்திருக்கும் அரசையாவது ஏற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது ஐம்பதாண்டுகால சிறிலங்கா அரசின் அராஜகங்களை நியாயப்படுத்தாமலாவது இருங்கள்.

0 comments:

Blog Archive