வான்மீகி தன் புகழ்பெற்ற இலக்கியத்தை அமைக்கும்போது திருகோணமலையைப் பற்றிச் சொல்லுவதே அந்த நகரைப்பற்றி நம்மால் பெறக்கூடிய மிகப் பழைய செய்தியாக அமை கிறது. அதன் மாடிகளை ஒளியூட்டி நறுமணம் இடுவது பற்றிக் கம்பர் வருணிக்கிறார்.
கி.மு. 3ம் நூற்றாண்டின் பட்டினப்பாலையில் சொல் லப்படுகின்ற தானிய ஏற்றுமதியும் திருமலைத் துறைமுகத்தினூடாகவே நிகழ்ந்திருக்கும். பொன் விளைக்கும் தமிழர் தாயகப் பிரதேசத் தின் உட்புற ஆற்றுச்சாலையும் வெளிவாயி லான இயற்கைத் துறைமுகமும் அதைக் காவல் செய்வதற்காக அலைதழுவும் மலை யின் மேல் அமைக்கப்பட்ட விற்கோபுரங்களும் அந்நாட்களில் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கற்பனைசெய்துபார்க்கும் எந்தவொரு தமிழருக் கும் நாம் எதையெல்லாம் பறிகொடுத்திருக் கிறோம் என்ற ஏக்கம் எழவே செய்யும்.
அதன்பின் ஆறாம் நூற்றாண்டில் பாடல் பெற்றபோதும் சோழர் கடலாண்ட காலத்தின் பரபரப்பான கடற்போர்கள் மற்றும் தரையிறக் கங்களின் போதும் திருமலையின் ஆன்மா அதன் உச்சத்தில் இருந்ததெனலாம். அதற் கும் பிறகான நான்கு நூற்றாண்டுகால ஐரோப் பிய ஆதிக்கத்தின் போது தமிழர் தாயகத்தின் விளைநிலங்கள் காடுகளாகிப் பாசனங்கள் தூர்ந்து நெல் வெளியேறிய வாசல்களால் கோதுமை உள்ளே வரத்தொடங்கிய போதும் திருமலையின் முக்கியத்துவத்திற்குக் குறை வேதும் இருக்கவில்லை.ஷதிருகோணமலையை வைத்திருப்பவர் இந்து சமுத்திரத்தின் திறவு கோலை வைத்திருக்கிறார்| என்று 19ம் நூற் றாண்டிலே பிரித்தானியாவின் பிரதமராக விருந்த வெலிங்டன் பிரபு சொல்லியிருக்கிறார். அங்கு அமைக்கப்பட்ட எண்ணைக் குதங் களும், விமானத்தளமும், அயலிலமைந்து விட்ட இல்மனைற் படுகையும் அதன் முக்கி யத்துவத்தை மென்மேலும் அதிகரிக்கவே செய்தன.
ஐரோப்பியருக்கு முந்தைய ஐந்நூறு ஆண்டுகால தமிழர் இராட்சிய காலத்தின் போதே சிங்கள இராட்சியமானது, வளமிக்க இந்த மண்ணிலும் பாதுகாப்பரனோடு கூடிய துறைமுகத்திலும் ஒரு ஷகண்| வைத்திருந் ததை திரு வி. நவரத்தினம் (தமிழ்த் தேசியத்தின் வீழ்ச் சியும் எழுச்சியும்) குறிப்பிடு கிறார். பிரித்தானியர் வெளி யேறிய கையோடு தீவின் அதிகாரத்தைப் பெற்றுக பட்ட சிங்களக் காடையருக்கு, தமிழருக்கு எதிரான கலவரங்களில் பயன்படுத்துவதற் கான டைனமைற் குச்சிகளை குடியேற்றத்திற் குப் பொறுப்பான சிங்கள அமைச்சர் சி.பி.டி. சில்வா விநியோகித்தார் என்று அப்போதைய வவுனியா பா.உ சுந்தரலிங்கம் பாராளு மன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். திருமலை த் துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதன் விளைவாகத் தமிழர்கள் அதன் உரிமையை முற்றாக இழந்தனர் எனலாம்.
தமிழர் தரப்பினரிடம் நிரந்தரமான படைக் கட்டுமானம் அமைந்தபின் கண்மூடித்தனமான குடியேற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. திரு மலை பறிபோகிறது என்ற சங்கதி உறைக்கத் தொடங்கியதே தமிழரின் ஆயுதப் போராட்டம் தலைப்பட்ட பின்பு தான். எழிலும் வளமும் மிக்க மலைப்பட்டணம் தமிழர் தாயகத்தின் தலைநகராகத் தேசியத் தலைமையால் தெரிவு செய்யப்பட்தற்கான காரணங்கள் சாதாரணமான தாக இருந்திருக்க முடியாது. இருப்பினும் திருமலையின் மீதான சிங்களக் காமம் இன்ன மும் தீரவில்லை என்பது கண்கூடு. அது திடீ ரென முனைப்புப் பெற்றதுபோலத் தோன்று வதற்கான பின்புலங்கள் ஆய்விற்குரியவை.
தமிழர் தாயகக் கருத்துக்கள் அரசியல் வகையில் முனைப்புப் பெற்றபோது, தமது இயல்பின்படி பிரச்சினைகளின் அடிவேர் களைப் பாராது அடக்கும் வழியையே தேடிய சிங்களம், பெருமெடுப்பிலான வன்முறைப் பிரயோகம், கருத்து முறியடிப்பு, மற்றும் நடை முறைத் தடங்கல்களை ஏற்படுத்தல் என்னும் மும்முனைச் செயற்பாட்டில் இறங்கியது.
தாயகக் கோட்பாட்டுக் கருத்தைத் தெரிவிப் பதையும் செயல்களால் நாடுவதையும் தண்ட னைக்குரிய குற்றமாக்கும் புதிய அடக்கு முறைச் சட்டங்களை அமைத்தல், தாயக நிலப்பரப்பை நிருவாகம், போக்குவரத்து மற் றும் தொழில் முறையில் ஒன்றிலொன்று சார்ந்திரா வண்ணம் அல்லது தொடர்புறா வண்ணம் துண்டாடுதல், உட்பிரிவினைகளை ஏற்படுத்தித் தூண்டுதல் என்பன முக்கியமான தடங்கல்கள். தமிழர் தாயகத் தரைத்தோற்றத்தில் மிக வொடுங்கிய பகுதியான திருமலையை சிங்கள மயமாக்குவதன் மூலம் தென்பகு தியைத் துண்டாடி, தாயகக் கோட்பாட்டிற்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தலாம் என்பதே சிங்க ளத்தின் கணிப்பு. தமிழர் தாயகத்தின் கீழைக் கரையோரமாக காங்கேசன்துறையில் இருந்து பூமுனை வரை செல்லும் நெடுஞ்சாலை யைச் செயலிழக்க வைத்ததுடன் திருத்து வதற்கான வாய்ப்புக்களையும் உதாசீனம் செய்து நேரடி யாக இன்னுமொரு தமிழ்ப் பிரதே சத்திற்குள் நுழைய முடியாதபடி திருமலையைப் போக்கு வரத்து அளவில் தனிமைப் படுத்தியதில் சிங்களம் ஒரளவு வெற்றியைக் கண்டிருக் கிறது. இப்போது அரச நிருவாகத்திலும் சமயம் மற்றும் சேவைக் கட்டுமானங்களிலும் சிங்கள மேலாளர்களை நிறுத்துவதன் மூலமும் திரு மலையின் ஒட்டுமொத்த இயக்கத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைகிறது. அதற்குத் தடையாக இருக்கும் கருத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். முக்கிய இடங்களில் இருக்கும் தமிழர்களை இனக்கல வரங்கள், படையினரின் படுகொலைகள் மற்றும் அடாவ டிகள் போன்றவற்றால் இடம்பெயர்க்கும் முயற் சிகள் நிகழ்கின்றன. அவ்வகைக் கலவரங்க ளை உண்டாக்குவதற்கான செயலாகவே புத்தர்சிலை விடயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது கலவரங்களால் இடம்
பெயர்ந்தவர்களுக்கு நன்மை செய்வது போல வேறு இடங்களில் தங்குமிட ஏற்பாடுகள் செய்து நிரந்தரமாகவே வெளியேற்றி விடவோ அல்லது தமிழர் குடிப்பரம்பலை ஐதாக்கவோ முயற்சிகள் நிகழலாம். இதன் வெளிநீட்டங் களே திருமலையின் கலவரங்கள்.
ஆனால் சம்பூர் மீதான விமானத் தாக்கு தலுக்கு இந்த நாட்டம் மட்டுமே காரணமாயி ருப்பதாகத் தெரியவில்லை. வேட்டையாடும் மிருகத்திற்கு வேட்டைப் பொருளின் தசை பற்றிய பிரக்ஞை மட்டுமே இருப்பதைப் போல உலக இராச தந்திரிகளுக்கும் ஒரு தரைப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் பாதுகாப் புப் பெறுமானமே கருத்திற்குரியது. அந்த வகையில் தமிழீழத்தின் உற்பத்திப் புலங்கள் போக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வகை யில் முக்கியம் பெறுவது மூன்று புள்ளிகள். அவை காங்கேசன்துறை, ஆனையிறவு மற்றும் திருகோணமலை. அவற்றில் சேது சமுத்திர முக்கியத்துவம் ஏற்பட்டாலே தவிர காங்கேசன் துறைக்குப் பாதுகாப்புப் பரிமாணம் மட்டுமே தற்போதைக்கு உண்டு. ஆக, சம காலத்தில் அதிமுக்கியம் பெறுபவை ஆனை யிறவும் திருகோணமலையுமே.
இப்போது பன்னாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையிலே தமிழருக்குச் சரியாசனம் தருவதற்கான
முக்கிய காரணிகளில
முதலாவது,
சிறிலங்காவின் எந்தவொரு பொருளாதார இலக்குகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் திறனைப் புலிகள் ஒன்றுக்கு மேற்பட்ட தருண ங்களில் நிரூபித்திருப்பது.
இரண்டாவது,
துறை முகம், விமானத்தளம், தொழிற்சாலை, மீன்பிடி மற்றும் மனிதவளம் போன்ற செல்வங்களைக் கொண்டுள்ள குடாநாட்டின் வாசலும் பாதுகாப் பரணுமான ஆனையிறவு புலிகளின் கையில் இருப்பது.
மூன்றாவது,
திருமலைத் துறை முகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் படை வீச்செல்லைக்குள் புலிகள் நிலை கொண்டிருப்பது. தமிழரின் பேரம் பேசும் பலம் என்ன என்ற உலக இராசதந்திரக் கேள்விக்கு மேற்கூறிய விடயங்களின் அடிப்படையிலேயே பதில் அமைய முடியும். அந்த அழுத்தங்களின் விளைவே தென்னை மரத்தில் தேள்கொட்டி யதற்குப் பனை மரத்தில் நெறிகட்டியது போல படைத்தளபதி தாக்கப்பட்டதற்குப் பதிலாக சம்பூர் சாடப்பட்டது.
சிறிலங்கா அரசின் அண்மைக்காலப் போராயுதக் கொள்வனவை நோக்கும் போது அதிலும் ஒரு கோலம் புலப்படுகிறது. அவற் றில், தரைக்கண்காணிப்பு ராடர்கள், கவசத் துருப்புக்காவிகள், கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனம், மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பொருத்திய ஐPப், பல்குழல் ஏவுகணை செலுத்திகள் வு-55 டாங்கிகள் என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவை வேக நகர்வை யும் திறந்தவெளிச் செயற்பாட்டையும் கோடி காட்டுகின்றன.
இவையனைத்தும் வான் வழி யாக நகர்த்தப்படக் கூடியவை என்பதும், இவையனைத்திற்குமாகத் தரையைத் தொடா மலேயே வினியோகிக்கும் ஆற்றல் உள்ள ஹேர்குலிஸ் ஊ-130 விமானத்தையும் சிறி லங்கா கொள்வனவு செய்கின்றது என்பதும் கவனிப்பிற்குரியவை. தரையில் வேகம் குறை வான பெரிய ஆர்டிலறிகள் தவிர்க்கப்பட்டிருப் பதைப் போலவே கடலிலும் தரையிறங்குகலங் கள் இம்முறை நாடப்படவில்லை. மாறாக, கடற்கலங்களில் இருந்து ஏவக்கூடிய மோட்டார் களும், வேகத்தாக்குதற் கலங்களும், கடற் கண்ணிகளும் கோரப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து ஆதரவு தரக்கூடியதும் கோடை காலத் தில் திடமான தரையாக இருப்பதுமான ஆனையிறவை அண்டிய பெருவெளிகள் போன்ற இடங்களில் மேற்கூறிய படைக்கலங் கள் தொகுப்பாகப் பயன்படுத்தபடக் கூடியவை.
வரலாற்றின் வழித்தடத்தில் திருமலை என்பது தமிழர்தாயக உணர்வுமையமாகவே இருந்து வந்திருக்கிறது. உன்னதமான பல போராளிகளையும் அவர்களைப் பெற்ற தாய்ச்ச மூகத்தையும் உடைய திருமலையின் ஆன்மா உள்@றக் குமுறிக்கொண்டிருக்கிறது. எழுச்சிப் பேரணிகளிலும், உணர்வுக் கூட்டங்களிலும், போர்ப்பங்களிப்பிலும், அண்மைத் தேர்தலிலும் அதன் உணர்வுக் குமுறலின் ஒலி கேட்கவே செய்தது. அதன் வேதனையை பேச்சுவார்த்தைகள் தீர்த்து வைக்கவில்லை என்பது வெளிப்படை.
இந்த நாட்டில் இரத்தம் சிந்துதலைத் தவிர்க்க விரும்புபவர்கள் சிங்கள மக்களுக்கு மூன்று உண்மைகளைக் கற்றுத்தர வேண்டும். முதலாவது, தமிழர் தரப்பு சிங்களப் படைதரப் பைத் தாக்குவது ஒரு குற்றமல்ல. அது உயிர் பிழைப்பதற்கான ஒரு உத்தி. இரண்டாவது தமிழர் நாட்டைப் புதிதாகப் பிரிக்க நினைக்க வில்லை. ஐரோப்பியரின் நிருவாக வசதிகரு திய கோர்ப்பின் விளைவாக நிருவாகத்தால் மட்டும் ஒன்றிணைந்த இரு தேசங்களில் ஒன்று தனது விருப்பிற்கமையப் பிரிந்து செல்ல நினைப்பதே தமிழரின் போராட்டச்செய்தி.
அது சிங்களவர்களுக்கு எதிரான யுத்தமல்ல. மூன்றாவது, தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்கு லத்திற்குமாகப் போராடுவது அந்த மண்ணின் மைந்தர்கள். அதை எதிர்த்து நிற்கும் உங்கள் வீரர்கள் அந்நியர்கள். இந்த உண்மைகளைத் துணிந்து சொல்லும் வீரம் சிங்களத் தலைவர் களில் எவருக்கும் இருந்ததில்லை. மகிந்தரும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.
Wednesday, September 10, 2008
இந்து சமுத்திரத்தின் திறவுகோல்...
Posted by defencetamil at 12:21 PM
Labels: போராட்ட வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
September
(139)
- தடங்கள் தொடர்கின்றன
- அந்நியர் ஆட்சியும் மக்கள் எதிர்ப்பும்
- போராட்ட வரலாறு
- மேஜர் துளசி
- வரலாறும் தேசியமும்
- கடற்புலிகளின் தாக்குதல் காணொளிகள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- நீரடி நீச்சல் படையணியின் சாதனைகள்
- காங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்
- யாழ்ப்பாண படையெடுப்பு தமிழ்மக்களுக்கு ஒரு செயன்முற...
- மூன்றாம் ஈழப்போர் ஆரம்பம்
- போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாக செ...
- இரண்டாம் ஈழப்போர்
- விடுதலைப்போரின் இறுதி வெற்றியை உறுதி செய்யும் கடற்...
- நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்
- வீரத்தின் சிகரங்கள்
- பலாலி விமானத்தளத் தாக்குதல்
- கப்டன் ஈழமாறன்
- எதிரியின் கோட்டைக்குள் ஒரு அதிரடி
- இலட்சிய உறுதியில் இரும்பு மனிதர்கள்
- ஜொனி மிதி வெடி
- உணவுக்காக ஒரு ஒப்பறேசன்
- எழுத முடியாத காவியங்கள்
- லெப்.மயூரன்
- ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்
- லெப்.கேணல் சூட்
- லெப்.கேணல் நவநீதன்
- கல்வியும் புலிகளும்
- லெப்.கேணல் நரேஸ்-நாயகன்
- கப்டன் துளசிரா
- தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்
- முறியடிக்கப்பட்ட குடாநாட்டு முற்றுகை
- நெருப்பின் குறிப்புக்கள்
- கரும்புலிப் போர் வடிவம் ஓர் போரியல் தேவை
- கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்
- தியாகத்தின் இமயங்கள்...!
- ஒப்பறேசன் தவளையில் கடற்புலிகள்
- கரும்புலிகள் கணெஸ், கோபி
- கடற்கரும்புலி மேஜர் கோபி
- கடற்கரும்புலி மேஜர் கணெஸ்
- இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற...
- மாவீரன் பால்ராச்
- மதிப்புக்குரிய தளபதி
- வீரர்கள் மதிக்கும் வீரன்
- பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்
- யூலை இது கரும்புலிகள் மாதம்.
- இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்
- இந்து சமுத்திரத்தின் திறவுகோல்...
- தமிமீழம் ஒரு தனியரசு
- உள்ளிருந்து ஒரு குரல் 3
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- மாமனிதர் ஞானரதன்
- தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்
- கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் ...
- ஆனையிறவும் அந்த நாட்களும்...
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- மூன்றாம் கட்ட ஈழப்போர்
- மாவீரர் நாள் உரை 2006 காணொளி
- மாவீரர் நாள் உரை 1999
- மாவீரர் நாள் உரை 2000
- மாவீரர் நாள் உரை 2001
- மாவீரர் நாள் உரை 2002
- மாவீரர் நாள் உரை 2003
- மாவீரர் நாள் உரைகள்
- ஓயாத அலைகள் - 3 தாக்குதல் காணொளி
- மாவீரர் நாள் உரை - 2007
- அந்தக் கணப்பொழுது
- வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு
- இரகசியத்தின் பெறுமதி
- மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்ப...
- மாவீரர் நாள் உரை 2007 காணொளி
- நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்
- தமிழ்செல்வம் -க.வே.பாலகுமாரன்
- வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் - ச.பொட்டு
- கப்டன் திலகா
- தமிழீழ விடுதலையும் தமிழீழ முஸ்லீம்களும்
- தலைவரின் உண்ணாவிரதம்
- தமிழீழ அரசியலும் தமிழ்க் குழுக்களும்
- தமிழீழ நீதி மன்றம்
- தமிழீழ விடுதலைப் போராட்டம்
- உள்ளிருந்து ஒரு குரல் 2
- தேசத்தின் குரல் காணொளிகள்
- பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்
- பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பதிவுகள்
- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்
- உள்ளிருந்து ஒரு குரல்
- மாவீரர் நாள் உரை 2006
- லெப்.கேணல் சூட்டி
- லெப்.கேணல் ஜோய்
- லெப்.கேணல் சரா
- லெப்.ரவிக்குமார் லெப்.சின்னா கப்டன் கரன்
- அன்பு
- தமிழரின் தாயகம்
- பூநகரி வெற்றியின் உற்ற துணைவர்கள்
- மாமனிதர் பேராசிரியர் துரைராசா
- கடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்
- கடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மண...
- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
- லெப்.தமிழ்மாறன்
- புலிகளும் மத சுதந்திரமும்
-
▼
September
(139)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment