வன்னிக்களத்தின் முதன்மை இலக்கொன்றில் நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது. பஞ்சுடரின் மோட்டார் சுடு கருவி. பஞ்சுடருக்கு கொடுக்கப்பட்டது ஒரு மோட்டார் தொகுதியின் பொறுப்பு மட்டுமே. ஆனால் அவளின் திறமை கருதி அவளது தளபதி இரண்டு மோட்டார் தொகுதிகளின் பொறுப்பை அவளிடம் கொடுத்தார்.
பஞ்சுடர் இப்போது தன்னுடைய மோட்டாரையும் இன்னொரு பெண் போராலியுடைய மோட்டாரையும் சேர்த்துக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். மெலிந்த உயரமான அந்தப் பெண் போராளிகளுக்குள் புதைந்து கிடப்பது அமைதியான ஆனால் கூரிய ஆளுமை. அவள் அதிகம் கதைத்ததும் இல்லை. தேவைக்கேற்ற அளவில் தனது கருத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்தும் அவளைப் பிரிந்தபோது அவளது வீடு துடித்துதான் போனது.
பஞ்சுடரின் தந்தையான தவம் ஜயா இயக்க நிறுவனம்மென்றில் தான் பணிபுரிகின்றார். அவரது நான்கு பிள்ளைகளும் அவள் மூத்தவள். வன்னியின் மடியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 2002 இல் கலைத்துறையில் தமிழ்மொழியை சிறப்புப் பாடமாக கற்று ஒரு பட்டதாரியாக வெளியோரிய பஞ்சுடர் காலத்தின் தேவையுணர்ந்து. வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்கு என்ற கொள்கைக்கு ஏற்ப தானே முன்வந்து போராட்டத்துடன் இணைந்துக் கொண்டாள்.
அவள் வீட்டிலும் முதற்பிள்ளை. போராட்டத்தில் இணைந்துகொள்வதற்கான தெரிவிலும் அவளே முதற்பிள்ளை தவம் ஜயாவும் நீண்ட கால போராட்டத்தோடு ஒன்றிருப்பவர். தேசிய விடுதலை என்ற இலட்சியத்தை விட உயர்ந்த ஒரு குறிக்கோள் அவருக்கும் இல்லை. அவரிடம் இருப்பது தானே பிள்ளைக்கும் இருக்கும். எனினும் அவருக்கு ஒரு ஜயம். பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரியான தனது பிள்ளை ஒரு படையணியில் என்ன வேலை இருக்கும்? இதை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதை விளங்கப்படுத்துவதற்கு மகளும் அடிக்கடி விடுப்பில் வந்து போக எதிரி விடுவதில்லை.
வரைபடம், முன்னனி அவதானிப்பு, எறிகணை நிலைப்படுத்தல், குறி இலக்குத் தவறாத எறிகணைச் சூடு, கட்டளைவழங்குதல், தேவைக்கோற்ப நகர்த்துதல் என்று ஒரு மோட்டார் சுடுகருவித் தொகுதியின் அனைத்து நடவடிகட்கைகளுக்கும் பொறுப்பாக இருப்பவர் ஒரு படையப் பொறியியலாளராக அல்லது அவருக்கு இனையான கல்வியை கற்றவராக இருக்கவேண்டியது போரியல் நடைமுறையாகும். பஞ்சுடர் இப்போது தனியோ ஒரு பட்டதாரி மட்டுமல்ல. விடுதலைப்புலிகளின் குட்டிசிறி மோட்டார் மகளிர் அணியின் ஒரு படையப் பொறியியலாளரும் கூட. பட்டறிவு அவருக்கு இன்னுமின்னும் செயற்றிறனை அதிகரிக்கும். அறிவை வளர்ப்பதற்கு மேலும் துணைபுரியும்.
1970 களில் சிங்களத்தால் கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் நடவடிக்கை யான தமிழர்களின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது. அதைக் கண்டு கொதித்த தமிழ் இளைஞர்கள் பலர் தமது உயர் கல்வியை உதரிவிட்டுத் தலைவன் வழியில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டார்கள்.
லெப். கேணல் திலீபன், லெப்.கேணல் ராதா, லெப்.நித்திலா, கேணல். ராஜூ என்று நீண்டு செல்லும் பட்டியல் ஆற்றலும் அறிவும் நிரம்பியவர்கள் தமது உயர்கல்வியைத் துறந்தாலும் அவ்வறிவைக் கொண்டு விடுதலை வரலாற்றை மேலும் வலுவடையச் செய்ததையே சுட்டி நிற்கிறது. கல்வி தமிழர்களது பெரும்பலம். அத்தகைய கல்வியைத் தேடிப் பெற்றவர்கள் போராட்டவழியில் மேலும் பலத்தைதான் தேடித் தருவார்கள். பஞ்சுடர் ஒரு பட்டதாரி. அவருக்குத் தனது செல்நெறியின் இலக்கு நன்றாகவே தெரியும். காலத்தின் தேவை கருதிய கல்வியே பயனுள்ளது. அளிவுடன் இணைந்த ஆளுமையே பலம் வாய்ந்தது.
சிங்களப்படைகள் பட்டிமாடுகளைப் போல படையெடுத்து வந்து புலிகளின் உயிர் வேலிகளில் முட்டும் போது பஞ்சுடரின் மோட்டார் சுடுகருவி பொழிந்து தள்ளும் நான்காம் கட்ட ஈழப்போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் சண்டைகளில் அவளது பங்கேற்பும் நிச்சியம் இருக்கும். தவம் ஜயா தளத்தில் நின்று செய்வதை அவள் களத்தில் நின்ற செய்கிறாள் வேறுபாடு அதுமட்டுமே. இலட்சியம் இருவருக்கும் ஒன்றே.
படிக்கவேணும் எல்லாருக்கும் இது அடிப்படையான கடமை. பள்ளிக் கூடம் சென்று படிப்பது சிறுவயதில் பலரக்குக் களவு. பலர் பள்ளிப் படிப்பின் இடையே காணாமல் போவதுண்டு. பள்ளிப்படிப்பைத் தொலைத்தாலும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல ஏதாவது வழி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் போராடுவதை மறந்தால் எமது வாழ்வை மீட்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா?
பள்ளிப் படிப்பை இடைவிட்டார்கள் ஏதாவது காரணத்தால் தொடர முடியாதவர்கள் போராட்டப் பாதையில் இணைந்து கொண்டாலும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். இது தவிர்க்க முடியாத நிலைப்பாடு.
இல்லையெனில் போரில் நாங்கள் தோற்றப்போகவே நேரிடும். லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் மகளிரணியில் இணைந்துக் கொள்ளப்பட்ட புதிய பெண் போராளிகளில் சிலரக்குத் தமது கணித அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலைப்பாடு இருந்தது. கணிதப் பாடம் என்றால் பலருக்குப் பாகற்காய்தான் நினைவில் வரும். என்னசெய்வது படிக்கத்தான் வேண்டும்,. அணித்தலைவிகளுக்கு அனைவரையும் அனைத்துக் கடமைகளிலும் பயுற்றிவிக்க வோண்டிய பொருப்பு இருந்தது.
பூளோ நிலைகாண் தொகுதி பற்றிய விளக்கம், வரைபடங் கீறுதல், குறியிலக்குகளைச் சரியாக இனங்கானபதற்காக ஆள்கூற்றுத் தெரிவு. விலத்தல்களை அவதானித்தால், சரியான சூடுகளை வழங்குதல் என்று அணைத்துக்கும் கணகN;க போடவேண்டும.; கணிக்கின் சிறுதவறும். சண்டையில் பெரும் பிழை ஆகிவிடும். பாடசாலையில் சாதாரண தரம் வரைக் கற்றவர்களுக்குக் கணக்கை விளங்கப்படுத்தி கற்பிப்பதும். அவ்வளவு சிரமமில்லை. ஆனால் அதுவரைக் கூடக் கற்காதவர்களுக்குப் பெரும் கணிப்பக்களை சொல்லிக்கொடுப்பது எளிதான விடயமல்ல. அவர்களும் அதை முற்று முழுதாக விளங்கிக் கொள்வது கடினம் தான். ஆனால் வன்னிக் களமுனையில் நிற்கும் மோட்டார் அணிப் போராளிகளின் கதை வேறாக இருந்தது.
கிடைக்கும் இடைநேர மெல்லாம் தெரிந்தவர் சொல்லிக் கொடுத்தார்கள். தெரியாதவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்கள். கடிணமானக் கணக்கு என்று அவர்களுக்கு எதுவுமே இருப்பதில்லை. அந்தப் பெரிய சுடுகருவியைத் தூக்கிச் சென்று நிலைப்படுத்தி, தொடர் சூடு வழங்கி,நிலையமைத்து உடல்களைப் புறத்தக்க பெரும் பெரும் வேலைகளைச் செய்யும் அவர்களுக்காக கணக்கைப் புரிந்து கொள்வது கடினம்.
காட்டுச் சூழலில் தூரத்தே இருக்கும் போது கணக்குப் போட்டு பார்த்துக் குறிப்பேடுகள் சிலவேளை முடிந்து விடும். அவசரத்திற்கு எடுக்க முடியாது. அதற்காகப் படிக்காமல் இருந்துவிடவா முடியும? முடியாது எதையும் சமாலிப்பது போல இதையும் சமாளிப்போம் அவர்களுக்கு அறிவு வேலை செய்தது. லக்ஸ்பிறே மாப்பொட்டி அட்டைகள், நுளம்புத் திரிப்பெட்டி மட்டைடிள். சோப் உறைகள் ஒன்றையும் அவர்கள் எறிவதில்லை. பெட்டி மட்டைகள் நான்காக வெட்டி இனைக்கப்பட்டு ஒரு குறிப்போடாகிவிடும். அதிலே போட்டுப் பார்த்து நிறுவி அவர்கள் தெளிவு பெற்றார்கள்.
போரிலே அவர்கள் புலி என்பதைப்போல இப்போது கணக்கிலும் அவர்கள் புலிதான். சும்மாவ? சண்டைக்கென்று முன்னேறி சிங்களப்படைகள் வைத்தி-ருக்கும் படைக் கருவிகளைப் பறித்தெடுத்து அவற்றாலேயே பகைவரை ஓட ஓட விரட்டி; முன்னெப்போதுமே ஓடிப்பார்க்காத படையை ஊர்திகளைத் தமக்குத் தெரிந்த வகையில் ஏதோ திருகிப் பார்த்துப் புலிக்கொடியைக் கட்டிக்கொண்டு அதிலே வெள்ளோட்டம் பார்த்து வீரப்பரம் பரையின் வழித்தடத்தில் பயணிப்பவர்கள் அல்லவா அவர்கள். இவர்கள் எட்டிப்பின்னிற்பார்கள்.
சிங்களப் படைகள் அடிக்கடி புலிகளைச் சீண்டிப் பார்க்க முனைந்து தோற்றுப் போகும் படைவலுவோடு பாய்ந்து வந்த அவர்களின் குட்டிசிறி மோட்டார் அணியின் பீரங்கி கணைகள் இடியென இறங்கும்.வந்தவர்கள் வாங்கிக் கட்டிக்கொண்டு வந்த வழியே ஓடமுடியாது. சிதறு தொங்காய்போல சில்லா பல்லமாகி ஓட்டமெடுப்பார்கள். அவர்கள் ஓடும் போது கீலே உறங்கிக் கிடக்கும் கண்ணிவெடிகளில் காலை வைத்து தமிழர் நிலத்தில் மிதித்ததன் பலனைப் பெருவார்கள்;. பள்ளிக்கணக்கில் தேறியதை தேர்ச்சி அறிக்கையில் பார்த்துத் தொரிந்து கொள்பவர்கள் எத்தினை பகைவர் வீழ்ந்தார் என்பதை கணக்கிட்டு;
மன்னார் களமுனையில் நிற்கும் பெண்புலிகள் சண்டையனிகளுக்கு இருப்பிடமே காப்பரன்கள் தான். அவர்கள் எல்லோரும் பலதரப்பட்ட குடுப்பங்களிலிருந்தே போராட்டத்துக்கு வந்திருந்தார்கள். சிலரது வீடுகள் கல்லில், சிலரது குட்டி மாளிகைகள், சிலரது ஏழ்மைக் குடிகொள்ளும் குடிசைகள். ஆனால் எல்லோருக்கும் இப்போது பொதுவான வாழிடம் மரக்குற்றிகளும். மண்மூடைகளும் அடுக்கப்பட்ட காப்பரண்கள் தான். சிறு சிறு பார்வைத் துவாரங்கள் மட்டுமே காற்றை உள்வாங்கிக் கொள்ளும். அதற்குள் புழுக்கமோ. குளிரோ இருந்துதான் ஆகவோண்டும்.
காடு,குளக்கரை - அணைக்கட்டு, பற்றைகள், வீதிகள் என்று களமுனையின் பரப்பில் பரந்து விர்ந்திரக்கும் காப்பரண் வரிசையில் அவர்கள் வாழ்கின்றார்கள். இல்லையில்லை சண்டை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களின் நெஞ்சையழத்தும் விடயங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. இத்திக்கண்டல், பரப்பாங்கண்டல், பாலைக்குழி, கட்டுக்கரை, தம்பனை, மடு, இங்கெல்லாம் நிற்கும் போது அழகிய வீடுகள் இருந்தன். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அந்த ஊர்களில் மக்கள் எங்கெங்கோ அலைந்து வந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதிலும் இத்திக்கண்டலில் பெரிய பெரிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. மக்கள் இன்னமும் அந்த வீடுகளில் குடிபுகுதலையே செய்யவில்லை. அங்கோள்ளாம் படையினரின் டாங்கிச் சூடுகள், எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிரந்தன ஆனால் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் அகதியாய் வாழ்ந்துக் கொண்டிரக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கும் அவர்களுக்கு நெஞ்சுள் நெருப்ப்பெரிவது போல இருந்தது. வெகுவிரைவாக இந்த இடங்களையெல்லாம் இறங்கி அடித்துப்புடித்தப் பகைவரை கலைத்துவிட்டு ஊரவர்களைக் கூட்டி வந்து வாழவைக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தலை நீட்டிக்கொண்டிருந்தது. கட்டளைக் கிடைக்கும் வரையில் கட்டுண்டு கிடப்பது ஒண்றும் இலோசான விடயமல்ல. இளம் வயது. துடிதுடிப்பான பருவம், வீட்டில் இருந்தபோது மனதுள் உறைந்து கிடந்த பயம் இப்போது இல்லை. துப்பாக்கியே துணையென வாழும் வாழ்க்கையில் கட்டளைக்குக் கீழ்படிதல் முதன்மையான விடயம்.
இப்போது. அவர்கள் தமது கோபங்களை அடைகாத்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைய நிலமீட்புப் போர் நடக்கும் போது அந்த அழகிய நிலத்தில்லிருந்து மக்களைத் துரத்தியவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காப்பரணுக்குள் வாழ்ந்தாலும் அவர்களின் கனவுகள் வானத்தைவிட விரிந்து கிடந்தன. அந்தக் கனவுகள்.
ஈடேறும் காலம் அருகிலேயே இருக்கின்றது.
-அம்புலி-
Wednesday, September 10, 2008
உள்ளிருந்து ஒரு குரல் 3
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
September
(139)
- தடங்கள் தொடர்கின்றன
- அந்நியர் ஆட்சியும் மக்கள் எதிர்ப்பும்
- போராட்ட வரலாறு
- மேஜர் துளசி
- வரலாறும் தேசியமும்
- கடற்புலிகளின் தாக்குதல் காணொளிகள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- நீரடி நீச்சல் படையணியின் சாதனைகள்
- காங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்
- யாழ்ப்பாண படையெடுப்பு தமிழ்மக்களுக்கு ஒரு செயன்முற...
- மூன்றாம் ஈழப்போர் ஆரம்பம்
- போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாக செ...
- இரண்டாம் ஈழப்போர்
- விடுதலைப்போரின் இறுதி வெற்றியை உறுதி செய்யும் கடற்...
- நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்
- வீரத்தின் சிகரங்கள்
- பலாலி விமானத்தளத் தாக்குதல்
- கப்டன் ஈழமாறன்
- எதிரியின் கோட்டைக்குள் ஒரு அதிரடி
- இலட்சிய உறுதியில் இரும்பு மனிதர்கள்
- ஜொனி மிதி வெடி
- உணவுக்காக ஒரு ஒப்பறேசன்
- எழுத முடியாத காவியங்கள்
- லெப்.மயூரன்
- ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்
- லெப்.கேணல் சூட்
- லெப்.கேணல் நவநீதன்
- கல்வியும் புலிகளும்
- லெப்.கேணல் நரேஸ்-நாயகன்
- கப்டன் துளசிரா
- தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்
- முறியடிக்கப்பட்ட குடாநாட்டு முற்றுகை
- நெருப்பின் குறிப்புக்கள்
- கரும்புலிப் போர் வடிவம் ஓர் போரியல் தேவை
- கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்
- தியாகத்தின் இமயங்கள்...!
- ஒப்பறேசன் தவளையில் கடற்புலிகள்
- கரும்புலிகள் கணெஸ், கோபி
- கடற்கரும்புலி மேஜர் கோபி
- கடற்கரும்புலி மேஜர் கணெஸ்
- இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற...
- மாவீரன் பால்ராச்
- மதிப்புக்குரிய தளபதி
- வீரர்கள் மதிக்கும் வீரன்
- பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்
- யூலை இது கரும்புலிகள் மாதம்.
- இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்
- இந்து சமுத்திரத்தின் திறவுகோல்...
- தமிமீழம் ஒரு தனியரசு
- உள்ளிருந்து ஒரு குரல் 3
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- மாமனிதர் ஞானரதன்
- தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்
- கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் ...
- ஆனையிறவும் அந்த நாட்களும்...
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- மூன்றாம் கட்ட ஈழப்போர்
- மாவீரர் நாள் உரை 2006 காணொளி
- மாவீரர் நாள் உரை 1999
- மாவீரர் நாள் உரை 2000
- மாவீரர் நாள் உரை 2001
- மாவீரர் நாள் உரை 2002
- மாவீரர் நாள் உரை 2003
- மாவீரர் நாள் உரைகள்
- ஓயாத அலைகள் - 3 தாக்குதல் காணொளி
- மாவீரர் நாள் உரை - 2007
- அந்தக் கணப்பொழுது
- வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு
- இரகசியத்தின் பெறுமதி
- மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்ப...
- மாவீரர் நாள் உரை 2007 காணொளி
- நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்
- தமிழ்செல்வம் -க.வே.பாலகுமாரன்
- வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் - ச.பொட்டு
- கப்டன் திலகா
- தமிழீழ விடுதலையும் தமிழீழ முஸ்லீம்களும்
- தலைவரின் உண்ணாவிரதம்
- தமிழீழ அரசியலும் தமிழ்க் குழுக்களும்
- தமிழீழ நீதி மன்றம்
- தமிழீழ விடுதலைப் போராட்டம்
- உள்ளிருந்து ஒரு குரல் 2
- தேசத்தின் குரல் காணொளிகள்
- பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்
- பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பதிவுகள்
- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்
- உள்ளிருந்து ஒரு குரல்
- மாவீரர் நாள் உரை 2006
- லெப்.கேணல் சூட்டி
- லெப்.கேணல் ஜோய்
- லெப்.கேணல் சரா
- லெப்.ரவிக்குமார் லெப்.சின்னா கப்டன் கரன்
- அன்பு
- தமிழரின் தாயகம்
- பூநகரி வெற்றியின் உற்ற துணைவர்கள்
- மாமனிதர் பேராசிரியர் துரைராசா
- கடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்
- கடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மண...
- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
- லெப்.தமிழ்மாறன்
- புலிகளும் மத சுதந்திரமும்
-
▼
September
(139)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment