Tuesday, September 9, 2008

அந்தக் கணப்பொழுது

அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது.

தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர்.

போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்.

வெதுப்பியை வேகவைக்கும் அந்தப் போறணைக்குள் சென்று விழுகிறான். சிங்களப் படையினரும் வெதுப்பகத்தினுள் நுழைகின்றனர். அடையாளம் காணப்படாத அவனது உடலை கருகிய நிலையில் படையினர் எடுக்கின்றனர்.

நெஞ்சை உறைய வைக்கும் இந்த கணப்பொழுதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு போராளி தமிழ்களின் விடிவுக்காக தன்னைச் சாவடித்திருக்கிறான் பார்த்தீர்களா?

0 comments:

Blog Archive