எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை.
இங்கே எமுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள்.
தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் - சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது - ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு ~தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.
ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த சுதந்திர வேட்கையைத் தணிக்க எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.
ஒரு மாறுபாடான - முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றைச் சாதித்திருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.நெஞ்சு புல்லரிக்கும்; உயிர் வேர்க்கும்.
அவர்கள் - கண்களுக்கு முன்னால் விரிந்து கிடந்த இன்றைய ~நவீன நாகரிகத்தின் தாலாட்டில் தான் உறங்கினார்கள்;. புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் தான் உலாவந்தார்கள்; இவற்றுக்குள் வாழ்ந்தும் - எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது?
வெளிப்படையாக - அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்த போதும், உள்ளுக்குள் - இதய அறைகளின் சுவர்களுக்குள் - தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு, பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அபூர்வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்குள் புகுந்தது?
பகைவனின் இலக்கை அழிக்கும் தன் நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்த இந்த அதிசய மனவுணர்வை எப்படி அவர்கள் பெற்றார்கள்?
தாயகத்துக்காகச் செய்யப்படும் உயிர் அர்ப்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பது தான் உண்மை. ஆனாலும், இங்கென்றால் - வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை - பரிபூரணமான ஒரு ~போர்ச் சூழ்நிலை அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு..........?
அது முற்றிலுமே தலைகீழான ஒரு தளநிலைமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி - அவற்றுக்குத் தீனிபோட்டு - சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து - மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது.
அதில் படுத்துறங்கி - பகை தேடி, வேவு பார்த்து, ஒழுங்கமைத்து, குறி வைத்து வெடிபொருத்திப் புறப்பட்டு, மனிதக்குண்டாகி.......... எல்லாவற்றையும் தானே செய்வதோடு - பகையழிக்கும் போது தனையழிக்கும் போதும் கூட - தன்பெயர் மறைத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை, ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்ப்பணத்தில் அது உன்னதமானது ஈடு இணை அற்றது. இந்த வியப்புமிகு தியாக உணர்வை இவர்களுக்கு ஊட்டியது எது?
இவையெல்லாம் - அந்த ~நிழல் வீரர்களினது பன்முகப்பட்ட தோற்றப்பாட்டின் ஓரிரு பக்கங்கள் மட்டுமே. சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உண்டு; அவை எழுத முடியாத காவியங்கள்;; அவர்கள் முழுமையாக எழுதப்படும் போது - படிக்கின்றவர்கள் விறைத்துப் போவார்கள்;; ஆன்மா உறைந்து சிலையாவார்கள்.
எப்படி அவர்கள் எதிரியின் உச்சந்தலையில் கூடாரமடித்தார்கள்..........? கூடாரமடித்து - அவனது மண்டை ஓட்டைத் துளையிட்டு அவர்கள் உள்ளே நுழைந்தது எப்படி..........? நுழைந்து - அவனது மூளையின் பிரிவுகளையல்லவா அவர்கள் குறிவைத்தார்கள். அது எப்படி..........? எவ்விதமாக இவையெல்லாம் சாத்தியமானது..........? எத்தகைய மதிநுட்பத்தோடு நகர்வுகளை மேற்கொண்டு, இந்த அதியுயர் இராணுவ சாதனைகளை அவர்கள் படைத்திருப்பார்கள்..........? இந்த விவேகத்தையும் புத்திக்கூர்மையையும் இவர்களுக்கு ஊட்டி, அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது?
உண்மையிலேயே இவையெல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளே தான்; நம்புதற்கரிய அற்புதங்கள் தான்!
மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்தப் புனிதர்கள்; தான் அழியப்போகும் கடைசிப்பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள்; ~முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட பிரபாகரனின் குழந்தைகள்..........
இனிப்படியுங்கள்
வாரிசு...!
எதிரியின் மிக முக்கியமான நகரமொன்றில் மேற்கொள்ளப்போகும் ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு; அவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
அத்தாக்குதல் நடவடிக்கையின் அணித்தலைவனாகவும் அவனே நியமிக்கப்பட்டிருந்தான்.
அவன் பங்குகொள்ளப்போகும் அந்த நடவடிக்கை; தென்தமிழீழத்தின் நகரொன்றிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
எதிரியின் தளத்தை நோக்கிய பயணத்தை ஏனையவர்களுடன் இணைந்து அவன் அங்கிருந்து தான் மேற்கொள்ளவேண்டும்.
அது மிகவும் நெருக்கடியான காலகட்டம்...
விடுதலைப் போராட்டம் நெருக்கடியைச் சந்தித்து நின்ற தருணங்களில் அக்காலமும் ஒன்று...
இனவாத முறுக்கேறி மதாலித்து நின்றது சிங்கள அரசு.
தமிழரின் தாய்நிலம் மீது போரைத் தொடுத்து நிலம் விழுங்கும் போதையில் வேகம் கொண்டிருந்தது.
எதிரியின் பேராசைக்கு தக்க பதில் கொடுக்கக் காய்கள் நகர்ந்து கொண்டிருந்தன தமிழர் நிலத்தில்...
எல்லாம் முடிந்துவிட்டது என்பதுபோல... அந்த ஆண்டின் சுதந்திர தினத்தைப் பெரும் எழுச்சியாக வேறு கொண்டாட சிங்களம் தயாராகி நின்றது. அதற்காக என்றுமில்லாத வகையில்; இனவாதத்தின் உச்ச முகத்தை வெளிப்படுத்தும் வகையில்... சுதந்திர தினத்தை தனது மரபுவழி 'இனவாதத் தாய்மடி நகரில்" கொண்டாடும் கனவில் மிதந்துகொண்டிருந்தது நிறைவேற்று அதிகார அம்மணியின் அரசு.
அது வெறும் சுதந்திர தினவிழாவாகக் கொண்டாடுவது மட்டுமல்ல நோக்கம்;...
ஒரு காலத்தில் தமிழரின் சுதந்திரத்தையும் - இறமையையும், கைமாற்றிப்போன ~ஆக்கிரமிப்பு சாம்ராச்சியத்தின் வாரிசையே விருந்தினராக அழைத்து தமிழரை ஏளனம் செய்யும் குறியீட்டு நிகழ்வாகவும் கூட ஒழுங்குபடுத்தியிருந்தது பேரினவாதத் தலைமை.
அவலத்தைத் தருபவனுக்கு மட்டுமல்ல - அவமானத்தை ஏற்படுத்த முனைபவனுக்குக் கூட அதைத் திருப்பிக்கொடுக்கும் வல்லமையைத் தமிழினத்திற்கு எங்கள் தலைவன் கொடுத்தபின்னர்... இத்தகையதொரு இழிவைத் தமிழினம் பொறுத்துக்கொள்வதோ...
அணி தயார்ப்படுத்தப்பட்டு விட்டது. நான்கு கரும்புலிகள் பங்கெடுக்கப்போகும் தாக்குதல் அது. அவன்தான் அந்த அணியை வழிநடத்தும்; தலைவன்.
எல்லாம் சரி... இனி புறப்படவேண்டியது தான் என்றிருந்த ஒருநாள்;...
அந்த தகவல் இங்கிருந்து அங்கு பறந்தது...
ஆளை மாற்றி தாக்குதலைச் செய்யட்டாம்...
அவன் குழம்பிப் போனான்.
'முடியவே... முடியாது...
நான்தான் அதைச் செய்வன்...
நான்தான் அதைச் செய்ய வேண்டும்"
ஒற்றைக்காலில் தாண்டவம் ஆடினான்.
பொறுப்பாளர்களுடன் மல்லுக்கட்டத் தொடங்கினான்...
அந்தக் குடும்பத்தின் நிலை வேறுபட்டதாயிருந்தது...
ஆறு பெண் பிள்ளைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு; ஒரேயொரு ஆண்பிள்ளை அவன் மட்டும் தான்.
எல்லோருடைய அன்பையும் பெற்ற செல்லப் பிள்ளையாக அவனிருந்தான்.
அதனால் அவனின் மீது எல்லோரும் அன்பை அள்ளிச் சொரிந்தனர்.
ஆசையாசையாய் அவர்கள் பொத்தி வளர்த்த பசும் குஞ்சல்லவா அவன்.
இந்தக் குடும்பத்திற்கு மட்டுமா அவன் பசும்குஞ்சு...
அந்தக் ~கரும்புலி வீரனின் அப்பாவும் கூட இப்படித்தான்...
ஆறு பெண் சகோதரிகளுக்கு ஒரே ஆண் சகோதரன்.
ஆக, அவர்களின் பரம்பரைக்கே இவன் தான் ஒரே ஆண் வாரிசு.
இத்தகைய குடும்பக் கூட்டுக்குள்ளிருந்து எப்படித்தான் அவன் பறந்து வந்தானோ?
என் தாய்நாடே
நீ தனித்திருக்கும்போது...
நான் மட்டும் - என் உறவுகளோடு...
இணைந்திருப்பதா... என அவன் எண்ணியிருப்பான் போலும்...
ஒரு நாள் வீட்டிலிருந்து புறப்பட்டவன்; பின்னர் ஒருபோதும் குடும்பத்தோடு இணையவேயில்லை. போராட்டம் அவனைக் குடும்பத்திலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டது.
அவனின் பிரிவால் வாடிப்போனது அந்தக் குடும்பம்.
அவனின் குடும்பம் ஏறாத கோவிற் படியில்லை...
பார்க்காத சாத்திரம் இல்லை...
அவன் மீண்டும் வீடு திரும்புவான் என்பது அவர்களின் அசையாத நம்பிக்கை.
தம்பி... நீ... வீட்ட வாவனடா...
அவனைக் காணும் வேளைகளிலெல்லாம் அந்தக் குடும்பம் அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கும்;.
'உந்தக் கதை கதைச்சால்...
என்னைச் சந்திக்க மாட்டியள்..."
முகத்தை முறிப்பதுபோல் குடும்பத்தாரை அடக்கிவிட்டு அவன் புறப்பட்டுப் போய்விடுவான்.
ஆனாலும் அவர்களுக்குள் அந்த நம்பிக்கை...
கல்லும் ஒரு நாள் கரையும் தானே...
ஆனால்; இவன் கரும்புலி வீரனாயிற்றே...
இலட்சியத்திலிருந்து விலகுவானா... என்ன?
முயற்சியைக் கைவிடாத அவனின் பெற்றோர்கள்; தமது குடும்ப நிலையைத் தெளிவுபடுத்தித் தலைவருக்குக் கடிதம் எழுதினார்கள்...
அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட தாக்குதலுக்குத் தயாராகி நின்றவனை வீட்ட போகச்சொல்லி நின்றது இயக்கம்...
'நீங்கள் வீட்ட போங்கோ...
எங்களுக்கு வேறு போராளிகள் இருக்கினம்...
அவையள் இதச் செய்வினம்..."
சொன்னவரை ஒரு முறாய்ப்புப் பார்வை பார்த்தான்...
'அதுமட்டும் நடவாது..."
என்பதை வார்த்தைகளால் சொல்லாது... விழிகளால் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
சொன்னவருக்கும் அது தெரியும்.
அவனிடம் எதைப் பற்றியும் கதைக்கலாம்; ஆனால் வீட்டைபோகச் சொல்வதைத்தவிர...
ஒருநாளும் அவன் ஏற்றுக்கொள்ளப் போகாத விடயத்தைப் பற்றி அவனிடம் அவர் கதைக்கவேண்டியிருந்ததில் அவருக்;கும் சங்கடம் தான்.
அது அவனைப்பொறுத்தவரையில் அவனைப் பிறர் அவமானப்படுத்துவது போன்றது.
இன்னும் தெளிவாகச் சொன்னால் அவனுடைய உரிமையை யாரோ அவனிடமிருந்து பிடுங்கி எடுப்பது போன்றது.
இந்நிலையில் இவனில்லாமலே தாக்குதலணி மாற்றொழுங்குகளோடு அங்கிருந்து புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
தாக்குதலுக்குத் தயார்ப்படுத்தப்பட்ட அவன்... தாக்குதலில் தான் பங்கேற்பதில் எந்த மாற்றமுமில்லையென்ற முடிவில் உறுதியாக நின்றான்...
அதற்காக அவன் எதையும் செய்யத் தயாராகவும் நின்றான்.
அவனுடைய பிரச்சினைகலெல்லாம் நடக்கப் போகும் தாக்குதலில் தான் பங்கேற்க வேண்டும் அவ்வளவு தான்.
நின்றவன் சும்மா நின்றானா....
தளபதி எதுவும் சொல்லாமலே; அவர் சொன்னாரெனக் கூறி எதிரியின் தடைமுகாம்களைத் தாண்டிப் பயணிப்பதற்கு வேண்டிய அத்தனை ஆவணங்களையும் உரியவர்களிடம் வேண்டிக்கொண்டு... தாக்குதலுக்குப் புறப்பட வேண்டிய இடத்தில் யாருக்கும் தெரியாமல்... போய் நின்றுகொண்டான்.
அங்கு நின்றுகொண்டது மட்டுமல்ல... தளபதிக்குச் செய்தி அனுப்பினான்...
'நான் இஞ்ச வந்திட்டன்... மற்ற ஆட்களையும்... ஒழுங்குகளையும் கெதியில அனுப்புங்கோ..."
கட்டளையிட வேண்டிய தளபதிக்கே கட்;டளையிடுவது போல அவனின் கட்டளை வந்தது...
இனியும் அவனோடு கதைத்துப் பிரயோசனம் இல்லை என்பது உறுதியாயிற்று...
அவன் எதைச்சொன்னாலும் கேட்கப்போவதில்லையென்பதை உறுதிப்படுத்தி விட்டான்... தயக்கத்தோடு அவனுக்கான அனுமதியைத் தாக்குதல் தளபதி வழங்க அவன் ஏனைய தோழர்களோடு இங்கிருந்து புறப்பட்டுப் போய்; சில நாளில்...
'சிங்களப் பேரினவாதத்தின் மரபு வழித்தாய் மடியில்" விழுந்தது பேரடி.
அந்த அடியால் சிங்களத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்மாறிப் போனது மட்;டுமல்ல... சிங்கள தேசம் வெட்கத்தால் தலைகுனியவும் வேண்டியதாயிற்று.
வேகம்
யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எதிரி முன்னோக்கிப் பாய்தல் - இடிமுழக்கம் - என அடுத்தடுத்து பெயர் சூட்டிப் படை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சனங்களைப் பெரும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருந்த காலம்.
அவன் தன்னையொரு கரும்புலியாக இணைத்துக் கொள்ளுமாறு தலைவருக்குக் கடிதம் எழுதிவிட்டு... பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவனின் சாரதியத் திறமையில் எல்லோருக்கும் நம்பிக்கை. எந்த மோசமான தெருவிலும் அவன் இலாவகமாக வாகனத்தைச் செலுத்தும் ஆற்றல் அவனின் மீதான மதிப்பை உயர்;த்தி நின்றது.
ஒருநாள்
ஏதோவொரு அலுவலாகப் பொறுப்பாளர் கோப்பாய் பக்கமாக அவனிடம் வாகனத்தைக் கொடுத்து அனுப்பிவிட...
வீதியிலிறங்கிய வாகனம் விண்கூவத்தொடங்கியது...
நல்ல வீதி... பொறுப்பாளரின் கண்களுக்கு எட்டாத தொலைவு...
வானத்தில் பறக்கும் 'அவ்றோ"வின் வேகத்தை; தரையில் பரீட்சித்துப் பார்த்தால் என்ன என்ற நினைப்பு...
ஆசை மனதுக்குள் எட்டிப்பார்க்க... கால்கள் 'அக்சிலட்டரை" ஒட்ட மிதித்தது.
வாகனம் உருண்டு போகிறதா... பறந்து போகிறதா என்ற சந்தேகம்; தெருவில் நின்றவர்களுக்கு. உல்லாசப் பறத்தலில் மூழ்கியிருந்தவனின் கவனம்; சற்றுத்தளம்ப கோப்பாய் வீதியோரமிருந்த மதிலைக் காணக்கிடைக்கவில்லை... மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது வாகனம்.
விளையாட்டுத் தனத்தின் விபரீதம் மெல்ல உறைக்க எந்த அவகாசமும் கொடாது அவனின் முன்னே வந்து நின்றார் வீட்டுச் சொந்தக்காரர்...
'உனக்கு என்ன பிரச்சினையெண்டாலும் எனக்குக் கவலையில்லை...
வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதம் பற்றியும் எனக்குக் கவலையில்லை...
எனக்கு என்ர மதில் முன்னர் இருந்தது போலவே இப்போதும் இருக்க வேண்டும்..." ஒற்றைக் காலில் அவன் முன்னே நின்றார்.
நிலைமை சிக்கலாகிவிட்டது...
சுற்றி நாலுபக்கமும் தலையைத்திருப்பி பலமுறை பார்த்தான்.
தெரிந்தவர்கள்... பழகியவர்கள்... தகடு வைப்பவர்கள்... என்று எவரும் இல்லை.
சூழல் திருப்தியாக இருந்தது...
இனி ஐயாவைக் கவனிக்க வேண்டியதுதான். அவரைக் கனக்கக் கதைக்க விட்டால் - தகவல் அசுரவேகத்தில் பொறுப்பாளரின் செவிகளுக்கு எட்டும்.. பிறகு கதை கந்தலாகிவிடும்.
ஆகவே ஐயாவின் வாயை உடனடியாக அடைக்க வேண்டும்.
மனதுக்குள் கணக்குப் போட்டவன் சொன்னான்...
'ஐயா பிரச்சினையில்லை...
உங்கட மதிலைக் கட்டி வெள்ளையடித்தும் தரலாம்...
ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ..."
கதையாலேயே ஐயாவை மடக்கி அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறினான்.
எவருக்கும் இந்த விடயம் தெரியவர முதல் வேகமாக வாகனத்தைக் 'திருத்தகத்தில்" விட்டுத் திருத்தி... வர்ணம் பூச வேண்டியவற்றிற்கு வர்ணம் பூசி...
இரண்டு நாட்களுக்குள்ளேயே இருந்தது போலவே முகாமில் கொண்டு போய்விட்டது மட்டுமல்ல... ஐயாவின் உடைந்த மதிலையும் யாருக்கும் தெரியாமல் அங்கயிஞ்ச காசுவேண்டி கட்டி வெள்ளையடித்து முடித்திருந்தான்...
யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில்; எதிரி 'சூரியக்கதிர்" படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தான்.
எதிரி மேற்கொள்ளும் பாரிய படை நடவடிக்கை... அவன் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி மூர்க்கமாக வேறு முன்னேறிக் கொண்டிருந்தான்...
எல்லா விளைவுகளுக்கும் எதிர்விளைவுகள் உண்டு இயற்கைகூட இந்த ஒழுங்கில் இயங்கும் போது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் நியாயமான கோபங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் சந்தித்தாகத்தானே வேண்டும்...
இங்கே படைகளை அனுப்பிவிட்டு; அங்கே அவர்களின் அதிகார மையத்துள் வெற்றித் திமிரில் மூழ்கிக்கிடக்கும் அதிகாரத் தலைமையின் தலையிலேயே இடியை இறக்கத் திட்டமிடப்பட்டது.
தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எதிரியின் 'பொருளாதாரத் தலைமை மையம்" தலைநகரத்தின் மையத்துள் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருக்கும் அந்தக் 'காப்பகம்" தாக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.
சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அந்த பொருளாதார மையம் மீதான தாக்குதலுக்குத் திட்டம் தீட்டி... வெடிமருந்து வாகனமும்; எதிரியின் தளத்துக்குள் நகர்த்தப்பட்டுவிட்டது.
அந்தத் தாக்குதலில் பங்கு கொள்ளப்போகின்றவர்களுக் கான பயிற்சிகள் நடந்து கொண்டிருந் தாலும்...
அந்தத் தாக்குதலின்போது பயன்படுத்தும் பிரதான குண்டூர்தியைச் செலுத்துவதற்குத் திறமையுள்ள சாரதி ஓராள் தேவைப்பட பொறுப்பாளர்களின் நினைவில் வந்து நின்றது எங்கள் 'கோப்பாய் சாகசக்காரன்" தான்.
ஏற்கனவே கரும்புலிக்கு விண்ணப்பித்துவிட்டு நின்றவனை அழைத்து இதைச் செய்கிறாயா எனக்கேட்க... உற்சாகத்தோடு தாக்குதல் தளம் நோக்கி பயணத்தைத் தொடங்கினான்...
எதிரியின் தலைநகரம்....
யாழ்ப்பாணம் மீது படையெடுப்பு மேற்கொண்ட சூழல்...
எவ்வேளையிலும் அங்கே குண்டுகள் வெடிக்கலாம் என்ற எதிரிப் புலனாய்வாளர்களின் எச்சரிக்கை...
எந்நேரமும் எதிரியின் தலைநகரம் அதிஉச்ச விழிப்பு நிலையிலிருந்தது.
ஒருநாள்...
அது ஒரு பகற்பொழுது...
வானத்திலிருந்து குதித்த வல்லவர்கள் போல
திடீரென எங்கிருந்து வந்தார்களோ தெரியாது...
சில வீரர்கள் வீதியின் குறுக்கேயிருந்த தடைகளை உடைத்து வழியெடுத்துக் கொடுக்க...
உறுமியப்படி அந்தக் குண்டூர்தி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது...
ஆம்... எங்கள் தோழன் எதிரி நாட்டின் பொருளாதார மையத்துள் அந்த பூகம்பத்தை வெடிக்கச் செய்தான்...
எதிர்பாராத அந்த அடியால் ஆட்டம் கண்டு; சிங்களத்தின் பொருளாதார மதில்கள் நொருங்கி விழ... தெருவெங்கும் நாறிக் கிடந்தது. எதிரியின் பணமும் - மானமும்.
நான் மட்டும்
தமிழர் மனங்களில் என்றும் ஆறாக்காயமான ~வடுவை ஏற்படுத்திப் பெரும் அறிவுச் சொத்தழிவுக்குக் காரணமான ஒரு ~சூத்திரதாரி மீதான தாக்குதல்.
தமிழர்கள் பெருமையோடும் - மகிழ்வோடும் ஓடியோடி ஒன்று சேர்ந்து பாதுகாத்த அந்த அறிவுத்தாய் மடியில் தீமூட்டிய கொடியவன் மீதுதான் இலக்கு வைக்கப்பட்டது. அவன் என்றும் அழிக்கப்பட வேண்டியவனாகவே இருந்தான்.
ஆனால், அதிகாரத்தின் மையப்பாதுகாப்புக்குள் அவன் நின்றான்.
தமிழினத்தின் கோபத்திற்குள்ளாகிய அந்தக் குற்றவாளி; சனநாயகத் தலைவனாக வேடம் தரித்து நின்றான்.
உள்ளே குமுறும் எரிமலையைப்போன்று கண்களில் தீச்சொரிய் இலக்கை நோக்கி அந்தக் கரும்புலி நகர்த்தப்பட்டாள்.
காலம் கனிந்து - தாக்குதல் இலக்குப் பொருந்தி வந்து - கச்சிதமாக அந்த எதிரியை அழிக்கும் வரை எதிரியின் நகரத்திலேயே அவள் உறைந்திருக்க வேண்டும்.
அதற்காக அவளுக்கு பல்வேறு ஒழுங்குகளையும் செய்துகொடுக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக அவள் பாதுகாப்பாகக் குடியிருக்க ஒரு இடம் வேண்டும்.
எதிரியின் தளத்தில் ஒரு பாதுகாப்பான இடம் தேடுவதென்றால் எவ்வளவு சிரமமிருக்கும் என்பதை அவள் நன்கு அறிவாள்.
எத்தனையாயிரம் கண்களை சமாளிக்க வேண்டும். அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அவளுக்கு வசதியாக இருக்கும் என ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்ட இடம்... அவ்வளவாக வாய்க்கவில்லை...
முரண்பட்ட கணவன் - மனைவியைக் கொண்ட ஒரு குடும்பத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட அவள் பல்வேறுவழிகளிலும் சிரமப்பட வேண்டியதாயிற்று...
மனம் வெறுத்துப் போகுமளவுக்கு அவள் அங்கே தொந்தரவு செய்யப்பட்டாள்.
ஒற்றுமையற்ற அந்தக் குடும்பத்தின் எல்லா ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே நின்று; அவள் இயங்க வேண்டியிருந்தது. அவர்கள் அனுமதிக்கும் பொழுதுகளில் வெளியே சென்று - மேற்கொள்ளவேண்டிய தாக்குதல் இலக்கிற்கான வேவுபார்ப்பதிலிருந்து - தகவல்களைப் பரிமாறுவது வரையான வேலைகளிலும் அவள் பங்கெடுக்க வேண்டியிருந்தது.
வெறுத்தொதுக்கும் ஒரு இடத்தில் நின்று பிடிப்பதென்பது எத்தனை சிரமமானது.
ஆனால், ஒரு நாள் கூட அவள் வாய்திறந்து தான் எதிர்நோக்கும் எந்த நெருக்கடி களையும் எவருக்கும் தெரியப் படுத்தியதேயில்லை.
எல்லாவற்றையும் ~நானே தாங்கிக்கொள்கின்றேன். என்பது போல எல்லாவற்றையும் விடுதலையின் பெயரால் தன் தாய் நாட்டுக்காக மௌனமாக அவள் சுமந்தாள்.
ஒருநாள் அங்கே அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இங்கே தெரியவந்து... அவளுக்கு வேறொரு இடம் ஒழுங்குபடுத்திக் கொடுக்க அங்கேயும் அவளைத் துரத்தியது அந்தத் துயரம்...
அங்கு அவள் உதாசீனப் படுத்தப்பட்டாள் - தாங்கமுடியாத வீட்டு வேலைகள் அவள் மீது சுமத்தப்பட்டது.
அவளையோ... அவளது இலட்சியத்தையோ... புரிந்து கொள்ளாத அவர்கள்; அதிலிருந்து அந்நியப்பட்டுச் செயற்பட்டார்கள்...
அவள் அங்கு ஒரு வேலைக்காரியாக நடத்தப்பட்டாள்.
தொட்டதுக்கும் தீர்வு தேட... அது எங்களது தளமல்ல - அங்கு பொறுப்பானவர்களும் இல்லை - எல்லாமே இரகசியமானது - கடினப்பட்டுத்தான் எந்த ஒழுங்கு களையும் செய்ய வேண்டிய களச்சூழல்.
இது அவளுக்கும் தெரியும்...
அதனால் தான் அவள் எதையுமே இங்கு தெரியப்படுத்த விரும்பவில்லை... இங்கே அவளை வழிநடத்திய பொறுப்பாளர்கள்; மீண்டும் அவள் அங்கு நெருக்கடிகளை எதிர்நோக்குகிறாள் என்பதை அறிந்து - அவளுக்காகப் பிறிதொரு ஒழுங்குபடுத்தலைச் செய்து - கடிதம் மூலம்... அவளை இடம்மாறி நிற்கச்சொல்லி எழுதியனுப்பிய போது...
அவள் அந்தக் கடிதத்தை உடைத்துப் பார்க்கவேயில்லை...
கேட்டதற்கு எனக்கு ஒழுங்குபடுத்தித்தாற இடம் இன்னொரு பிள்ளைக்குப் பயன்படும் அதனால்தான் கடிதத்தை உடைத்துப்பார்க்கவில்லை என்றாளாம்...
இத்தனைக்குமிடையில் அவள் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதற்காக ஒவ்வொரு நாளும் அங்கிருந்து புறப்பட்டுப் போவாள்.
நம்பக்கடினமான பயணங்கள் அவை...
எப்படித்தான் அவளால் அப்படி புறப்பட்டுப்போக முடிகிறதோ...
அதற்கு இரும்பையொத்த மனம் வேண்டும். தாயகத்தின் மீது... தலைவரின் மீது... தான் நேசிக்கும் மக்களின் மீது... அளவுகடந்த அன்பைச் செலுத்தும் இவள் போன்ற கரும்புலிகளால் மட்டும் தான் அது முடியும்.
எத்தனை நாள் அவள் இப்படி புறப்பட்டுப் போயிருப்பாள்...
நம்பிக்கையோடு புறப்பட்டுப் போவாள்... ஆனால் இன்னதென்றில்லாமல் ஏதோவொரு காரணத்தால்... அவள் நோக்கம் கைகூடாமல் சறுகிப்போகும்... மற்றவர்களென்றால் சோர்ந்து போவார்கள்... ஆனால் அவள் சோர்ந்துபோய் ஒரு நாளும் நின்றதில்லை...
அழகாக உடையுடுத்தி... உள்ளே வெடிகுண்டு அங்கியணிந்து... வெளியில் எதையுமே வெளிக்காட்டாது சாவை தன் இதயத்திற்கு அருகில் சுமந்தபடி அவள் புறப்பட்டுப் போவாள்...
ஆனால் மீண்டும்... இலக்கு சறுகி நோக்கம் நிறைவேறாமல் அவள் திரும்பி வருவாள்...
மீண்டும் அவளுக்கு வழமையான நெருக்கடி... மனச்சோர்வு... ஆனால் அவள் துவண்டு போகமாட்டாள்... மீண்டும் உற்சாகத்தோடும் - நம்பிக்கையோடும் வெடிகுண்டு அங்கியை அணிந்து அங்கிருந்து புறப்பட்டுப் போவாள்...
மீண்டும் ஏதோவொரு சறுகல் - அல்லது சிக்கல்.
இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல... பல தடவைக்கு மேல்; அவள் இப்படிப் புறப்பட்டுப் போவதும் வருவதுமாக இருந்திருப்பாள்...
சலியாது - மனம்கோணாது இப்படிப் புறப்பட்டுப் போன ஒருநாள்...
எல்லாம் சரி வந்து இலக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நின்றது.
அன்று தான் அவள் அதிக மகிழ்ச்சியோடு காணப்பட்டாள்.
அதுதான் அவளின் இறுதிப் பயணம்.
இனி அவள் இப்படிப் புறப்பட்டுப் போக வேண்டியதேவையேயில்லை.
இனி அவள் எப்போதும் திரும்பி வரப்போவதுமில்லை.
அங்கே களத்தில் அவளை வழிநடாத்திக் கொண்டிருந்தவர்; அவளை நன்கு அறிந்திருந்தார்.
அவள் இத்தனை நாளும் சந்தித்த துயரையெல்லாம் அவர் அறிவார்.
அவரும் கூடவே அந்தத் தாக்குதல் வலயத்துக்குள் நின்று கொண்டிருந்தவருக்குள் சிறு தயக்கம் - சிறுகுழப்பம். கடைசி நிமிடங்கள் அந்தத் தோழியைப் பிரிந்துவரவும் அந்த இடத்தைவிட்டு விலகிவிடவும் மனமில்லாமலிருந்தது.....
எல்லாவற்றையும் சரிபார்த்து தாக்குதல் நூறு வீதமும் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் போலிருந்தது அவருக்கு...
அவள் கண்களால் சமிக்கை செய்தாள்.
நீங்கள்..... வெளியால போங்கோ.....
நான் அடிக்கப்போறன்.
ஆனால் அவர் போகவில்லை..... தளப்பொறுப்பாளர் தொடர்ந்தும் அங்கே நின்று கொண்டிருந்தார்.....
முடிவில்; மெல்ல அவரருகில் வந்து அவள் காதோரம் சொன்னாள்.....
நீங்கள் போராட்டத்திற்கு இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கு.....
இதுல நான் மட்டும் போதும்.....
நீங்கள் தேவையில்லை.....
இன்னுமொரு தாக்குதலுக்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள்..... என்றவள் அவரை வெளியேற்றிவிட்டு விடைபெற்றுப் போய் ஒரு கொடிய காலத்தில் தமிழர்களை நோக்கி.....
உங்களை யார் தாக்கியது - சிங்களவர்.....
உங்களை யார் காப்பாற்றியது - சிங்களவர்.....
உங்களைத் தாக்கவும் அணைக்கவும் எங்களால் தான் முடியும்.....
எனத் திமிரோடு பேசித் தமிழினத்திற்குப் பெரும் தீங்கிழைத்த அந்த எதிரியை அழித்துத் தாயகத்துக்கு இறுதி விடைகொடுத்தாள்.
போராட்டம்..!
நெருக்கடி மிகுந்த காலமொன்றில்; எதிரியின் தலைமை ~நிர்வாக மையம் நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்.
முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற் இந்தப் பயண அனுபவம்; அவளுக்கு கைகொடுக்கக்கூடும்.
எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும்.
சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும் சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம்.
ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்கூடும்.
ஒருநாள் அவள் எதிரியை ஏமாற்றும் பல புனைகதைகளோடு இங்கிருந்து தன் பயணத்தைத் தொடக்கினாள்.
தந்தை - மகள் என்ற போலி அறிமுகத்தோடு தடை முகாம் தாண்டி உள்ளே நுளைந்து கொண்டாள்.
அவளின் நடவடிக்கைக் காலம் முழுவதும் அவரே இவளின் தந்தை.
அந்த இடை நகரத்தில் பயணத்தடை - கெடுபிடி-காலதாமதம் என இழுத்தடிக்கும் எதிரியின் வழமையான நடவடிக்கைகள் காரணமாக அவளின் அதிக நாட்கள் வீணே கழிந்தன.
பலநாள் அலைச்சல் - எத்தனையோ நாள் மனவுளைச்சலென சிரமப்பட்டவள்; ஒரு நாள் அவள் சென்றடைய வேண்டிய எதிரியின் நிர்வாக மையத்தைச் சென்றடைந்தாள்.
அவள் அங்கு சென்றதும் - இங்கு தெரிவித்த முதல் விடயம்;...
நான் மீளவும் அங்கு வராமல் - இங்கேயே நின்று செயற்படப் போகிறேன்...
மீண்டும் ஒரு பயணத்தால்; தேவையற்ற காலதாமதமும் - நெருக்கடிகளும் ஏற்படலாம் சில வேளைகளில் தேவையற்ற கைதுக்கும் உள்ளாகலாம்.
அவள் தெரிவித்த நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு... அங்கு அவள் தொடர்ந்து நிற்பதற்;கான அனுமதி வழங்கப்பட்டது.
அவள் அங்கு நிலைபெற்று இயங்கத் தொடங்கினாள்...
ஐயாவுக்குத் தெரியும்; அவள் ஏதோவொரு இரகசிய நடவடிக்கைக்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்பது...
அது என்ன...? அதை அவள் எப்படி செய்யப்போகிறாள் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.
ஐயா வயதானவர்... அவரின் மகள் ஒரு போராளி; அவரின் குடும்பம் இங்கேதான் இருந்தது.
அவள் அங்கு நிலை பெற்ற சிறிது காலத்தில்; தன்னுடைய பணியில் ஓய்வின்றி ஈடுபடத் தொடங்கினாள்.
எதிரியின் முற்றத்தில் நின்று கொண்டு அவனின் பலத்தையும் -பலவீனத் தையும் அவள் ஆராயத் தொடங்கினாள்.
அதற்காக அவள் தன்னை வருத்தி செயற்பட்ட உழைப்பிருக்கிறதே அது கடினமானது - அந்த நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும்...
ஒவ்வொரு நாளும் - அவள் காலையில் புறப்பட்டுப் போவாள்.
எங்கு போகிறாள் - யாரைச் சந்திக்கிறாள் என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் மதியமோ - மாலையோ வரும் போது அதிகளவில் களைத்துப் போயிருப்பாள்... முகம் வாடியிருக்கும்...
வந்தவள் சும்மாயிருக்கமாட்டாள்... குடியிருக்கும் வீட்டின் அத்தனை வேலைகளையும் ஓடியோடிச் செய்வாள்... ஒரு பொறுப்புள்ள மகளைப்போல...
ஐயாவோடு அன்பாக உரையாடுவதிலிருந்து... உணவு பரிமாறுவது வரை... சிரத்தையோடு காரியம் செய்வாள்.
ஐயா மகளின் அன்பில் நனைந்து... மெய்யுருகி - மனம் கசிந்து போவார்.
நாட்கள் ஓடின - அவளின் அலைச்சல் ஓய்வின்றித் தொடர்ந்தது...
ஐயா அவளின் தந்தையைப் போல நடிக்க அங்கு சென்றவர் - ஆனால் அவளின் செயல்கள் அவரை மாற்றியது.
ஐயா அவளுக்கு உண்மையான தந்தையாகவே... வாழத்தொடங்கினார்.
ஐயாவுக்குத் தன்னுடைய மகளுக்கும் - இவளுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காண முடியாதிருந்தது.
அத்தோடு அவர் அவருடைய மகளைப்பிரிந்து அதிக தூரத்திற்கு வேறு வந்திருந்தார்.
அவர் தன்னுடைய மகளாக மனதுக்குள் வரித்துக்கொண்ட அவள்;; ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவதை எண்ணிச் சஞ்சலப்படத் தொடங்கினார்.
ஐயாவுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வு மாற்றம்; அவளின் மீது ஆழமான பாசப்பிணைப்பாக் வேரூண்டத் தொடங்கியது.
ஐயா பாசத்திற்கு அதிக இடம் கொடுத்து; கடமையில் குழம்பத் தொடங்கினார்.
அந்த நேசம் அழகிய மலரின் மேல் படிந்த பனித்துளி போன்ற குளிர்மையான அன்பு.
அவளின் மனமோ இலட்சியத்தில் இறுகிக்கிடக்க ஐயாவின் மனமோ பாசத்தால் உடைந்து கொண்டிருந்தது...
இலக்கு நோக்கிய பயணத்தில்; ஐயா மேலும் திசைமாறத்தொடங்கினார்.
விளைவு ஐயா அவளைக் கடமையைச் செய்ய விடாது நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கினார்.
அங்கே அவள் குடியிருந்த வீட்டிலிருந்து முன்னரைப்போல புறப்படுவதற்கு அவர் அனுமதிப் பதில்லை.
அவளுக்கும் - தளத்திற்குமான தொடர்பாடல்களை துண்டிக்கத் தொடங்கினார்.
அவள் கடிதங்களை எழுதி இங்கே அனுப்பச் சொல்லி ஐயாவிடம் கொடுத்தால்; அவர் அவற்றைக் குப்பைக்கூடைக்குள்ளேயோ அல்லது எரியும் அடுப்புக்குள்ளேயோ தள்ளினார்.
'போவதற்கு நான் எல்லா ஒழுங்குகளையும் செய்து தாறன் நீ வெளிநாட்டுக்குப்போ..." என விடாது நச்சரிக்கத் தொடங்கினார்.
அவளோ ஐயாவின் மனம்கோணாத... நல்ல மகளாக நடந்து கொண்டு... தன்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில்; இயங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.
ஆனால் ஐயாவின் செயல்களால் - அவளுக்கும் தளத்திற்குமான தொடர்புகள் அரிதாகிக் கொண்டே வந்தது.
அவள் உள்ளுக்குள்ளேயே ஒரு போராட்டத்தை நடாத்த வேண்டியவளானாள்.
அங்கே பாதுகாப்பாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அதேவேளை - தளத்தினுடனான தொடர்புகளைச் சீர்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது...
விடுபடமுடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கும் ஐயாவின் பாசப் போராட்டத்திலிருந்து விடுபடல் என்பது அவளுக்கு சிரமமாகவிருந்தது அவள் மனப்போராட்டத்துள் நெருக்குப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஐயாவைப் பலமுறை ஏமாற்றி... தந்திரமாக அவள் தளத்துடன் தொடர்ந்து தொடர்புளைப் பேண விளைந்தாலும்; சீரின்றிய தொடர்புகள் தான் தொடர்ந்தன.
அங்கே ஐயா ஏற்படுத்திய சிக்கல்களால் அவள் திணறவேண்டியிருந்தது.
அது தேர்தல் காலம்...
அதியுயர் பாதுகாப்பைக் கொண்ட இலக்கொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ள இங்கு திட்டமிடப்பட்டது.
அந்த இலக்குத் தமிழரின் மீதான பாரிய இடப்பெயர்வுக்கும்... பல படுகொலைகளுக்கும் காரணமாக விருந்த கொடிய இலக்கு.
இலட்சோப இலட்ச மக்களைச் சமாதானத்தின் பெயரால் ஏமாற்றுவதற்குக் காரணமாக இருந்த ஒரு இலக்கு.
சென்பீற்றர் தேவாலயப்படு கொலைக்கும் - நாகர்கோவில் மாணவர் படுகொலைக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிறைவேற்று அதிகார மையம்.
தாக்குதல் நடவடிக்கைகள் - ஒழுங்குபடுத்தல் தீவிரம் பெற்றிருந்தது. தாக்குதலை செய்யப்போகும் கரும்புலியைத் தேர்வு செய்வது மட்டும் தான் நடவடிக்கையாளர்களின் எஞ்சிய பணியாகவிருந்தது.
இங்கு பொறுப்பாளர்கள் பொருத்தமான ஆளைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அங்கு தாக்குதல் தளத்தில் இந்த நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்தக்கூடிய நிலையில் நிற்கும் ஒரே ஆள் அவள் தான்.
ஆனால், அவளை அந்தத் தாக்குதலுக்குத் தெரிவு செய்வோம் என்றால் பல்வேறு காரணங்களால் அவளது தேர்வு தட்டுப்பட்டுக் கொண்டிருந்தது.
காரணம், அவள் அங்கு ஒரு அனுபவப் பயணமாக மட்டுமே புறப்பட்டுப் போயிருந்ததால்; அவள் போதிய பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. அத்தோடு வெடிகுண்டு அங்கியின் அறிவு கூட சிறியளவில் தான் அவளிடமிருந்தது.
அப்படியானால், அவளை இங்கே தளத்துக்கு எடுத்து அவளுக்குரிய பயிற்சியை அளித்து அங்கு மீண்டும் அனுப்ப வேண்டும்.
ஆனால், அன்றைய காலச் சூழலில் அது முடியாத காரியம்.
இல்லாவிடின் பகை தளத்திற் குள்ளேயே பிறிதொரு இடத்திற்கு அவளைப் பின்னகர்த்தி; அவளுக்கான பயிற்சியை வழங்கி அங்கு அனுப்ப வேண்டும்.
இத்தனை நெருக்கடிக்குள்ளும் பொறுப்பாளர்களின் கையிலுள்ள ஒரே தெரிவு அவள் மட்டும் தான்.
குழம்பித் தெளிந்து அவளிடமே முடிவை விடுவோமென்றால்;, அதற்கும் முடியாமலிருக்கிறது. காரணம், ஐயா தளத்துடனான தொடர்புகளை அவள் பேண முடியாதவாறு தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவழியாக சீரற்ற தொடர்பாடல் மூலமாக அளித்து விடயத்தை அவள் விளங்கிக் கொள்ளக்கூடியதாக அரைகுறையாகத் தெரியப்படுத்தியது தான் தாமதம் அவள் அழுங்குப்பிடியாக பிடித்துக் கொண்டாள்.
அந்தத் தாக்குதலை நான்தான் செய்ய வேண்டுமென... உறுதியாக நின்றுகொண்டாள்...
இந்தளவுக்கும் அவளுக்கு இலக்கு இதுதானென்று கூட சொல்லப்படவில்லை.
சிலவேளைகளில் அதுவொரு சாதாரண இலக்காகக்கூட இருக்கலாமென அவள் நினைக்கலாம்.
இந்தச் சிக்குப்பாடுகளுக்குள் திணறிக்கொண்டிருக்க... அவள் தொடர்ந்தும் தளத்துடன் தொடர்பைப் பேணி வருகிறாள் என்பதை ஐயா தெரிந்துகொண்டு மேலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்கினார்.
சாமான்யப் பெண்களைப் போலல்லாது, அவளொரு இலட்சியப் பெண்ணாகப் போராட வேண்டியிருந்தது.
எல்லா நெருக்கடிகளையும் உடைத்து வெளியேவர அசாத்திய மனத்துணிச்சலும் - தைரியமும் அவளுக்கு வேண்டியிருந்தது...
அவள் தனக்குரிய பெயரைத் தானே சூட்டியிருந்தாள்.
அவள் இங்கிருந்த நாட்களில் - ஒருநாள் - ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவள் அந்தப் படத்தில் வந்த ஒரு ஆளுமை மிக்கப் பெண் கதாபாத்திரம் ஒன்றின் பெயரைத்தான் தனக்குச் சூட்டியிருந்தாள்.
இப்போது அத்தகைய ஆளுமையைத்தான் அவள் அங்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
தந்திரமாக ஐயாவை ஏமாற்றி... அங்கிருந்து வெளியேறிய அவள்... நடவடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாள்.
'நான் தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறன்...
எனக்குரிய வெடிபொருட்களை அனுப்பிவிடுங்கள்...
அத்தோடு இங்கிருந்து தளத்திற்கோ - அல்லது வெறொரு இடத்திற்கோ வரமுடியாத சூழ்நிலை இருப்பதால்... தயவுசெய்து எனக்கு அழிக்கவேண்டிய அந்த இலக்கிற்;கான வாய்ப்பை தராமல் விட்டுவிடாதீர்கள்... என உருக்கமாக வேறு கேட்டுக்கொண்டிருந்தாள்.
அங்கு நடைபெறப்போகும் அந்தத் தாக்குதலைத்தான் செய்ய வேண்டுமென்பதில் அதிக ஆர்வமும்... உறுதியும் கொண்டவளாகக் காணப்பட்டாள்.
ஆனால், நடவடிக்கையாளர் களுக்கோ அவளின் விடயத்தில் எல்லாமே குழப்பமாக இருந்தது.
அவளை ஈடுபடுத்துவதில் தயக்கம் இருந்தது.
முடிவில் அவளே வெற்றி பெற்றாள்...
தாக்குதல் இலக்கை நோக்கிய அவளது இறுதிப் பயணத்திற்கு முன்பு ஒருநாள்; தளத்திலிருந்து அவளுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
நீங்கள் ஒருமுறை கூட அம்மானைச் சந்திக்கவில்லை. ஆகவே ஒருமுறை இங்கு வந்து சந்தித்துவிட்டு விரைவாகச் செல்லுங்கள்... என்று.
அதற்கு அவள் அங்கிருந்து பதில் அனுப்பியிருந்தாள்.
'நான் கதைத்துக்கொண்டிருக்கிறதெல்லாம் பொறுப்பாளர்களுடன் எண்டுதான் நினைத்துக் கொண்டிருக்கிறன்..."
தயவுசெய்து... எனக்கான சந்தர்ப்பத்தைத் தந்துவிடுங்கள்...
எல்லாவற்றையும் அம்மானிடம் சொல்லிவிடுங்கள்... என அங்கிருந்து பதில் அனுப்பியிருந்தாள்.
அந்தத் தாக்குதலுக்குரியவள் அவள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட முன்னரையும் விட அதிக உற்சாகமாக இயங்கத் தொடங்கினாள்...
அவளுக்கான வெடிமருந்து அனுப்பப்பட்டு இரகசிய இடமொன்றில் வைக்கப்பட்டது.
அவளுக்கு உதவியாக இங்கிருந்து ஒரு உதவியாளர் அனுப்பப்பட்டார். அவர் அங்கு அவள் மேற்கொள்ளப்போகும் தாக்குதலுக்கேற்ப வெடிபொருள் ஒழுங்குகளையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவளுக்கு வழங்க வேண்டும்.
ஆனால், அவளோ இங்கிருந்து சென்றவர் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் தானே செய்து அவருக்கு எந்தச் சிரமத்தையும் விட்;டுவைக்கவில்லை.
சென்றவர்க்கு வியப்பாக இருந்தது... பெருமையாகவும் இருந்தது...
ஐயாவின் பிடியிலிருந்து தந்திரமாக வெளியேறியவள் எவருடைய உதவியுமின்றித் தாக்குதலுக்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தி அந்தப் பல்லாயிரக்கணக்கான சனச் சமுத்திரத்துள்ளிருந்து விலகி... அந்த உயர் இலக்கை நோக்கி அவள் நகர்ந்து கொண்டிருந்தாள்...
கம்பி வேலிபோல... அடுக்கடுக்காய் எதிரி ஏற்படுத்தியிருந்த மனித வேலிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தவளின்... முன்னே அவள் தாக்க வேண்டிய அந்த இலக்கு அவளின் தாக்குதல் வலயத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தது...
இனியும் தாமதிக்க முடியாது. தாக்குதல் வலயத்துள் இலக்கு முழுமையாக அகப்பட்டிராத போதும் அவள் தாக்க வேண்டியதாயிற்று...
அந்தக் கடைசி நிமிடம்... அவள் தன்னை வெடிக்க. எதிரி நாட்டு நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பக்கம் இருண்டு போனது...
துரோகசக்காரம்
அவனை எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியாது.
அவன் தனக்குள் வனைந்து வைத்திருக்கும் உலகம் அப்படியானது.
அவன் எப்படித்தான் அதற்குள் வாழத் தன்னைப் பழக்கிக் கொண்டானோ தெரியாது.
தனது பழக்கங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப அவன் அப்படியானதொரு உலகை உருவாக்கியிருந்தான்.
அவன் எப்போதும் தனிமையை விரும்பினான். அதற்குள் வாழும் நிறைவையும் அவன் தேடியிருந்தான்.
கொடுக்கப்படும் கடமையை நூறு வீதமும் நேர்த்தியாகச் செய்ய வேண்டுமென்பதில்; அவன் நூறு வீதமும்
முயல்வான்.
இங்கிருந்த நாட்களில் - தோழர்களின் அருகிருந்த பொழுதுகளில் - அவன் எல்லோரையும் தன்பால் ஈர்த்திருந்தான்.
அதிகம் பேசாது - கூடிப்பழகாது - தனித்துத் தன்னுலகத்துள் வாழும் ஒரு மனிதன் எப்படி எல்லோரையும் தன்வசப்படுத்த முடியுமென யாராவது கேட்கக்கூடும்.
ஆனால், அவன் வாழ்ந்து காட்டினான். தன்வசப்படுத்திக்காட்டினான்.
பேச்சால் - உறவால் ஒரு மனிதன் மற்றவர்களை அதிகம் ஈர்ப்பதிலும் பார்க்க - செயலால் எத்தனை வலிமையாக எல்லோரையும் ஈர்க்க முடியும் என்பதைச் செய்து காட்டியதற்கு அவன்...
நல்ல எடுத்துக்காட்டு...
நல்ல சாட்சி...
கரும்புலிக்கு விண்ணப்பித்திருந்தவனின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு; அவனொரு மறைமுகக் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தான்.
ஏற்கெனவே எவருக்கும் எளிதில் பிடிபடாத அவன்... இனி எவருக்கும் எப்போதுமே பிடிபடப்போவதில்லை...
அவன் எண்ணங்களும் எவருக்கும் தெரியவரப்போவதுமில்லை.
அவனைப் புரிந்து கொள்வதே இயலாத காரியம் - அதுவும் இப்போது ஒரு மறைமுகக் கரும்புலியாகி... தேசத்தின் அதிஉயர் இரகசியத்தைப் பேணப்போகும் நிலையில்.
சாத்தியமேயில்லை.....
மற்றவர்களுக்குத் தெரியாத அவனின் செயல்களைப் போலவே... - அவனின் சாவும் கூட ஒருநாள்.....
யாருக்கும் தெரியாமல் - அவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக... இருக்கப்போகிறது.
ஆனால், அவன் சாவு செய்யும் சாதனை..... அது என்றும்; சரித்திரத்தில் நிலைத்திருக்கப்போகிறது.....
சனநெரிசல் மிக்க பகைவனின் ~தலைமை நகரத்துள் அவன் வாழத் தொடங்கியிருந்தான்.
மன எண்ணங்களை பிறழச்செய்யும் அந்த நகரத்தின் ஆடம்பரங்களுக்குள் அள்ளுண்டு போகாமல் - நிதானமாக நடந்தான்.....
தாக்க வரும்; கொடிய மிருகத்தை வேட்டையாட முயலும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரன் போல... தன்னுடைய 'இலக்கை மட்டும்;" அவன் தேடிக் கொண்டிருந்தான்.
அவனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு; மிகமுக்கியமானது.
அது தமிழனாய்ப் பிறந்து - தமிழனுக்கே அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த தமிழினத்தின் 'கோடரிக்காம்பு".
தான் பெற்ற அத்தனை புலமைகளையும்; பகைவனிற்குப் பலம் சேர்க்கும் வகையில்;; கேவலம் பணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் விற்றுக்கொண்டிருந்த ஒரு 'புத்திஜீவி"
எதிரி தமிழரின் உரிமைகளைப் பறித்து - அவர்களை அடிமைகளாக மாற்ற முயலும் வேளைகளிலெல்லாம்...
உலகை ஏமாற்றும் அரைகுறைத் 'தீர்வெழுதி"..... தமிழினத்திற்கு நிரந்தர அடிமைச் சாசனம் எழுதும் தந்திரம் உரைத்து..... சட்ட நுணுக்கம் காட்டி... இனத்தைப் படுகுழிக்குள் தள்ளிக்கொண்டிருந்த துரோகியைத் தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.....
ஒருநாள் - இவன்
பலநாள் தேடியலைந்த அந்த இலக்கு; இவன் தேடிப்போ
காமலே இவனின் முன்னே வந்துகொண்டிருந்தது.
பகைவனின் உச்சப் பாதுகாப்பு ஏற்பாட்டோடு
விரைந்து வந்து கொண்டிருந்தான் அந்தத் ~துரோகி.
நின்று நிதானித்து - முடிவெடுத்து தாக்குதல் மேற்கொள்ள அவகாசம் கிடையாது.
உடனடியாகவே 'அழிக்க" வேண்டிய இலக்கு. முன்னே நகர்ந்து போனவனுக்குள்.....
அந்த சந்தேகப் பொறி தட்டியது.
துரோகி சாதாரண மானவனல்லன்.....
எதிரிகள் எப்போதும் பாதுகாக்க விரும்பும் 'சாணக்கிய மூளையாளன்."
ஆகவே, பாதுகாப்பு ஏற்பாடு நிச்சயம் பலமானதாக இருக்கும்.
அந்தப் பலமான பாதுகாப்பு ஏற்பாட்டை உடைக்கக்கூடியதாகத் தாக்குதலைத் தொடுக்க வேண்டும்...
ஆகவே, அதற்கேற்ப தாக்குதலை நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
அவன் பவனிவரும் அந்த ஊர்தி..... ஒருவேளை குண்டுதுளைக்காத ஊர்தியாக இருந்தால்..... அவன் செய்யப்போகும் அந்த தாக்குதல் சறுக்கி... துரோகி தப்பிவிடவும் கூடும்.
இப்படி நிகழுமானால் இத்தனை நாள் முயற்சியும் பாழாகிப் போய்விடும்...
அந்த சிறு பொழுதில் அவன் முடிவெடுத்து தாக்குதலை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அந்தத் துரோகியை அழிக்கும் தாக்குதல் உத்தியைத் தானே நினைத்து... அந்த நீளமான தெருவில் விரைந்து வந்துகொண்டிருந்த அந்த இலக்கு அருகில் நெருங்கி வந்தவுடன்..... ஆவேசத்தோடு பாய்ந்து தாக்கினான்..... அந்தத் துரோகியின் ஊர்தியை எங்கள் வீரன்....
குறிதவறாத அந்த அடியில் அழிந்து போனான் அந்தத் துரோகி.....
மண்பற்று
இரட்டைக் குழந்தைகளாக அவர்கள் பிறந்தபோது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது அந்தக்குடும்பம்.
ஆசையாசையாய் அள்ளியெடுத்து - அவர்களின் அன்பையெல்லாம் கொட்டிவளர்த்து மகிழ்ந்து நின்றது அந்தக்குடும்பம்.
ஆனால், இன்று அவர்கள்.....?
அன்று அந்தக் கடற்கரையோரக் கிராமத்தின் ~கதாநாயகிகள் அவர்கள் தான்.
அன்று மட்டுமென்ன இன்றும் அவர்கள்தான் அவ்வூரின் ~கதாநாயகிகள்.
ஆனால், பலருக்குத் தெரியாது.
எல்லாமிருந்தும் இந்த சுதந்திரம் மட்டும் இல்லாது போனதால்.....
எல்லாம் இருப்பதாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது.....
ஆட்களும் வளர்ந்து, அறிவும் வளர இப்படித்தான் அவர்கள் சிந்திக்கத்தொடங்கினார்கள் அந்த இரட்டைச் சகோதரிகள்.
இங்கொரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்க தாங்கள் வீட்டில் குந்தியிருப்பதில் பயனில்லையென எண்ணியிருப்பார்கள் போலும்.....
குடும்பத்திலிருந்து பிரிந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டுப் போனார்கள்; தம்மை விடுதலைப் போராட்டத்தில் இணைப்பதற்காக.
காலமோடியது இளையவள் கடற்புலியாகி எதிரியை அழிப்பதற்காக கடலிலே காத்திருந்தாள்.....
மூத்தவள் கரும்புலியாகி எதிரியின் தளமொன்றை நோக்கிய பயணத்திற்காக தென்தமிழீழத்தின் நகரமொன்றில் புறப்படத்தயாராகி நின்றாள்.....
அம்மாவுக்கு எதுவுமே தெரியாது.
பாவம் பிள்ளைகளைப் பிரிந்த மனக்கவலையில் அவள் நொந்துபோனாள்.
எத்தனை இரவுகள் அவள்..... அவர்களை நினைத்து அழுதிருப்பாள்.....
கண்ணீரில் கரைந்த இரவுதான் அவளுக்கு அதிகம்.....
ஆனாலும், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
அம்மா பிள்ளைகளை வீட்ட வரச்சொல்லிக் கேட்பதேயில்லை...
கேட்டால் மட்டுமென்ன அவர்கள் வந்துவிடவா போகிறார்கள்.
எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள். ஏச்சு வேண்டியதுதான் மிச்சம்.....
தமக்கையும்... தங்கையும் வௌ;வேறு இடங்களில் நின்றாலும்...
அவர்களிருவரும் நின்றது சாவோடு மோதும் போர்க்களங்கள் தான்.
அவர்கள் விரும்புவதும் அதுதான் கடலோடி விளையாடி பகையோடு மோத இளையவள் காத்திருக்கும் தருணங்கள் ஆபத்தானவைதான்...
ஆனால், என்ன செய்வது.... போராடினால்த்தான் வாழ்க்கையென்றான நிலையில்; தமிழினமிருக்கும் நிலையில்..
ஒரு நாள்; கடலில் நடந்த சமரொன்றில்; அந்த இரட்டையர்களில் இளையவள் எதிரியோடு மோதி தன்மேனியில் குண்டேந்தி வீழ்ந்துவிட...
தங்கையின் ஆசை முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாத தொலைவில் மூத்தவள் நின்றாள்....
ஒரு வானொலிச் செய்திதான் தங்கையின் வீரச்சாவு செய்தியைச்; சொல்லிவிட்டுப்போனது.
அவள் அழுதாள்.... தங்கைக்காக மட்டுமல்ல... தங்கையை நினைத்து அழும் தாய்க்காகவும் சேர்த்து.....
பிறப்பால் இணைந்து..
பந்தத்தால் ஒன்றிணைந்து...
போராட்டத்திலும் ஒன்றாகச்சேர்ந்து...
இலட்சியத்திற்காக வாழ்வதிலும் ஒன்றுபட்டவள்... இப்போது சாவில்மட்டும் முந்திவிட்டாளே..
மறக்கமுடியாத எத்தனை இனிய நினைவுகள்...
அவளுக்கும் தங்கைக்குமிடையில்... சொல்லி முடித்துவிடவும் முடியாத...
எண்ணி முடித்துவிடவும் முடியாதவை அவை.....
அவளுக்குத்தெரியும் அம்மா சோகத்தால் துடித்துப் போயிருப்பாள் என்பது.....
தங்கையின் முகத்தை தன்முகத்தில் ஒருமுறை பார்க்க அம்மா எவ்வளவு ஏங்கியிருப்பாள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவளால் தாங்க முடியாதிருந்தது.
என்ன செய்வது....?
அம்மா அழாதயணை....
அவள் சும்மா சாகேல்ல....
நாட்டுக்காகத்தானே செத்திருக்கிறாள்...
எனச்சொல்லி....
அம்மாவின் தோள்களை அணைத்து... உச்சியைத்தடவி.... ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்திருக்கும்.
ஆனால், அவள் உறுதியானவள்.
இயக்கம் வீட்ட போகச் சொன்னாலும் அவள் போகமாட்டாள்.
அவளை நம்பி ஒப்படைக்கப்பட்ட கடமையின் பெறுமதி அத்தகையது....
தங்கையின் உடலைப் பார்க்கும் வாய்ப்பு அம்மாவுக்குக் கிடைத்ததையிட்டு... அவளுக்கான இறுதி விடைகொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றதையிட்டு.... அம்மா பெருமைபடட்டும்.
தன்னுடைய சாவுகூட அம்மாவுக்குத் தெரியவரப் போவதில்லை...
எங்கே அவள் வீரச்சாவடைந்தாள் என்பதைக்கூட அம்மா அறியப்போவதில்லை.....
தங்கையின் வீரச்சாவு குறித்து அம்மாவுக்கு ஆறுதல் செய்தியை மட்டும் அங்கிருந்து அவளால் அனுப்ப முடிந்தது.
எதிரியின் தளப்பிரதேசத்தை நோக்கிய அவளது பயணம் ஆரம்பமாகியிருந்தது.
அவள் பிறந்த ஊரின் வெகுதொலைவிலிருந்து அவள் அந்த தனது இறுதிப்பயணத்தைத் தொடக்கியிருந்தாள்.
இனி எப்போதுமே அவள் இங்கே திரும்பிவரப்போவதில்லை.
அவள் நேசிக்கும் தாயை...
தாய்நாட்டை... இனி காணப்போவதில்லை...
இப்படித்தான் அவளை அதிகம் நேசிக்கும்....
தாயும்...
தாய்நாடும்.... கூட....
அவளை இனிக்காணப்போவதில்லை.
அவள் குறித்த எந்தத் தடங்களும் எவருக்கும் கிட்டப்போவதுமில்லை.
அவள் புறப்பட்ட அந்தக் கடைசி நிமிடங்கள்....
அது ஒரு உணர்ச்சிமயமான நிமிடங்கள்...
மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தவள் தயங்கினாள்...
இத்தனை காலமும் அவள் பத்திரமாகப் பாதுகாத்த... அவள் தன்னுயிரிலும் மேலாக நேசித்த... அந்த உன்னதமான ~ஏதோவொன்று அவள் கைகளுக்குள் மின்னியது....
உள்ளங்கைகளை விரித்து ஒருமுறை அவள் பார்த்துக்கொண்டாள். அதுதான் அவளின் கடைசிப்பார்வை.
தான் பயணித்த அத்தனையிடங்களுக்கும் தன்னோடு இத்தனை நாளும் கூடவே கொண்டு சென்ற அந்த ~பொக்கிசத்தை அவளை வழியனுப்பி வைக்கும் தளபதியிடம் மனமின்றி ஒப்படைத்தாள்.
'இதை மறந்திடாமல்..."
நான் வீரச்சாவடைஞ்ச பிறகு....
வீட்ட ஒப்படைச்சு விடுங்கோ... அது அவளின் பல கதைகளைச் சொல்லும் போல....
தளபதியின் கைகளுக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து வந்த போது அவள் அள்ளிவந்த ~மண் பத்திரமாக இருந்தது.
அவளின் மண் பற்றைச் சொல்லியபடி....
கடமை வீரன்
அவனொரு மறைமுகக் கரும்புலி வீரன்.
நல்ல உணர்வான போராளி....
ஆனால் பெரும் குழப்படிக்காரன் அவனைப் பொறுத்த வரையில் எந்த நேரமும் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் - ஓரிடத்தில் ஓய்வாக இருப்பதென்றால் - அது மட்டும் அவனால் முடியவே முடியாது.
அவனின்...
இந்தப் பெயரைச்சொல்லி யாரும் அழைப்பதேயில்லை...
மாறாக எல்லோரும் அவனை ~மூஸ் என்றுதான் அழைப்பதுண்டு.
அவனின் நட்பு வட்டம் பெரிது... தெரிந்தவர்கள் அறிந்தவர்கள்... எண்ணிக்கை மிக அதிகம்..... அதனால் எல்லோருடைய நட்பையும் பேணிக்கொள்வதில் அவனுக்கு அதிக ஆர்வம்.
அவனுடைய அளவில்லாத ~மூஸ் காரணமாக பல நாட்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பான். ஆனாலும், அதற்;காக மூசை குறைத்தது கிடையாது.
யாரேனும் தெரிந்தவர்களின் படலையைக்கடந்து உள்ளே அவன் நுளைவான்... நுளைந்தவன் இங்கே தானே நிற்பான் என நினைத்தால்... நினைத்தவர் பாவம்... அவன் அங்கே நிற்கமாட்டான்.
அதிலிருந்து நாலு தெரு தாண்டியும் அவனுடைய நட்புப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அந்தளவுக்கு அவனொரு ஊர்சுற்றும் வாலிபன்...
அவன் ~மூசுக்கு முன்னுதாரணம்... என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்....
ஆனால்.....
பல இலட்சம் மக்கள் செறிவாக வாழும் நகரமது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரு சில மணிநேரத்திற்குள் உள்ளே நுழைவதும் - வெளியேறுவதுமாக எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் நகரம்.
அங்கே தான் எங்களது இந்தக் கரும்புலி வீரன் நின்றான்.
இங்கே ~மூஸ் அடிப்பதில் 'பட்டம்" வேண்டியவன்; அங்கே மட்டும் என்ன...சும்மாவா இருந்துவிடப்போகிறான்....
அங்கேயும் அதே பல்லவி தான்...
அந்த நகரத்தின் சந்துபொந்து யாவும் அவனுக்கு அத்துப்படியாகியிருந்தது.
ஆனால், அவன் அங்கு போயிருப்பதன் நோக்கமோ பெரிது இரகசியமானது.
மிக முக்கியமான இலக்கொன்றின் மீதான தாக்குதலுக்காகவே அவன் அங்கு சென்றுள்ளான்.
அது குண்டு பொருத்திய ஊர்தியை ஒரு நகரும்... இலக்கின் மீது மோதி அழிக்க வேண்டும்...
அந்த இலக்கின் மீதான தாக்குதலுக்காக அங்கே நின்ற எல்லோருமே எவ்வளவு சிரத்தையுடன் இயங்க வேண்டியிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும்.
சிறு கவனக்குறைவு கூட பெரும் முயற்சிகளை சீர்குலைத்து விடக்கூடிய சூழல்.
தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான அனுபவமும்... அறிவும் கூர்மையுடனிருக்க வேண்டும்.
எவ்வளவு தான் கடினமாக பயிற்சி எடுத்தாலும், சில வேளைகளில் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்து நிற்கும்... அவற்றை வென்றுதான் காரியமாற்ற வேண்டியிருக்கும்.
புதியகளம்... பழக்கப்படாத சூழல்... எதிரியின் முற்றம் அதற்குள் செயற்படுவதென்றால்...
வேகமாக விரைந்து செல்லும் பெருவாரியான வாகன நெரிசல்களுக்குள்ளும்...
சன நெரிசல்களுக்குள்ளும்... வாகனம் செலுத்துவதில் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது.
இவனின் அந்த 'மூசை"த் தவிர மற்றெல்லாம் திருப்தியாக இருந்தது...
ஒருநாள்...
தாக்குதல் நடவடிக்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுக் குண்டு பொருத்தப்பட்ட வாகனம் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இனி எந்தவேளையும் அவன் விழிப்போடு இருக்கவேண்டும். அவன் மேற்கொள்ள வேண்டிய கடமை எதிரியின் இதயத்திற்குள்ளேயே ஆணி அறைந்தாற் போல மேற்கொள்ளவேண்டிய ஒரு தாக்குதல்....
நீண்டகால முயற்சியின் - அறுவடையாக அமையப்போகும் ஒரு நடவடிக்கை.
இனி எல்லாமே அவன் கையில்....
அங்கே களத்திற்குப் பொறுப்பாக நின்ற தளபதி அந்தக் குண்டூர்தியை அவனிடம் ஒப்படைக்கும் போது சொன்னார்....
'வாகனத்தை விட்டு இறங்கி அங்கயிஞ்சயின்டு போயிடாத.....
எந்த காரணத்தையும் கொண்டு வாகனத்தை பிடிபட விட்டுடாத..."
தளபதி எதை நினைத்துக் கொண்டு... இதைச் சொல்கிறார் என்பது அவனுக்குத் தெரியும்...
அதன் அர்த்த பரிமாணம் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதென்பதும் அவனுக்குத் தெரியும்.
தளபதியின் அறிவுறுத்தல்களுக்கும்... தெளிவுரை களுக்கும் பதிலாக ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு நம்புங்கோ... நான் செய்வன் என்பதுபோல அவன் புறப்பட்டுப் போனான்...
அந்த நகரம் யார் வருகைக்காகவும்... தாமதத்துக்காகவும் காத்திராமல் தன்னுடைய இசைவோட்டத்தில் எப்போதும் போல... இப்போதும் ஓடிக் கொண்டிருந்தது....
இவன் மட்டும் தன்னுடைய இலக்கின் வருகையை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தான்.
அந்தப் பெரும் சனக்கூட்டத்துள் எவருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத் தாதவகையில்; இவன் போருலா வந்து கொண்டிருந்தான்.
அந்தக் கரும்புலி வீரனுடன் அவனை வழிநடத்தும் அவனின் தளபதியும் கூடவேயிருந்தார்.
நீண்டநாள் அவன் எதிர் பார்த்திருக்கும் சந்தர்ப்பம்...
இலக்கு நெருங்கினால் குறிதவறாது அடிக்க வேண்டுமென்ற தவிப்பு. நெஞ்சுள் பாரமாய் அழுத்த அவன் இயங்கிக் கொண்டிருந்தான்...
அதுவொரு இளவேனிற்பொழுது.
நகரப்போக்குவரத்துக்கு மாறாக செயற்படாது அதுவொரு சாதாரண பயணம் போல போக்குக்காட்டி... சரியான நேரத்தில் - சரியான இடத்தில் தாக்க வேண்டும்.
ஆனால், அன்றைய அந்தக் காலைப்பொழுது அவனுக்கு வாய்ப்பானதாக அமையவில்லை...
அவன் எதிர்பார்த்த அந்த இலக்கு இவனின் தாக்குதல் வலயத்துள் வராமலே நழுவிப்போனது
அன்றும் அவனுக்கு ஏமாற்றம்...
எத்தனை நாள் இப்படி ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பான்.
இப்போதும் அப்படித்தான்...
ஆனால்;, அன்றைய நாள் எப்படியாவது அந்தத்தாக்குதல் மேற்கொண்டேயாக வேண்டும்.
அப்படியானால் காலையில் நழுவிப்போன அந்த இலக்கு மாலையிலாவது வீழ்த்தப்படவேண்டும்...
நெஞ்சுள் அழுத்தும் அந்த இலட்சியச்சுமையோடு... இயங்கிக் கொண்டிருந்தவனுக்காகக் காத்திருக்கப் போகிறதா காலம்....
நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது... அவன் பசியை மறந்து இயங்கிக் கொண்டிருந்தான்.
கூட வந்த தளபதிக்கோ பசி தாங்க முடியாதிருந்தது...
அந்தத் தளபதிதான் ~மூசைப்பார்த்துக் கேட்டார்.....
சாப்பிட்டு வருவமா......?
அவன் அந்த கேள்விக்குப் பதிலுரைக்காது போகவே... மீண்டும் அவரே கதைத்தார்.
ஒவ்வொருவராக மாறி.... மாறி.... வாகனத்திலை நிண்டு கொண்டு போய் சாப்பிட்டு வருவம்...
அப்போது அந்தக் கரும்புலி வீரன் தளபதியைப் பார்த்துச் சொன்னான்...
'வாகனத்திலை குண்டு பொருத்தியாச்சு வெடிக்குவரை நான் வாகனத்தை விட்டு இறங்க மாட்டன்"
நீங்கள் வேண்டுமானால் போய் சாப்பிட்டு வாங்கோ...
சொன்னது மட்டுமல்ல.... உறுதியாகவும் நின்றுகொண்டான்.
இனி அவனை எப்படியழைத்தாலும் அவன் வரப்போவதில்லை...
இலட்சியப்பசி மேலோங்கி நிற்கும் போது அவன் வயிற்றுப் பசியைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை...
அப்ப நீ... வாகனத்திலேயே இரு... நான் உனக்கும் சேர்த்துச்சாப்பாடு வேண்டிக் கொண்டு வாறன்... எனத் தளபதி அவனிடம் சொல்லிவிட்டு இறங்கிப்போய் சில நிமிடங்களுக்குள் அந்த நெருக்கடிமிக்க தெருவில் நிகழ்ந்துவிட்ட எதிர்பாராத சிக்கலொன்றின் விளைவாக அவனை எதிரிகள் சூழ்ந்துவிட... அவன் இரகசியத்தைப் பேணும் உயர் நோக்கோடு ஊர்தியோடு சேர்த்துத் தன்னை அழித்தான் அந்த வீரன்...
பயணம்
ஏற்கெனவே ஒரு பிள்ளையை இந்த மண்ணின் விடுதலைக்காக உவந்தளித்த ஒரு மாவீரர் குடும்பத்திலிருந்து போராடுவதற்கு இரண்டாவது வீரனாக வந்திருந்தான் அவன்.
போராட்ட அறிவும் திடமும் அவனுள் பெருகியிருந்தது.
அவன் தன்னைக் கரும்புலியாக இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேயிருந்தான்.
இடைவிடாது அவன் விடுத்துக்கொண்டிருந்த வேண்டுகை அவனின் முயற்சியின் பயனாக ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்போது அவனொரு 'கரும்புலிவீரன்". அதுவும் ஒரு மறைமுகக் 'கரும்புலிவீரன்".
எதிரியின் தலைநகரத்தில் மிக முக்கியமான இலக்கின் மீதான தாக்குதலுக்கு அவன் தெரிவாகினான்.
அவனிடமிருந்த சாரதியத்திறமையில் நம்பிக்கை வைத்து அந்தத் தாக்குதலுக்கான வெடிகுண்டு வாகனத்தைச் செலுத்தும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தளத்திலிருந்து தாக்குதல் களத்திற்கு அவன் புறப்பட வேண்டும்.
எல்லாம் சரிவந்து இங்கிருந்து ஒருநாள் புறப்பட்டுப் போனவன்;; பயணம் தடைப்பட்டு மீளவும் முகாம் வர வேண்டியதாயிற்று.
ஆனால், அங்கே களத்தில் அந்தத்தாக்குதலுக்கான ஒழுங்குபடுத்தல்களை அங்கிருந்தவர்கள் தொடர்ந்து மேற்கொண்டபடியிருந்தனர்.
அடுத்த பயணம் சரி வரும் வரையில்... அவன் இங்கிருக்க வேண்டும்.
அந்த நாட்களில் அவனுக்கு இங்கு மேலதிகப் பயிற்சி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
எதிரியின் தலைநகரத்து நவீனத்தெருவில் - சனநெரிசல் மிக்க பகுதியூடாகக் குண்டூர்தியைச் செலுத்தி; தாக்குதல் இலக்கின் மீது... மோதி வெடிக்க வேண்டும்.
அவனுக்கான மேலதிகப் பயிற்சி இங்கு ஆரம்பமாகிவிட்டது.
மல்லாவியின் தெருக்களில்; அவன் அசுர வேகத்தில்; வாகனம்; செலுத்தும் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த ஒருநாள்.
வெயில் சுட்டெரிக்கும் அன்றைய நாள் காலையில் தொடங்கிய பயிற்சி மதியத்தைத் தாண்டியும் தொடர் வயிறு பசியில் விறாண்டத் தொடங்கியது. அவன் அதை வெளிக்காட்டாது தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது பயிற்சியளித்துக் கொண்டிருந்த அந்தத் தளபதிக்கும் கூட கடுமையான பசி.
கடையில் வேண்டிச் சாப்பிடு வதாக இருந்தால், இருவரிடமும் ஒரு சதம் காசும் கிடையாது.
ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க - வெட்கத்தை விட்டு அந்தத் தளபதி தான் கேட்டார்.
'மச்சான் சரியா பசிக்குதடா...."
உனக்கு தெரிந்தாக்கள் யாரும் இஞ்சயிருந்தால் சொல்லு... போய்ச் சாப்பிடுவம்....
முகத்தைத் திருப்பித் தளபதி யைப் பார்த்தவன்....
புளுதியைக்கிளப்பி விரைந்து கொண்டிருந்த வாகன இயந்திர ஒலியினூடே சத்தமாக அவசர அவசரமாக மறுத்தான்
இல்ல மாஸ்டர்..
எனக்கு இஞ்ச யாரையும் தெரியாது...
என்ன நினைத்தானோ தெரியாது சற்றுத்தூரம் சென்ற பின்...
ஒரு வீட்டு வாசலில் கொண்டு போய் வாகனத்தை நிறுத்திவிட்டு.... அந்த வீட்டை உற்றுப் பார்த்தான்....
அது வீடல்ல ஓலைக் குடிசை.
வறுமையின் அத்தனை சாயலையும் அப்படியே விழுங்கியபடி மயான அமைதி கொண்டு குந்தியிருந்தது. உள்ளே போவதா... விடுவதா? அவனுக்குள் தயக்கம் எழுந்திருக்கும் போல.... தாமதித்தவன் பின்னர் தனக்குத்தானே ஏதோ நியாயம் கற்பித்தவனைப் போல உள்ளே கூட்டிப் போனான்....
ஆட்கள் வரும் சத்தத்தைக் கேட்டு எட்டிப் பார்த்த அவனின் தங்கையைப் போன்ற ஒரு தங்கை... ஏதோ சொல்ல... அவனின் தாயைப் போன்ற ஒரு தாய்... முற்றத்திற்கு வந்தாள்....
முகத்தில் மலர்ச்சியும் - சோகமும் - தவிப்பும் நிறைந்த உணர்வோடு அவர்களை அவள் மௌனமாக வரவேற்றாள்.
எந்த வார்த்தைகளுமின்றி அங்கே மௌனம் மட்டும் தான் நிரம்பிக் கிடந்தது.
குடிசையின் திண்ணையில் தளபதி பசி மயக்கத்தில் அமர... தயங்கித் தயங்கி அந்தக் கரும்புலி வீரனும் அமர்ந்தான்.
அவனின் அம்மாவைப் போன்ற அம்மா எதுவுமே பேசவில்லை...
தங்கையைப் போன்ற தங்கை அவளும் எதுவும் பேசவில்லை....
உள்ளேயிருந்து அப்போது தான் வெளியே வந்த அவனின் தம்பியைப் போன்ற தம்பி அவனும் கூட ஒன்றுமே பேசவில்லை....
சரி... இவனாவது ஏதாவது பேசுவானென்றால் அதுவுமில்லை...
முற்றத்தில் நின்ற முட்கள் நிறைந்த அந்தத் தேசி மரத்தின் இலைகள்... அந்த அம்மாவின் கைகளுக்குள் சிக்குண்டு நசிந்து கொண்டிருந்தது.
அவளினுள்ளே அவளை அழுத்திக் கொண்டிருக்கும் துயர மனதைப் போல...
அந்த மௌனப் பொழுதை அந்த அம்மாதான் கலைத்தாள்.
வந்தவர்களுடன் எதுவுமே பேசாது சின்னவனை அழைத்து.... அவனின் காதுக்குள் ஏதோ சொன்னாள்....
குடிசைக்குள் போன சின்னவன் கையிலெடுத்த பேணியோடு படலையைத் தாண்டிப் போனான். ஆனால், அவன் போக விருப்பமின்றிப் போய்க்கொண்டிருக்கின்றான் என்பதை அவனின் நடை உணர்த்தியது.
பலமுறை இப்படிப் போயிருப்பான் போல.
இம்முறையும் எப்படி இப்படிப் போவதென்ற தயக்கம் அவனுள்ளே இருந்திருக்க வேண்டும்...
போனவன்... போகும்போது கொண்டுபோன தயக்கத்தையும் வெட்கத்தையும் தூக்கியெறிந்துவிட்டுத் துள்ளியோடி வர... அம்மாவின் முகத்திலும் மலர்ச்சி...
அந்த மௌனப் பொழுதுக்குள் அவர்களுக்கிடையே ஆயிரமாயிரம் போராட்டங்கள் உள்ளே நடந்து முடிந்ததை அவனும் - அவர்களும் நன்கு அறிவர்...
அம்மா தேசிமரத்து இலைகளைக் கைவிட்டு அவர்களுக்காகவே காய்த்திருப்பது போல கிளைகளில் தொங்கும் தேசிக்காயைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே போனாள்...... அவர்களால் அவ்வளவுதான் அப்போது முடியும்...
பேணி நிரம்பிய தேசிக்காய் தண்ணீரோடு அந்த அம்மா வெளியே வந்தாள்... அவளின் விழிகள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று... கெஞ்சுவது போலிருந்தது.
அந்தக் கரும்புலிவீரனுக்கு அம்மாவின் ஏழ்மையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமலிருந்திருக்கும் போல...
முழங்கால்களில் கைகளை ஊன்றித் தலையைக்கவிழ்த்துவிட்டு... நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அம்மா அருகில் வந்தது கூடத் தெரியாது....
கூடப்போன தளபதிக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
தேசிக்காய் தண்ணீரை வாங்கிக் குடித்த அந்தத் தளபதி கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு கரும்புலி வீரனிடம் சொன்னார்....
'நான் வெளியில் நிக்கிறன் நீ அவையோடு கதைத்துவிட்டு வா..."
இப்போதும் அவசர அவசரமாக அதை மறுத்தான்.
இல்ல மாஸ்டர் கதைக்க ஒண்டுமில்லை... நானும் வாறன்... என்று சொல்லியபடி வெளியில் வந்தவன்; வாகனத்தை வேகமாக ஓட்டத்தொடங் கினான்...
பயிற்சி முடிந்து அவனின் பயண நாளும் வந்தது.
இனி அவன் இங்கிருந்து புறப்பட வேண்டும்.
எல்லோரிடமும் கையசைத்து விடை பெற்றுக்கொண்டிருந்தான்.
இந்தப் பயணம் உறுதியானது. இனி அவன் திரும்பி வரப்போவதில்லை.
புறப்படும் வேளையில் எல்லோரிடமும் விடைபெற்ற அவன்....
தான் ஆழமாக நேசித்த அவனின் அந்த அம்மாவைப் போன்ற அம்மாவிடம் போகவில்லை....
அவனின் தங்கையைப் போன்ற தங்கையிடம் போகவில்லை....
அவனின் தம்பியைப் போன்ற தம்பியிடம் அவனிடமும் போகவில்லை...
ஏன்...?
அந்த அம்மா அவனின் அம்மாவைப் போன்ற அம்மா இல்லை...
அவள் அவனின் தங்கையைப் போன்ற தங்கையில்லை...
அவன் அவனின் தம்பியைப் போன்ற தம்பியுமில்லை...
அவர்கள் அவனின்...
அம்மாவும்...
தங்கையும்...
தம்பியும் தான்...
கெட்டிக்காரி
தமிழரின் பண்பாட்டு தலைநகரத்தை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டு; அறுந்துபோன வேர்களுக்கு நீரூற்றிக் கொண்டிருந்தது 'சமாதான இராட்சசியின்" அரசு.
ஐந்து இலட்சம் மக்கள் இரவோடிரவாக சுமக்க முடியாத மனப்பாரத்தோடு வெளிக்கிளம்பிய அவலம் நடந்தேறிய நாட்கள் அது.
மீளவும் மக்கள் தமது ஊர்களில் குடியேறியிருக்க அவர்களின் அவலத்தை விற்றுப்போருக்குப்பணம் தேடும் வியாபாரத்தைத் தொடங்கியிருந்தது ~இராட்சசியின் ~அதிகாரமையம்.
எரிந்துபோன நகரத்திற்கு வெள்ளையடித்து... அவசர அவசரமாக அரிதாரம் பூசி... போலி அலங்காரத்துள் நகரத்தைச் சிரிப்பூட்டிக் கொண்டிருந்தான் எதிரி.
நகர மக்களின் இடப்பெயர்வோடு குழம்பிப் போனது சனங்களின் வாழ்க்கை மட்டுமல்ல, உள்ளே ஏற்கெனவே ஊடுருவியிருந்த பல புலனாய்வுப் போராளிகளின் தொடர்புகளும் தான்.
இப்படித் தொடர்பறுந்த நிலையிலும் உள்ளே உறுதியோடு நின்று 'புலனாய்வு" வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அந்த ~மறைமுகக் கரும்புலி வீராங்கனை.
இங்கே இயக்கம் அறுந்துபோன தொடர்புகளைச் சீராக்கி ஆங்காங்கே பிரிந்து போயிருக்கும் தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
ஆயினும், எதிரியின் இறுக்கமான முற்றுகையாலும்; - அவன் ஏற்படுத்தியிருந்த புலனாய்வு வலைப்பின்னலாலும்; எடுத்த முயற்சிகள் பல சறுக்கித் தடைப்பட்டு நின்றது.
ஆனாலும், எதிரியின் முற்றத்துள்; அந்தத் தோழி உள்ளே எரியும் கோபத்தை வெளிக்காட்டாதபடி.. இல்லாத தொடர்புகளை எண்ணிக் குழம்பிப் போகாது... அவள் எதிர்பார்க்கும் வாய்ப்பைத் தேடி இயங்கிக் கொண்டிருந்தாள்.
அப்படியான ஒருநாள்.
அவள் தேடித் திரிந்த அந்த இலக்கு அவளைத் தேடி வந்தது.
ஆக்கிரமிப்பு மூலம் மக்களை அடிமைப்படுத்திவிட்டு; புனர்வாழ்வு புனரமைப்பென்ற பெயரில் அதிகார பீடத்தின் அபத்த நாடகத்தை நெறிப்படுத்தும் உயர் அதிகாரக்கரங்கள் நகரத்தின் மத்தியில் கைகுலுக்கும் தகவல் எட்டியது.
கண்கள் சிவக்க - அவள் சுறுசுறுப்பானாள். அரிய வாய்ப்பு குறித வறாது கதை முடிக்க வேண்டிய அதிகாரத்தின் கைப்பிடிகள்.
வெற்றிக் களிப்பில் திமிரும் எதிரிகளுக்கு பாடம் புகட்டத்தக்க தருணம்.
அவள் இயங்கத்தொடங்கினாள்....
கிடைத்த வேவுத் தகவலைத் தளத்திற்கு அனுப்பி - இங்கிருந்து அனுமதி பெற்று - தேவைப்படும் உதவிகளை வேண்டி - தாக்குதலை மேற்கொள்வதற்கு எந்த அவகாசமும் கிடையாது.
தொடர்புகள் மட்டும் சீராயிருந்தாள் கதையே வேறு.
எல்லா ஒழுங்குகளும் இங்கிருந்து மேற்கொள்ள அந்த தாக்குதலை மட்டும் அவள் அங்கு செய்து முடிக்க வேண்டியிருந்திருக்கும்.
ஆனால், என்ன செய்வது, இப்போது எல்லாமே அவள் தலையில் பாரமாய்க்கனத்தது.
வேவுத் தகவல் திரட்டி - தாக்குதல் வடிவம் தீட்டி - தேவையான 'வெடிகுண்டு அங்கி" ஒழுங்குபடுத்தி - எல்லா செயற்பாடுகளையும் அவளே செய்ய வேண்டியதாயிருக்கிறது.
பொறுப்புணர்வோடு எல்லாவற்றையும்
அவள் ஓடி ஓடிச் செய்தாள்.
எப்போதோ ஒருநாள் - இன்ன இடத்தில் ஒரு வெடிகுண்டு அங்கி இருப்பதாக சொன்ன தகவலின் அடிப்படையில் அவள் தேடிப்போனாள்.
அங்கு அந்த வெடிகுண்டு அங்கியி ருந்தது ஆனால் தாக்குதலுக்கு ஏற்றதாக இருக்கவில்லை.
சரி இது சரிவராது... வேறொன்றை தேடுவோம் என நினைத்தால் கூட... அதற்கு அங்கே வாய்ப்பில்லை.
அது எதிரியின் முழு ஆளுகை மையம்...
அவள் சலிக்கவில்லை தாக்குதலை தவிர்த்துவிட நினைக்கவில்லை.
பொருந்தாத அந்த வெடிகுண்டு அங்கியை தன்னறிவுக்கமைய வெட்டித் தைத்து - பொருந்திவிட்டதா.... இல்லையா.... எனச் சொல்வதற்கு கூட அங்கு எவரும் இல்லாத நிலையிலும் அவளே திருப்திப்பட்டு... சரிவரும் என்ற நம்பிக்கையோடு தனக்கு நம்பிக்கையூட்டி இறுதிநாள் அவள் புறப்பட்டுப் போனாள்.
நகர மையத்தில் - திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டிருந்தது அந்த அரச உயர்குழு.
தாக்குதலுக்குத் தேவையான வகையில் அந்த வெடிகுண்டு அங்கி வெளித் தெரியாமலிருக்க அவள் தரித்த அந்த வேடம் அவசர கதியிலும் கச்சிதமாய் பொருந்தியிருந்ததில் உயர் 'பாதுகாப்பு வியூகம்" ஏமாந்து போனது.
அந்தக் கணத்திற்காகத் தானே அவள் இத்தனை நாளும் இங்கே தன்னை வருத்திக் காத்து நின்றாள்.
எங்கள் மக்களை அவலத்திற்கு உள்ளாக்கிய வர்களுக்கு ஆடம்பரவிழா வேண்டிக்கிடக்கிறதாக்கும்... அவள் பொங்கிவந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று திரட்டி... பகையோடு மோதி வெடிக்க நகரில் சிதறிக்கிடந்தனர் எதிரிகள் பலர்.
அதுவொரு கரும்புலிகள் நாள்.
கரும்புலிகள் நாளன்று இன்னுமொரு கரும்புலித் தாக்குதல்.
தளத்தில் எல்லோரிடையேயும் அந்தக் கேள்வி வியாபித்து நின்றது. அந்தத் தாக்குதலைச் செய்தது.... யார்? ஒழுங்கு படுத்தியது யார்....?
அந்தச் சாதனைக்குக் காரணமானவன்... அல்லது காரணமானவள் யார்... யார்... யார்...?
பல நாட்களின் பின்னர்; தொடர்புகள் சீர்பெற்று உள்ளேயிருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கிய ஒருநாளில் வெளிச்சமாகியது.
அந்தத் தாக்குதலை எங்கள் இனிய தோழி '............................".
செய்திருந்தாள் என்பது.
சென்றுவா தோழியென... அவளை கட்டியணைத்து வழியனுப்பி வைக்க எவருமே இல்லாத நிலையிலும்... தன்னைத் தானே வழிநடாத்தி... அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தாள் அந்தக் கெட்டிக்காரி.
- சிறீ இந்திரகுமார் -
Saturday, September 13, 2008
தியாகத்தின் இமயங்கள்...!
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
September
(139)
- தடங்கள் தொடர்கின்றன
- அந்நியர் ஆட்சியும் மக்கள் எதிர்ப்பும்
- போராட்ட வரலாறு
- மேஜர் துளசி
- வரலாறும் தேசியமும்
- கடற்புலிகளின் தாக்குதல் காணொளிகள்
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்
- நீரடி நீச்சல் படையணியின் சாதனைகள்
- காங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்
- யாழ்ப்பாண படையெடுப்பு தமிழ்மக்களுக்கு ஒரு செயன்முற...
- மூன்றாம் ஈழப்போர் ஆரம்பம்
- போராட்டம் சந்தித்த நெருக்கடிகளும் தடை நீக்கியாக செ...
- இரண்டாம் ஈழப்போர்
- விடுதலைப்போரின் இறுதி வெற்றியை உறுதி செய்யும் கடற்...
- நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்
- வீரத்தின் சிகரங்கள்
- பலாலி விமானத்தளத் தாக்குதல்
- கப்டன் ஈழமாறன்
- எதிரியின் கோட்டைக்குள் ஒரு அதிரடி
- இலட்சிய உறுதியில் இரும்பு மனிதர்கள்
- ஜொனி மிதி வெடி
- உணவுக்காக ஒரு ஒப்பறேசன்
- எழுத முடியாத காவியங்கள்
- லெப்.மயூரன்
- ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்
- லெப்.கேணல் சூட்
- லெப்.கேணல் நவநீதன்
- கல்வியும் புலிகளும்
- லெப்.கேணல் நரேஸ்-நாயகன்
- கப்டன் துளசிரா
- தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்
- முறியடிக்கப்பட்ட குடாநாட்டு முற்றுகை
- நெருப்பின் குறிப்புக்கள்
- கரும்புலிப் போர் வடிவம் ஓர் போரியல் தேவை
- கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்
- தியாகத்தின் இமயங்கள்...!
- ஒப்பறேசன் தவளையில் கடற்புலிகள்
- கரும்புலிகள் கணெஸ், கோபி
- கடற்கரும்புலி மேஜர் கோபி
- கடற்கரும்புலி மேஜர் கணெஸ்
- இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற...
- மாவீரன் பால்ராச்
- மதிப்புக்குரிய தளபதி
- வீரர்கள் மதிக்கும் வீரன்
- பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன்
- யூலை இது கரும்புலிகள் மாதம்.
- இலங்கை அரசியற்சூழலில் தமிழ்த்தேசியம்
- இந்து சமுத்திரத்தின் திறவுகோல்...
- தமிமீழம் ஒரு தனியரசு
- உள்ளிருந்து ஒரு குரல் 3
- மன்னாரில் பெண் புலிகளின் வீரம்
- மாமனிதர் ஞானரதன்
- தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்
- கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் ...
- ஆனையிறவும் அந்த நாட்களும்...
- கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்
- மூன்றாம் கட்ட ஈழப்போர்
- மாவீரர் நாள் உரை 2006 காணொளி
- மாவீரர் நாள் உரை 1999
- மாவீரர் நாள் உரை 2000
- மாவீரர் நாள் உரை 2001
- மாவீரர் நாள் உரை 2002
- மாவீரர் நாள் உரை 2003
- மாவீரர் நாள் உரைகள்
- ஓயாத அலைகள் - 3 தாக்குதல் காணொளி
- மாவீரர் நாள் உரை - 2007
- அந்தக் கணப்பொழுது
- வவுனியா தாக்குதலில் ராடர் தளம் முற்றாக தாக்கியழிப்பு
- இரகசியத்தின் பெறுமதி
- மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்ப...
- மாவீரர் நாள் உரை 2007 காணொளி
- நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்
- தமிழ்செல்வம் -க.வே.பாலகுமாரன்
- வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் - ச.பொட்டு
- கப்டன் திலகா
- தமிழீழ விடுதலையும் தமிழீழ முஸ்லீம்களும்
- தலைவரின் உண்ணாவிரதம்
- தமிழீழ அரசியலும் தமிழ்க் குழுக்களும்
- தமிழீழ நீதி மன்றம்
- தமிழீழ விடுதலைப் போராட்டம்
- உள்ளிருந்து ஒரு குரல் 2
- தேசத்தின் குரல் காணொளிகள்
- பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்
- பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பதிவுகள்
- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்
- உள்ளிருந்து ஒரு குரல்
- மாவீரர் நாள் உரை 2006
- லெப்.கேணல் சூட்டி
- லெப்.கேணல் ஜோய்
- லெப்.கேணல் சரா
- லெப்.ரவிக்குமார் லெப்.சின்னா கப்டன் கரன்
- அன்பு
- தமிழரின் தாயகம்
- பூநகரி வெற்றியின் உற்ற துணைவர்கள்
- மாமனிதர் பேராசிரியர் துரைராசா
- கடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்
- கடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மண...
- விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்
- லெப்.தமிழ்மாறன்
- புலிகளும் மத சுதந்திரமும்
-
▼
September
(139)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment