Friday, August 15, 2008

மேஜர் கஜேந்திரன்

சிங்காரவேல் சசிதரன்

20-06-1963 - 28-06-1987

தமிழீழப் பிரதேசம் சிங்களப் பேரினவாதிகளால் படிப்படியாக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம்.
கண்முன்னாலேயே அந்நியர் ஆக்கிரமிப்பு. தமிழ், முஸ்லீம் மக்களின் உயிருக்கோ உடமைக்கோ உத்தரவாதம் இல்லாமல் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். ஏனைய தமிழ்ப்பிரதேசங்களைப் போல திருகோணமலையில் இடம்பெற்ற குடியேற்றங்களும் அவர்களால் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் ஓர் கண்ணீர்க்காவியம். "இந்தக் கண்ணீர்க்காவியம் தொடரமுடியாது. மாற்ற} அமைக்கப்படவேண்டும். அமைதி வழியில் இது முடியாது. ஆயுதம் ஏந்திப் போராடுவதே ஒரே வழி" என்ற தீh க்கமான முடிவுடன்தான் திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் சசிதரன், கஜேந்திரன் ஆனான்.
1983ல் தன்னை விடுதலைப் புலிகளோடு இணைத்துக்கொண்ட இவன் எஸ்.எல்.ஆர். (ளுடுசு) துப்பாக்கியால் குறிதவறாமல் சுடுவதில் தன்னிகரற்றவன். இவனது திறமைக்காக தலைவர் பிரபாகரனால் புது எஸ். எல். ஆர் (ளுடுசு) துப்பாக்கி ஒன்று இவனுக்கு வழங்கப்பட்டது.
திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆரம்பகால மருத்துவன் இவன்தான். இராணுவப் பயிற்சியின்போது மருத்துவர் பயிற்சியும் திறம்படப் பெற்ற இவன் மூதூர் தளபதி கணேசுடன் சேர்ந்து சிறீலங்கா இராணுவத்திற்கும் போலீசாருக்கும் எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினான்.
02.06.1985 அன்று மேன்காமம், கங்குவேலியில் இருந்து 45 தமிழ் பெண்களை சிங்கள இராணுவமும், சிங்களக் காடையரும் கடத்திச் சென்று மானபங்கப்படுத்தி கொலைசெய்ய முற்பட்டவேளையில் மேஜர் கணேசுடன் கஜேந்திரனும் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றினான்.
05.11.1986ல் மூதூர் தளபதி கணேஸ் வீரமரணமடைந்தபோது மனமுடைந்துபோன மூதூர் மக்களுக்கு கிடைத்த புதிய வலுவான கரம் கஜேந்திரன்.
தமிழீழத்தில் ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் தமிழ், முஸ்லீம் மக்களிடையே திட்டமிட்டு மோதல்களை உருவாக்கி அவர்கள் ஒற்றுமையைக் குலைப்பதன் மூலம் தமிழ்த்தேசிய இனத்தை சுலபமாக அழிக்கலாம் என சிறீலங்கா அரசும், இஸ்ரேலிய மொசாட் உளவு அமைப்பும் செயற்பட்டு வந்தன.
இவர்களின் திட்டமிட்ட செயலால் தமிழ், முஸ்லீம் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டபோது கஜேந்திரன் தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்காகத் தனது சக போராளிகளுடன் கடுமையாகப் பாடுபட்டான். சிறீலங்கா அரசினதும், மொசாட்டினதும் திட்டமிட்ட சதிகளை அம்பலப்படுத்தினான்.
28.06.1987 தமிழீழம், தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்-முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட தனது அருமை மைந்தர்கள் 9 பேரை இழந்து கண்கலங்கி நின்றது.
கூனித்தீவில் நடந்த சுற்றி வளைப்பில் ஏற்பட்ட மோதலில் கப்டன் முத்துச்சாமி, கப்டன் சுதர்சன், கப்டன் குழியா (சிறி), லெப். சுரேஸ், 2வது லெப். கோபி, நிமால், நாகூர், லோயிர் ஆகியோருடன் மேஜர் கஜேந்திரனும் வீரமரணமடைந்தான்
நன்றி எரிமலை

0 comments:

Blog Archive