லெப். கேணல் வேணு
வீரஜனனம் பிரான்சிஸ் ரொபேட் சேவியர் வீரமரணம்
16-10-1964 அடம்பன் மன்னார் 16-01-1992
"கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம். பத்து ஆமி செத்துப்போனாங்களாம்" இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்துவிடும். ஆனால் இதனுடைய பெறுமதி இதன் பரிமாணம் மிகப்பெரியது. இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்பு முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி, அடம்பன், நீராவியடி வஞ்சியன்குளம்.... என்ன தவறு நடந்தது? பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஒன்று தான் மன்னாரை அதிரவைத்த வஞ்சியன்குளம் விபத்து.
ஆட்காட்டிவெளி இங்குதான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான். 1984ல் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன், மன்னார்த் தளபதியாக முகாமில் உருவாகியவன். பயிற்சி முகாமில் இருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக்கொள்வதற்குப் பெரிதும் உதவியது. இவன் பங்குகொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகும். மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்தவரை இவனே டொக்டர். ஆனாலும் இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை.
17-01-1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான லெப். கேணல் விக்டரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை, கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். " பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலையில் ஓடிய இராணுவம், நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது.
பரப்புக் கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் அடம்பன் போன்ற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டும். இவனோ அந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டிவெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமானான். இரவு பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ, போராளிகளுக்கோ வேணுதான் டொக்டர்.
இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. காரணம் அவர்களோடு அவன் பழகிய விதம் மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான். குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது, உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள்.
07-11-1989 அன்று வில்பத்துக் காட்டில் "பச்சைப் புலிகள்" எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம், சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில், தனது 14 தோழர்களுடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள் மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர், பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால் உயிரிழந்த தமது சகா ஒருவனை விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே.
இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி, இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன். 1991ம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு.
அது ஒரு கொடிய நாள், ஏற்கனவே மிகப் பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத் தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி, திறமையான மருத்துவன் - மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம்.
அவனுடன் மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி, என்று நால்வரை - எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம்.
நன்றி மாவீரர் குறிப்பேடு
Friday, August 15, 2008
லெப். கேணல் வேணு
Posted by defencetamil at 2:23 PM
Labels: மாவீரர்கள், லெப்.கேணல்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
August
(122)
- எல்லாளன் நடவடிக்கை" யின் முக்கியத்துவம் என்ன?
- 'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்
- மாமனிதர் ஜெயக்குமார்
- வரலாறு தொடர்கின்றது....
- கடற்கரும்புலி கப்டன் பாலன்.
- மேஜர் சிட்டு
- லெப்.கேணல்.வீரமணி
- 2ம் லெப்.தமிழழகி
- லெப்டினன்ட் சீலன்
- 2ம் லெப்டினென்ட் மாலதி
- லெப். செல்லக்கிளி - அம்மான்
- லெப்டினன் கேணல் திலீபன்
- வீரவேங்கை இயல்வாணன்
- லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்
- கப்டன் அறிவு
- கப்டன் திவாகினி
- வீரவேங்கை.ஆனந்
- வீரவேங்கை அன்பழகன்
- வீரவேங்கை சுயந்தன்
- வீரவேங்கை நிதி
- லெப்டினன்ட் மலரவன்
- கப்டன். லிங்கம்
- கேணல். ரமணன்
- கேணல். ரமணன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- கடற்கரும்புலி மேஜர் நித்தியா
- லெப்.கேணல் கௌசல்யன்
- லெப்.கேணல் கௌசல்யன்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்
- தியாகி அன்னை பூபதி
- தியாகி அன்னை பூபதி
- லெப்.கேணல் விக்டர்
- லெப்.கேணல் விக்டர்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் சார்ள்ஸ்
- கேணல் ராயு
- கேணல் ராயு
- லெப் கேணல் நிறோஜன்
- லெப் கேணல் நிறோஜன்
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தமிழ்த்தேசிய மரம் வாகை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசிய விலங்கு சிறுத்தை
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பறவை செண்பகம்
- தேசியப் பூ காந்தாள்
- தேசியப் பூ காந்தாள்
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் அக்காச்சி
- கப்டன் ஈழமாறன்
- கப்டன் ஈழமாறன்
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் அப்பையா அண்ணை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் பாமா/கோதை
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் ஜீவன்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் மனோஜ்
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா
- கரும்புலி மேஜர் சிறிவாணி
- மேஜர் சோதியா
- கரும்புலி மேஜர் டாம்போ
- மேஜர் தங்கேஸ்
- மேஜர் நாயகன்
- வீரவேங்கை பகீன்
- மேஜர் மாதவன்
- லெப்டினன்ட் பாவலன்
- 2ம் லெப்டினன்ட் பூபாலினி
- லெப்.கேணல் ஜொனி
- லெப். கேணல் ரவி
- மேஜர் வெற்றியரசன்
- கடற்கரும்புலி மேஜர் சந்தனா
- கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
- லெப்.கேணல் மணிவண்ணன்
- மேஜர் இளநிலவன்
- கரும்புலி மேஜர் தனுசன்
- மேஜர் மில்ரன்
- லெப்டினன்ட் கேணல் குமுதன்
- கரும்புலி லெப்டினன்ட் கேணல் பூட்டோ/சங்கர்
- லெப்டினன்ட் கேணல் அக்பர்
- கரும்புலி மேஜர் ஆந்திரா
- லெப்.கேணல் கலையழகன்
- லெப்.கேணல் நிலவன்
- மேஜர் பசிலன்
- முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி
- லெப்.கேணல் அருணா-அருணன்
- கப்டன் மயூரன்
-
▼
August
(122)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment