இந்திய தமிழீழப்போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப்புலிப் போராளி வீரச்சாவு அடைந்த நாளான ~கார்த்திகை 27~ஐ ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போது, 'எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள்.
இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டா1டுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே ~மாவீரர் நாள்~ ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோhம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த ~சங்கரின்~ நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர் களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம்.
அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்களை புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.
Tuesday, November 25, 2008
மாவீரர் நாள் (கார்த்திகை 27)
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
November
(50)
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 ஒலி வடிவில்
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்
- உள்ளிருந்து ஒரு குரல் 4
- போர்முகம் 1
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008
- வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்
- தமிழீழப் போர் 3
- இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்
- காந்தரூபன் அறிவுச்சோலை
- தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்...
- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
- தமிழீழ சட்டக் கல்லூரி
- புலிகளின் குரல் வானொலிச் சேவை
- விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
- தமிழீழ காவற்துறை
- செஞ்சோலை சிறுவர் இல்லம்
- பங்குனி 8 பெண்கள் தினம்
- தமிழீழ படைத்துறைப் பள்ளி
- கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
- விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
- சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை
- தமிழீழப் போர் 2
- மாவீரர் நாள் (கார்த்திகை 27)
- அன்னை பூபதி தியாகச் சாவு
- இந்திய தமிழீழப் போர்
- தமிழீழத் தேசியத் தலைவர்
- 12 போராளிகள் வீரமரணம்
- திலீபனின் தியாகச்சாவு
- சுதுமலைப் பிரகடனம்
- இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
- தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
- தமிழீழம் திரும்புதல்
- பெங்களுர் மாநாடு
- சாகும்வரையிலான உண்ணாவிரதம்
- திம்புப் பேச்சுவார்த்தை
- இந்தியத் தலையீடு
- தமிழீழப் போர் 1
- சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
- ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
- தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பி...
- கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி
- நினைவு சுமந்த கதை
- மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன்
- லெப்.கேணல் தேவன்
-
▼
November
(50)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment