மூன்றாம் கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும் கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும் தரைத்தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற ரீதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன.
இறுதியில் யாழ்.குடாநாட்டிற்கான விநியோகத்தை மட்டுப்படுத்தும் அளவில் வட-கிழக்குக் கடற்பிராந்தியத்தில் கடற்புலிகளின் கைமேலோங்கியதாக இருந்தது. இது யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரை அச்சம் ஊட்டும் வகையில் காணப்பட்டது. இவ் அச்சுறுத்தல் பற்றி இராணுவ ஆய்வாளர்களால் வெளிப்படையாகப் பிரஸ்தாபிக்கவும்பட்டது.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் இராணுவமும் கடற்படையும் முனைப்பாகப் பயன்படுத்தப்பட்டது போன்று விமானப்படையும் முனைப்பாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு வகையிற் பார்த்தால் மற்றைய இரு படைப்பிரிவுகளையும் விட விமானப்படைக்கு முதன்மை அளிக்கப்பட்டது என்றே கூறலாம். இக்காலப்பகுதியிலேயே கிபீர் மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் பயன்பாட்டுக்கு வந்ததோடு அவை போர்க்களத்தில் முக்கிய பங்கும் ஏற்றன.
இதேசமயம் விடுதலைப் புலிகளும் விமான எதிர்ப்புச் சாதனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக சிறீலங்கா விமானப்படை பல தாக்குதல் வான் கலங்களை இழக்க வேண்டி வந்தது. ஏனைய ஆயுதப் படையினர் போன்றே விமானப் படையும் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தது. இவ் விழப்பானது ஒரு கட்டத்தில் விமானப் படையைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது.
இந்த வகையில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப் படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில் இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.
இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வொன்று காணப்படும் என்ற ரீதியில் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி சந்திரிகாவும் அவரது பொ. ஐ. முன்னணியும் விடுதலைப் புலிகளுடனான மோதல் தொடங்கியதும் தமது நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஒன்றைச் செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதே அவர்களின் இந்நிலைப்பாட்டு மாற்றமாகும்.
இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குத் தத்துவார்த்த விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதுவே 'சமாதானத்துக்கான யுத்தம்' என்ற ஜனாதிபதி சந்திரிகாவின் பிரசித்தமான கோட்பாடாகும். இக்கோட்பாட்டுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முனைப்புப்படுத்திய சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் வரை அவர்களுடன் பேச்சு வார்த்தை என்பதற்கு இடமில்லை எனவும் பிரகடனம் செய்தது.
ஆயினும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற தனது நிலைப்பாட்டிற்கு எதிராக எழக்கூடிய உள்நாட்டு வெளிநாட்டு அபிப்பிராயங்களை மழுங்கடிக்கும் வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பும் அரச தரப்பால் அடிக்கடி வெளியிடப்படும் ஒன்றாக இருந்தது. இந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி என்ற ரீதியில் 1995 ஆகஸ்டில் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்று அன்றைய நீதி அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களினால் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. ஆனால் இவ அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட்டதாக இல்லை.
இவ்வாறு கசியவிடப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது பௌத்த அமைப்புக்களினதும் பௌத்த-சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் பேரினவாத ஊடகங்களின் கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியது. பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தரப்பும் அவற்றை ஏற்றுக்கொண்டாற்போல் அறிவிப்புக்களை வெளியிட அத்திட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் ஆகியது.
அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.
அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.
இதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கமோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தில் உறுதியானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இந்த வகையில் புலிகளின் நிலைப்பாட்டில் சில அம்சங்கள் முக்கிய இடம்பிடித்தன.
1. இராணுவ ரீதியான அழுத்தங்களுடன் கூடிய நிலையில் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகப் போவதில்லை.
2. சர்வதேசத்தின் மத்தியஸ்த்துவத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளே அரசியல் தீர்வுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும்.
3. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அரசியல் தீர்வொன்றைக் காணவும் எவ வேளையிலும் தயாராகவே உள்ளது.
ஆனால் மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இடைப்பட்ட காலத்திலும் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு சர்வதேச மத்தியஸ்துவம் என்பன குறித்துப் பேசியவை யாவும் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்ற நிலையிலேயே சிறீலங்கா ஆட்சியாளர்களினால் விமர்சனம் செய்யப்பட்டன. உலக நாடுகள் சிலவும் இதை மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதான சிறீலங்காவின் முயற்சிகளுக்கு உதவியும் வழங்கி வந்தது.
இதன் காரணமாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் என்பதும் அரசியல் தீர்வென்பதும் கிடப்பில் போடப்பட்ட தொன்றாகியிருந்தன. ஆனால் 'ஜயசிக்குறு' 'ரணகோஸ' நடவடிக்கைகள் சந்தித்த பெரும் இழப்புக்களும் தடங்கல்களும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்துக்கும் அதன் தலைமைக்கும் இனப்பிரச்சினைக்கன அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தோற்றுவித்தன.இதன் விளைவாகவே புலிகளுடன் பேச்சுவார்த்தை வெளிநாட்டு மத்தியஸ்துவம் என்பனவற்றை நிராகரித்து வந்த சந்திரிகா குமாரதுங்க நோர்வே அரசின் மத்தியஸ்துவத்துக்கு அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே சர்வதேச மத்தியஸ்துவத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராக இருந்தமை காரணமாக நோர்வே அரசின் முயற்சி விரைவாகவே ஆரம்பித்தது.
நோர்வேயின் விசேட தூதுவரான எரிக்சொல்கெய்ம் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகள் தரப்பினரையும் சிறீலங்கா தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தகளை நடாத்தினார் இதன் பிரகாரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை எரிக்சொல்கெய்ம் வன்னியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு சமாதான முயற்சிகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்புகிடைக்கும் எனவும் புலிகளால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சந்திரிகா குமாரதுங்காவோ அன்றி பொ. ஐ. முன்னணி அரசாங்கமோ இச்சமாதான முயற்சிகளுக்குத் தமது மனப்பூர்வமான சம்மதத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. முதலில் சமாதான முயற்சிகள் தொடர்பாக இழுத்தடிப்பைச் செய்த அவர்கள் இறுதியில் எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகளின் சார்பாகச் செயற்படுவதாகக் கூறி நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையைத் தோற்றுவித்தனர்.
அதுமாத்திரமல்ல விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அறிவிப்புச் செய்திருந்த நான்கு மாதகால ஒருதலைப்பட்சமான போர் ஓய்வையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். யாழ்.குடாநாட்டில் சில பகுதிகளை மீள ஆக்கிரமித்துக் கொண்ட அதேவேளை பாரிய படை நடவடிக்கைக்கும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய நிலையில் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் ஒரே குறிக்கோள் விடுதலைப் புலிகளிடம் இழந்துவிட்ட ஆனையிறவுப் பிரதேசத்தை எவ வாறேனும் மீட்டெடுத்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதன் காரணமாக நோர்வேயின் சமரச முயற்சிகள் கூட இரண்டாம் பட்சமானவையாகப் புறம் தள்ளப்பட்டன.
ஆயினும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம் முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால் மீண்டும் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசத் தொடங்கியது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பெறப்பட்ட அதிகாரப் பரவலாக்கற் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு விவாதத்துக்கான நாளை ஒதுக்கீடும் செய்தது. பெரும் சவால்களைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை உறுதியானதொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
ஆனால் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவுற்றுப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால் இவ வதிகாரப் பரவலாக்கற் திட்டமும் அர்த்தமற்றதாகியது. இதுகூட தேர்தலை இலக்குக் கொண்டே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருப்பினும் அவ வதிகாரப் பரவலாக்கற் திட்டத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனத்துரோகத் தலைமையை உருவாக்கும் சந்திரிகாவின் அரசியல் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பொ. ஐ. முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எத்தகைய முனைப்புக் காட்டியதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் சித்தரிக்க முனைந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் இதனையே வெளிவிவகார அமைச்சின் முக்கிய இராஜதந்திரபணி ஆக்கியது.
சந்திரிகா குமாரதுங்காவின் இத்திட்டத்துக்கு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். மேற்கு நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதுவராலயங்களின் முழுநேரப் பணியாக இப்பிரச்சார நடவடிக்கை அமைந்திருந்தது. லக்ஸ்மன் கதிர்காமரின் பல நாட்கள் இப்பிரச்சாரத்துக்கென வெளிநாடுகளிலேயே கழிந்தன. ஒருவகையிற் பார்த்தால் இம்முயற்சியில் கதிர்காமரும் சந்திரிகா குமாரதுங்கவும் ஓரளவு வெற்றி பெற்றனர் என்றே கூறலாம். அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இவ வெற்றி பெறப்பட்டது. இது சந்திரிகா அரசின் மிகப்பெரும் இராஜதந்திர வெற்றியாகவும் சித்தரிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை சிறீலங்கா அரசின் கோரிக்கை காரணமாகவோ அன்றி அழுத்தத்தின் காரணமாகவோ உருவாகவில்லை என்ற இந்நாடுகளின் அறிவிப்புகள் இவ வெற்றி கூட சிறீலங்காவுக்குரியதல்ல என்பதையே வெளிப்படுத்துவதாயிருந்தது.
ஆயினும் சிறீலங்கா அரசுக்கு இத்தடைகள் தெம்பூட்டுபவையாக இருப்பினும்கூட மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருந த நாடுகள் கூட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியமையானது - அரசின் எதிர்பார்க்கைகளுக்கு எல்லையிடுவதாகவே இருந்தது. இந்நிலையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்கா மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தானும் அனுகூலம் அடைவதற்கான நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியது. ஆனால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைப பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அன்றி இந்தியாவோ மாற்றிக்கொள்ளாமை விடுதலைப் புலிகள் மீதான தடைமூலம் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் இராஜதந்திர இராணுவ அனுகூலங்களை ஈட்ட முடியாததொரு நிலையையே ஆட்சியாளர்களுக்கு கொடுத்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையைத் தாங்க முடியாத பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்ப ஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது. இரண டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததுபோல் மூன்றாம் கட்ட ஈழப்போரும் அடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது சிறீலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியைவிட மிக மோசமான அரசியற் பொருளாதார இராணுவ நெருக்கடியை மூன்றாம் ஈழப்போர் முடிவடைந்தபோது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து அதன் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. மறுபுறத்தில் யுத்ததுக்கும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண வேண்டிய அவசியமும் இருந்தது.
இதனை நன்கு புரிந்துகொண்டிருந்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார். அவரின் இவ வுரையில் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை குறித்து பின்வரும் அம்சங்கள் வலியுறுத்துப்பட்டன.
1. இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது.
2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
3.அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வியைத் தழுவித் தலைகுனிய வேண்டி ஏற்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இவ அறிவிப்பானது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இப்பிரச்சினை தீர்வு குறித்து மேற்கொண்ட இராணுவ - அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தும் தோல்வி கண்டுவிட்டன என்பதைத் தெளிவாக அறிவிப்புச் செய்வதாகவும் இருந்தது. அது மாத்திரமல்ல இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதையும் வெளிப்படுத்தியது. சமாதானத்திற்கும் அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்ல என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ ரீதியிலான அடக்கு முறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலிறுத்தியே வந்தார்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்திற்கு இத்தகையதொரு பாரிய தோல்வி பின்னடைவு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் கொடுக்கப்பட்டது என்பதே நிதர்சனமானதாகும். இம்மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் சந்திரிகா குமாரதுங்கா அரசாங்கம் சிறீலங்கா அரசின் அனைத்து வளங்களையும் சக்தியினையும் பயன்படுத்தி மேற்கொண்ட இராணுவ அரசியல் இராஜதந்திர முயற்சிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு வெற்றி பெறப்பட்டன.
Tuesday, November 25, 2008
தமிழீழப் போர் 3
Posted by defencetamil at 1:14 PM
Labels: போராட்ட வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
November
(50)
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 ஒலி வடிவில்
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்
- உள்ளிருந்து ஒரு குரல் 4
- போர்முகம் 1
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008
- வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்
- தமிழீழப் போர் 3
- இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்
- காந்தரூபன் அறிவுச்சோலை
- தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்...
- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
- தமிழீழ சட்டக் கல்லூரி
- புலிகளின் குரல் வானொலிச் சேவை
- விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
- தமிழீழ காவற்துறை
- செஞ்சோலை சிறுவர் இல்லம்
- பங்குனி 8 பெண்கள் தினம்
- தமிழீழ படைத்துறைப் பள்ளி
- கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
- விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
- சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை
- தமிழீழப் போர் 2
- மாவீரர் நாள் (கார்த்திகை 27)
- அன்னை பூபதி தியாகச் சாவு
- இந்திய தமிழீழப் போர்
- தமிழீழத் தேசியத் தலைவர்
- 12 போராளிகள் வீரமரணம்
- திலீபனின் தியாகச்சாவு
- சுதுமலைப் பிரகடனம்
- இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
- தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
- தமிழீழம் திரும்புதல்
- பெங்களுர் மாநாடு
- சாகும்வரையிலான உண்ணாவிரதம்
- திம்புப் பேச்சுவார்த்தை
- இந்தியத் தலையீடு
- தமிழீழப் போர் 1
- சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
- ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
- தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பி...
- கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி
- நினைவு சுமந்த கதை
- மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன்
- லெப்.கேணல் தேவன்
-
▼
November
(50)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment