1987ஐப்பசி 10ம் நாள் இந்திய - தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம். ஐp. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பரத், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் nஐனரல் சுந்தர்ஐp ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராககடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது. 1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.
அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.
யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.
கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது
இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் இராஐPவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின்படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஐPவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.
Tuesday, November 25, 2008
இந்திய தமிழீழப் போர்
Posted by defencetamil at 1:00 PM
Labels: போராட்ட வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2008
(334)
-
▼
November
(50)
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 ஒலி வடிவில்
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்
- உள்ளிருந்து ஒரு குரல் 4
- போர்முகம் 1
- தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008
- வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள்
- தமிழீழப் போர் 3
- இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்
- காந்தரூபன் அறிவுச்சோலை
- தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்...
- தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
- தமிழீழ சட்டக் கல்லூரி
- புலிகளின் குரல் வானொலிச் சேவை
- விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
- தமிழீழ காவற்துறை
- செஞ்சோலை சிறுவர் இல்லம்
- பங்குனி 8 பெண்கள் தினம்
- தமிழீழ படைத்துறைப் பள்ளி
- கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
- விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
- சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை
- தமிழீழப் போர் 2
- மாவீரர் நாள் (கார்த்திகை 27)
- அன்னை பூபதி தியாகச் சாவு
- இந்திய தமிழீழப் போர்
- தமிழீழத் தேசியத் தலைவர்
- 12 போராளிகள் வீரமரணம்
- திலீபனின் தியாகச்சாவு
- சுதுமலைப் பிரகடனம்
- இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்
- தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
- தமிழீழம் திரும்புதல்
- பெங்களுர் மாநாடு
- சாகும்வரையிலான உண்ணாவிரதம்
- திம்புப் பேச்சுவார்த்தை
- இந்தியத் தலையீடு
- தமிழீழப் போர் 1
- சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகள்
- புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
- ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
- தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பி...
- கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி
- நினைவு சுமந்த கதை
- மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன்
- லெப்.கேணல் தேவன்
-
▼
November
(50)
Labels
- 2ம் லெப் (5)
- கடற்கரும்புலி (19)
- கப்டன் (18)
- கரும்புலிகள் (20)
- காணொளிகள் (14)
- கேணல் (11)
- தமிழின உணர்வாளர் (1)
- தமிழீழச் சின்னங்கள் (10)
- தலைவர் (19)
- தலைவர் பிரபாகரன் தொடர் (6)
- தியாகிகள் (7)
- தேசத்தின் குரல் (5)
- நாட்டுப்பற்றாளர் (2)
- நினைவலைகள் (4)
- படைத்துறை (6)
- பண்பாடு (1)
- பாடல் (1)
- பிரிகேடியர் (15)
- போராட்ட வரலாறு (73)
- மாமனிதர் (8)
- மாவீரர் நாள் உரை (12)
- மாவீரர்கள் (198)
- மேஜர் (16)
- லெப் (10)
- லெப்.கேணல் (52)
- வான்கரும்புலிகள் (3)
- விடுதலை தீப்பொறி (2)
- வீரவரலாறு (75)
- வீரவேங்கை (6)
0 comments:
Post a Comment