Tuesday, November 25, 2008

சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை

1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய - சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார்.

சிறீலங்காவின் அழைப்பின் பேரில் அமைதிகாக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிப10சியபடி இந்திய இராணுவம் பங்குனி 1990இல் தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்றது.
இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவ நடவடிக்கைகளாலும், ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுத்தாலும் உருவாக்கப் பட்ட ~தமிழ் தேசிய இராணுவம்~ என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையோர் ஆயதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்தது. இந்திய அரசின் இறுதித்திட்டமும் தவிடுபொடியாகியது.

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இறுதியில் சிங்கள இனவாதத்தின் ஏமாற்று வேலைகளால், விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன. இல்டசிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப் படைவீரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு பேச்சுவார்த்தை உருப்படியான தீர்வுகள் பற்றி ஆராயப்படாது முறிந்து போனது.

0 comments:

Blog Archive