Tuesday, November 25, 2008

இந்தியத் தலையீடு

இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல், இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.
1983 ஆவணியில், இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயதமும்பயிற்சியும் அளித்து ஆயத எதிர்ப்பயிக்கத்தைத் தீவிரமாக்கி, சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது.

அதேநேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்துவிட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து ~தமிழீழ விடுதலை~யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவுந் திட்டமிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்துவந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

மாசி 24, 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.

ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31, 1984 இல் இந்திரா காந்தி தன் மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஐPவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார்.

தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஐPவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராக, சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிநடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஐPவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

0 comments:

Blog Archive