Tuesday, November 25, 2008

அன்னை பூபதி தியாகச் சாவு

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார். அன்னை பூபதி 19.04.1988 இல் 'தியாகச் சாவு' அடைந்தார்.

அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார். 'எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது" என்றார்.

0 comments:

Blog Archive