Tuesday, November 25, 2008

புதிய தமிழ்ப் புலிகள்

இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

சிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முiயில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டது, அதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை" அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர், துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கியது.

0 comments:

Blog Archive