Tuesday, November 25, 2008

தமிழீழத் தேசியத் தலைவர்

'தமிழீழ விடுதலை' என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. 'தமிழீழவிடுதலை' என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை 'தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்' என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.

0 comments:

Blog Archive